31 July, 2011

நல்லதையே செய்வாரு நல்லதம்பி

                                                            ரோட்டுல ஒருத்தரு தடுமாறி விழுந்தாருன்னா
போய் காப்பத்தலாமானு நாம யோசிப்போம். ஆனா அந்த மனுசன் கீழே
விழறதுக்குள்ள எங்கிருந்தோ ஓடி வந்து தாங்கி பிடிக்கிறவரு தான் நம்ம
நல்லதம்பி. ஊருக்கு உழைத்த உத்தமர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்
மாதிரி ஊர்,நாடு என்ற எல்லை இல்லாமல் எங்கு யாருக்கு எந்த உதவி
தேவைபட்டாலும் தானே ஓடிப் போய் உதவி செய்வார் நம்ம நல்லதம்பி.






                                                           பொதுவா மனிதர்கள் பேர் சொல்ற மாதிரி
வரனும்னு  ஆசைபடுவாங்க. ஆனா நம்ம நல்லதம்பி எப்படி வருவார்னு
முன்னாடியே தெரிஞ்சு தான் இந்த பேர் வச்சாங்கன்னு சொன்னா நம்புவீங்களா?
உலகத்தையே காப்பத்தனும்னு நினைக்கிற அவர் பிறக்கும் போது வானம், பூமி
எல்லாம் , எப்பவும் போலதான் இருந்தது !. அவர் பிறவி எடுத்து உலகுக்கு
வந்தவுடன் மனஸ்தாபத்தில இருந்த டாக்டரை ஒரு கையிலும் நர்ஸை ஒரு
கையிலும் பிடித்து ஒன்னு சேர்த்துட்டார். அதை பார்த்து மிரண்டு போன
ஆஸ்பத்திரியே ஒன்னு கூடி அவருக்கு 'நல்லதம்பி' னு பேரை வைச்சுட்டாங்க.

                                                      இதுல என்ன ஒரு ஸ்பெஷல் தெரியுமா? அந்த
நர்ஸோட புருஷன் இன்னும் நல்லதம்பியை தேடிட்டு இருக்காரு. அவர யாரும்
மாட்டி விட்டிராதீங்கப்பா!, நல்லதம்பி இன்னும் நாட்டுக்கு நிறைய நல்லது
செய்ய வேண்டி இருக்கு. இது நாள் வரை அவரு செஞ்ச நல்ல நல்ல 
உதவிகளை அதாவது நல்லதம்பியின் சாதனை சரித்திரங்களை நேரம்
கிடைக்கும் போது உங்களுக்கு சொல்றேன்.


           பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?


மீண்டும் சந்திப்போம்.


2 comments:

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...