கூட்டம் உள்ளது.
'உன் நன்பர்களை பற்றி சொல், உன்னை பற்றி சொல்கிறேன்' என்று ஒருவர்
ஆரம்பித்தால் 'உன்னை பற்றி சொல், உன் நன்பர்களை பற்றி சொல்கிறேன்'
என்று ஒரு குருப்பே கிளம்பி விடுகிறது.
சமீபத்தில் அதை போல் ஒன்று பத்திரிகைகளில் பார்க்க நேர்ந்தது.
இப்ப நாம சகஜமா பார்க்கிற கவிதைங்ற தலைப்பில் வருகிற கவிதை மாதிரி,
வரிசை படுத்தின வரிகள் மாதிரியான பொன்மொழி மாதிரியான ஒன்று.
நான் நுனிப்புல் மேய்பவன் என்பதால் வரிகள் குத்துமதிப்பாக தான் உள்ளது.
'கிளி ஜோஸ்யம் பாருங்கள், கிளிக்கு சிறிது நேரம் விடுதலை கிடைக்க' என்று
ஒருத்தர் எழுத பின்னாடியே ஒருத்தர் ஆனியே பிடுங்கவேணாம்ங்கற மாதிரி
'கிளி ஜோஸ்யமே பார்காதீர்கள், கிளிகள் சுத்ந்திரமாக இருக்கட்டும்' என்று
எழுதியிருந்தார்.
இதை பத்தி மல்லாக்க படுத்துக்கிட்டு Fanஐயே பாத்துக்குட்டு
யோசிச்சுக்கிட்டே ! ! ! இருக்கும்போது மடார் ஒரு விஷயம் தோணுச்சு.
நாம முடிவெடுக்கிற பல விஷயங்களும் இப்படி தான் இருக்குது. பேயை
பாத்தாச்சு, இப்ப பிசாசை பாப்போம் என்றோ, இருக்கிறதுல யார் கொஞ்சமா
கொள்ளையடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று பலர்
கிளம்பினால், யாரும் வேணாம் '49 O' போடுகிறேன் என்று சிலர் கிளம்புகிறாங்க.
இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 'சிலர்' 'பலர்' ஆவது நல்லது போல் தோண்றது.
முழுசும் படிச்சு முடிச்சீங்கனா ஏதாவது சொல்லிட்டு போங்க.
மீண்டும் சந்திப்போம்.
'சிலர்' பலர் ஆனால் பரவாயில்லை. 'சிலர்' பவர் ஆகாமல் இருந்தால் இருந்தால் சரி.
ReplyDelete