29 September, 2012

கூ தூ கா நல்லது

தலைப்பு புரிகிறதா?, தவறு ஒன்றும் இல்லை. சுத்தத் தமிழில் கூறியுள்ளேன். அவ்வளவு தான். ஓர் எழுத்துச் சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. நம்மிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஒரே ஒரு சிக்கல். அவைகளில் பெரும்பாலான சொற்கள் புத்தகத்தில் மட்டுமே உள்ளன புழக்கத்தில் இல்லை. தமிழ் ஒரெழுத்துச் சொற்களை கீழே பட்டியலுட்டுள்ளேன்.
                                                  தமிழ் ஓரெழுத்து சொற்கள்
 
 எட்டு
 ஆ
 பசு
  ஈ
 கொடு, பறக்கும் பூச்சி
  உ
 சிவன்
  ஊ
 தசை, இறைச்சி
  ஏ
 அம்பு
  ஐ
 ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
  ஓ
 வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
  கா
 சோலை, காத்தல்
  கூ
 பூமி, கூவுதல்
  கை
 கரம், உறுப்பு
  கோ
 அரசன், தலைவன், இறைவன்
  சா
 இறப்பு, மரணம், பேய், சாதல்
  சீ
 இகழ்ச்சி, திருமகள்
  சே
 எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு
  சோ
 மதில், அரண்
  தா
 கொடு, கேட்பது
  தீ
 நெருப்பு
  து
 கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
  தூ
 வெண்மை, தூய்மை,
  தே
 நாயகன், தெய்வம்
  தை
 மாதம், தையல்
  நா
 நாக்கு
  நீ
 நின்னை
  நே
அன்பு, நேயம்
  நை
 வருந்து, நைதல்
  நொ
 நொண்டி, துண்பம்
  நோவு
 நோவு, வருத்தம்
  நெள
 மரக்கலம்
  பா
 பாட்டு, நிழல், அழகு
  பூ
 மலர்
  பே
 மேகம், நுரை, அழகு
  பை
 பாம்புப்படம், பசுமை, உறை


 போ
 செல்
 மா
 மாமரம், பெரிய, விலங்கு
 மீ
 உயரம், மேலே, ஆகாயம்
 மு
 மூப்பு
 மூ
 மூன்று
 மே
 மேல், மேன்மை
 மை
 அஞ்சனம், கண்மை, இருள், செம்மறி ஆடு
 மோ
 மோதல், முகர்தல்
 யா
 மரம், அகலம்
 வா
 அழைத்தல்
 வீ
 பூ, அழகு, பறவை
 வை
 வைக்கோல், கூர்மை வைதல், வைத்தல்
 வெள
 கெளவுதல், கொள்ளை அடித்தல்                                                          இப்பொழுது உள்ள SMS மற்றும் Facebook யுகத்தில் ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் ஒரெழுத்து சொற்களாகி விட்டன. உதாரணத்திற்கு C = See, Y = Why, U = You, R = Are, V = We. இன்னும் நிறைய இருக்கிறது. SMS அதிகம் உபயோகிப்பவர்களை கேட்டால் அள்ளி வீசுவார்கள். ஆனால் நாம் நிறைய ஒரெழுத்து சொற்களை கையில் வைத்துக் கொண்டு உபயோகம் செய்யாமல் வைத்திருக்கிறோம். குறைந்த பட்சம் மூன்றுக்கு மூன்று எழுத்துக்களை வீணடிக்காமல் 'மூ' என்றும், நாட்டில் பல அரசியல்வாதிகள்  'வெள'வுகிறார்கள் என்றும் எளிதாக சொல்லலாம்.மீண்டும் சந்திப்போம்.


24 September, 2012

FUNtastic படங்கள்

Gif Images  ஒரு விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள் இவை.

Computer ல் ஒரு மனிதன் சிக்கி விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்


வளைந்து கொடுத்தால் வாழ்க்கைக்கு நல்லது..
   

டீஸல் விற்கிற விலையில் பின்ன எப்படி வண்டி ஓட்டுறது.'சரக்கு'  விமானம் போல


எறும்பு மொய்க்கிற மாதிரி இங்க ஒன்னும் இல்லையே!

சேர்ல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் திமிர்னு சொல்வாங்க, சேரே கால் மேல் கால் போட்டு இருந்தால்?என்ன இது! சின்னப்பிள்ளைத்தனமா வேலை பார்க்கிற இடத்தில விளையாட்டு.


வாழைப்பழ விலையையும் ஏத்திட்டாங்களோ? இந்த திட்டு திட்டுதே!
டீ விற்கிறாங்களாம்!
யார் மேலே கோபமோ!  ' R ' ஐ இந்த அடி அடிக்கிறாரு.


He can walk english, talk english

மீண்டும் சந்திப்போம்.


10 September, 2012

அரசியலுக்கும் இந்தப் புதிருக்கும் சம்பந்தமில்லை

கணக்கு வழக்கில்லாம ஏகப்பட்ட தொழில் செய்து வரும் ஒரு முதலாளிக்கு  திடீர் என்று பெருத்த சந்தேகம் வந்தது. நாம் செய்து வரும் தொழிலில் எது அதிகம் கல்லா கட்டுது அப்படின்னு. கணக்குப் புலின்னு நினைச்சு ஒருத்தர கல்லாவில உட்கார வைச்சா அவரு வாயே திறக்க மாட்டேங்கறாரு. ஆனா அவரு சில Hints மட்டும் கொடுத்தார்.


1) ஆட்டுக்கறி விற்பவர்
2) செல்போன் ரீசார்ஜ் செய்பவர்
3) விளையாட்டு சாமான் விற்பவர்

இந்த மூன்று பேரில் ஒருவருக்கு  தான் அதிகம் வருமானம். 
யார் அதிகம் என்று அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்.

ஒரே ஒரு கண்டிசன் 
மூவரில் ஒருவர் மட்டுமே உண்மை பேசுவார். 
மற்ற இரண்டு பேரும் பொய் பேசுபவர்கள்.முதலாளி மூவரிடமும் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்கள்

ஆட்டுக்கறி விற்பவர்                             -        "நான் இல்லை."

செல்போன் ரீசார்ஜ் செய்பவர்             -        "நான் இல்லை"

விளையாட்டு சாமான் விற்பவர்        -        "செல்போன்  ரீசார்ஜ் செய்பவர்
                                                                                     என்று போட்டுக் கொடுத்தார்"
முதலாளிக்கு குழப்பம்.
இதில் யார் உண்மை பேசுகிறார்கள், 
யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.மீண்டும் சந்திப்போம்.


01 September, 2012

நீ (இளையராஜா) தானே என் பொன்வசந்தம்

 இளையராஜா தலைமுறைகளை தாண்டி நின்று கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மாற்றம் தான். அன்னக்கிளி, பத்ரகாளியில் இருந்த இளையராஜா குரு, பிரியா  படங்களில் இல்லை. அக்னி நட்சத்திரம், காதல் ரோஜாவே படங்களில் வித்தியாசம் காண்பித்த இளையராஜா ஏனோ அதன் பிறகு நீண்ட காலமாக ஓரிடத்தில் நின்று விட்டார். 
இளையராஜாவின் தீவிர ரசிகர்களான மிகப்பெரிய கூட்டம் அவரின் வழக்கமான இசையை ரசித்துக் கொண்டிருந்தாலும், மனதளவில் சின்ன ஏக்கம் இருந்தது (எனக்கு). அதை உடைத்தெறிந்திருக்கிறார் இளையராஜா நீ தானே என் பொன்வசந்தம் படத்தில். புது வித கம்போசிங்கில் தனதே தனதான ஸ்டைலில் ராஜா ராஜா தான் என்பதை நிருபித்திருக்கிறார். 

நீ தானே என் பொன்வசந்தம்.
புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் இளையராஜா.

ஏற்கனவே Youtubeல் ஹிட் அடித்திருந்த சாய்ந்து,சாய்ந்து, என்னோடு வா வா சேர்த்து மொத்தம் 8 பாடல்கள். 
என்னோடு வா வா பாடல்கள் Trailorல் கேட்டவுடன் பிடித்திருந்தாலும் என் Favourite song யுவனின் மற்றொரு பாடலான 'பெண்கள் என்றால்' தான். 
 RAJA ROCKS

கதாநாயகியை தேடிப்போகும் கதாநாயகன் பாடுவதாக வரும்  கார்த்திக்கின் குரலில் 'காற்றைக்கொஞ்சம்' ,மற்றும் 'முதல்முறை'  , 'சற்று முன்பு'  என பாடல்களில் வெரைட்டி காட்டி கலக்கியிருக்கிறார்  ராஜா. இளையராஜா பாடியிருக்கும் 'வானம் மெல்ல' பாடலும் சுகம். 'பிடிக்கல மாமு' பாடலில் (நல்ல வேளை S.N.சுரேந்தர் பாடவில்லை) ராஜா காட்டியிருக்கும் வேகம் மற்றும் ஒரு ஆச்சர்யம்.

திருப்தியாக கேட்டு ரசிக்க ஒரு முழு ஆல்பம். 
இளையராஜா மேடையில் பேசியது 
"எட்டு பாடல்களையும் ரெக்கார்ட் செய்தபிறகுதான், என்னால் அந்தமாதிரி செய்யவரும் என்பது எனக்கே தெரியவந்தது. அதுபோல . நிறைய செய்யவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது."

இது போன்ற பாடல்களை கேட்க வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை நிறைய இருக்கிறது. நிறைவேற்றுங்கள் ராஜா

டிஸ்கி
August 20ல் நடந்த இளையராஜாவின் "Be with Me - Maestro"  Programme பற்றி இசைஞானி பக்தன் அருமையாக பதிவிட்டுள்ளார்.  படித்துப்பாருங்கள்


மீண்டும் சந்திப்போம்.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...