28 August, 2011

இளையராஜா நடித்து வந்துள்ள புதிய விளம்பரம்

                                       இசைஞானியின் இசையில் வெளி
வந்துள்ள புதிய மலபார் கோல்டு விளம்பரம். இளையராஜா கம்போஸ்
செய்வது போல் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் பிரமிப்பான இசையுடன்
உள்ளது.

                                                                   சமீப காலமாக இளையராஜாவின் இசை
விட்டதை பிடிப்பது போல் உள்ளது. ஸ்ரீஇராமராஜ்யம் மற்றும் இந்த
விளம்பரம் அதை நிரூபிக்கிறது.   கேட்டு , பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்


27 August, 2011

South America வை ஒன்று சேருங்கள்

                                                                               School ல் படிக்கும் போது Map
நிறைய உபயோகபடுத்தியிருப்போம். அதற்குப் பிறகு Map என்பது டூர்
போனால் தான் ஞாபகம் வரும். இது வரைபடத்தை சார்ந்த South America வை ஒன்று சேர்க்கும் சின்ன Flash game. விளையாடிப் பாருங்கள்.                                                                             South America வில் குறிப்பிட வேண்டிய
விஷயம் வெனிசுலாவில் உள்ள உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சியான
Angel Falls. சுமார் 3200 அடி. கீழே உள்ள படங்களை பாருங்கள். அதன்
பிரமாண்டம் தெரியும்.
டிஸ்கி :

South America வின் வரைபடம்
மீண்டும் சந்திப்போம்


25 August, 2011

கண்ணை கட்டும் படங்கள்

                                                                              நம்ம ஊர் தெருவோரங்களில்
நெஞ்சை பிளக்கும் ஆஞ்சநேயர்,யேசுநாதர் போன்ற படங்களை வரைந்து
சில்லறை வசூல் செய்வதை பார்த்திருக்கலாம். வெளிநாடுகளில் இது
மாதிரி 3D Street Painting என்ற பெயரில் வரையப்படும் ஓவியங்கள் பிரமிப்பை
ஏற்படுத்துகின்றன.


                                                                                   நிஜம் எது, ஓவியம் எங்கு
ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது என கண்டுபிடிக்க முடியாத படி மிக
பிரமாதமாக வரைந்திருக்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம்.

23 August, 2011

Face book ல் போலீஸ்

                                                              சமூக வலை தளங்களின் தலைவனான
Face book உடன் சென்னை போலீஸ் கைகோர்த்துள்ளது.அரசுத்துறை
எல்லாம் Technology உடன் அவ்வப்போது Update செய்து கொள்வது சகஜம்
தான்.ஆனால் தொடர்ந்து செயல் பட வைப்பதில் தான் வெற்றி இருக்கிறது.


                       http://www.facebook.com/chennaitrafficpolice

                                        
                                                                            மேலே உள்ள Link ஐ கிளிக்
செய்தால் சென்னை டிராபிக் போலீஸின் பேஸ்புக் தளத்திற்கு செல்லலாம். சென்னையின் மிக முக்கிய பிரச்சனையான டிராபிக் ஜாமுக்கு ஒரு தீர்வாக
Road Block ஆன பகுதிகள் வெளியிடப்படுகிறது. ( எந்த ரோடு Free ஆ இருக்கு).
ஆக்ஸிடெண்ட், புகார் சம்பந்தமாக நாம் அந்த தளத்தில் தெரிவித்தால்
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுத்துள்ளார்கள்
                                   சீக்கரமே எல்லா ஊருக்கும் கொண்டு வாங்க.                            பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?

மீண்டும் சந்திப்போம்.
 
 

20 August, 2011

குத்தாட்டம் பார்த்தால் படிப்பு வரும்.

                                                 முன்பெல்லாம் கோவில் திருவிழா என்றாலே
பாட்டுக்கச்சேரி, ஆடல் பாடல் என்று ஏரியாவே விடிய,விடிய, களை கட்டும். சமீப  காலத்தில் இதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு. டி.வி. வந்த பிறகு கச்சேரி
கேட்கும் கூட்டமும் குறைந்து விட்டது. ஆடல், பாடல் கொஞ்சம் அத்து
மீறியும் போய்க்கொண்டிருக்கிறது.                                                    கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) யில்
உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு
அனுமதி கொடுக்க காவல் துறை மறுத்து விட்டதால் கோர்ட்டுக்கு வந்த
வழக்கில் நீதிபதி வித்தியாசமான தீர்ப்பு கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு
ஆகும் செலவில் (ரூபாய் 20,000) பாதியை அந்த ஊரில் உள்ள பள்ளிக்கு
செலவு செய்து விட்டு நிகழ்ச்சி நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.

                                                  ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏன் காவல்துறை மறுத்தது.
பள்ளிக்கு செலவு செய்தால் பிரச்சனை தீர்ந்து விடுமா? என்பதெல்லாம் நமக்கு
தேவையில்லாத விஷயம். இதை பார்த்து பணம் படைத்த கோவில்  நிர்வாகங்கள் அவர்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கு கொஞ்சம் செலவு செய்தால் கூட நாட்டில் பல பள்ளிகளுக்கு ஒழுகாத கூரை கிடைக்கும்.


                                                 சரஸ்வதியும் சாமி தானப்பா


                            பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?
மீண்டும் சந்திப்போம்.

18 August, 2011

பட்டைய கிளப்பும் இளையராஜா

                                                                        புராணகால படமாக இராமாயணத்தின்
பின்பகுதியை அதாவது இராவணனை கொன்ற பிறகு உள்ள கதையை
ஸ்ரீ ராமராஜ்யம் என்ற பெயரில் தெலுங்கில் படமாக்கியுள்ளனர். இசை :
இளையராஜா. இது பாலகிருஷ்ணாவின் கனவு படமாம்.இராமாயணம்
தெலுங்கு மக்களிடம் இரண்டற கலந்த விஷயம். எடுத்துக்கொண்டே
இருப்பார்கள்

                                                      
              
                                                          இளையராஜா   படத்திற்க்கு 15 பாடல்களை
அள்ளிக் கொடுத்துள்ளார்.  பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் பாடல்களை பாடியவர்கள்
S.P.B., சித்ரா  என்று எல்லாம் அருமையான, கேட்டு ரொம்ப நாளான Singers.                                                          

                                                                     படம் ஆரம்பிக்கும் போதே சர்ச்சையுடன் தான் ஆரம்பித்தார்கள். காரணம் நயன் தாரா. சீதை கேரக்டரில் இவரா என கொதித்தனர் ஒரு பிரிவினர். மற்ற நடிகைகள் எல்லாம் சீதைக்கு இணையாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. நயன் தாரா  இந்த
படத்துடன் திரையுலகை விட்டு விலகுவதாக பத்திரிகைகளில் வந்திருந்தது.
நயன் தாராவின் முதல் படமும் இளையராஜாவின் இசை தான்.
'மனசினக்கரே'  (2003) மலையாள திரைப்படம்.  'மரக்குடையாள்',
'மெல்ல ஒன்னு' பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?
                                                                Fast Beat மட்டுமே கேட்பேன் என்பவரா நீங்கள்.
மங்காத்தா பக்கம் போய் விடுங்கள். இது இளையராஜா ரசிகர்களுக்கான இசை.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது இளையராஜா பேசியது
"இசையை விளக்குவது கஷ்டம். அனுபவிப்பது ஆனந்தம்."
எனவே அனுபவியுங்கள்.


                           பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?
மீண்டும் சந்திப்போம்.

ரஜினி பேச்சை கேட்க மறுத்த பிரதமர்

                                                                                   தமிழக அரசியலை பொறுத்த வரை
ரஜினியின் வாய்ஸ்க்கு எப்பொழுதுமே மதிப்புண்டு. மாத்தி,மாத்தி பேசினதில
மக்கள் கொஞ்சம் மிரண்டு போயிருந்தாலும் ரஜினியின் வாய்ஸ் என்றுமே
சிங்கத்தின் கர்ஜனை தான்.                                                                                 1996 எலெக்சன் சமயத்தில
தமிழக காங்கிரஸ் தலைமையில் 14 கட்சிகள் சேர்ந்து தனித்து ஆட்சி
அமைக்க முயற்சி செய்த்ததாகவும், அதற்கு ரஜினி தனது முழு ஆதரவை
தர ஒப்புக்கொண்டதாகவும் அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவரும்,
இப்போதைய முன்னாள் தலைவர்களில் ஒருவருமான குமரி ஆனந்தன்
பேசியிருக்கிறார்.                                                                             அப்போது எடுத்த ஒரு கணக்கெடுப்பில்
ரஜினியின் வாய்ஸ்க்கு  56 %  ஆதரவு இருந்ததாகவும், இது விஷயமாய்
ரஜினி 3 தடவை அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் பேசியதாகவும்,
ஆனால் பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை  என்றும் குமரி ஆனந்தன் சொல்லி
யிருக்கிறார். பிரதமர் பேசமாட்டாரு, ரஜினி கேட்க மாட்டாரு. என்ன தான் பேசினாங்களோ?

                                                                             காலில் விழுகாத குறையாய்
பிரதமரிடம் கெஞ்சியும் மனுசன்  காது கொடுத்து கேட்கலை, அப்ப மட்டும் ஒத்துக்கிட்டிருந்தார்னா இந்நேரம் காங்கிரஸ் ஆட்சியில் உட்காந்திருக்கும்னு புலம்பியிருக்கார் குமரி ஆனந்தன். நரசிம்மராவ் இதுவரை செஞ்ச நல்ல
காரியங்களிலேயே (இருக்கா என்ன?),  இது தாம்பா ரொம்ப ரொம்ப நல்ல
காரியம். தமிழக காங்கிரஸ் அலுவலகம் பட்ற பாட்டை தமிழக சட்டசபை
படனுமா! . தாங்காதப்பா தமிழகம்.


14 August, 2011

வளமான இந்தியாவை காண

                                            
                 
                            இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்சுஜாதாவின் சின்னஞ்சிறு கதைகள்

புகழ்

உலகின் மிகவும் பிரபலமானவர்க்குண்டான பிரச்சினைகள் எனக்கு அத்துபடி.
தினமும் ஆட்டோகிராப் வாங்க வரும் கூட்டத்திற்கு அளவில்லை. எனக்கு
ரசிகர்கள் இல்லாத இடமே கிடையாதெனலாம். வயது வித்தியாசம் பாராமல்
அனைவரும் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். எதற்குமே முகம்
சுளிக்காமல் அனைவரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கற்றுக் கொடுத்தார்கள்.

இருப்பினும் புக்ழ்போதை உச்சியிலேறி நான் யார் தெரியுமாவென மமதையுடன் கேட்டதேயில்லை.

அன்றும் வழக்கம் போல் பணிமுடிந்து இல்லம் திரும்பிக்கொண்டிருந்தேன்.
வழியில் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. டிஸ்னிலேண்ட் உடைமாற்றும்
இடத்தில் எனது மிக்கி சீருடை சிரித்துக்கொண்டிருந்தது.

 சிரமம்

அம்மா அடிக்கடி சொல்வாள். சின்ன வயதில் நான் செத்து பிழைத்த கதையை.

சுக்குவான் இருமல், விதவிதமான காய்ச்சலென்று சொல்லிக்கொண்டே போவாள். பார்க்காத வைத்தியமில்லை. நாட்டு வைத்தியரிலிருந்து ஹோமியோபதி, ஆங்கிலம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

நரைபுரை தட்டியபோதும் தன் வேலைகளை தட்டுதடுமாறி தானெ செய்வாள்.
எவ்வளவோ சொல்லியும் கேட்டதேயில்லை. பதிலுக்கு ஏதேனும் செய்ய என்
மனம் பரிதவித்ததுண்டு.

நண்பன் தோளை தட்டியதும் திரும்பினேன். "புண்ணியாத்மா... சிரமம் கொடுக்காம போயிட்டா"

சிரமப்பட்டு ஒரு சொட்டு கண்ணீர் வந்தது.                                      

                                                      விகடனில் வந்த சின்ன சிந்தனைகள் தொடரில்
சுஜாதா எழுதிய 55 வார்த்தைகளில் 2 சிறுகதைகள்


                                    பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?


மீண்டும் சந்திப்போம்.


13 August, 2011

பக்கத்தில் ஒரு நயாகரா

                                                                          பார்க்க, பார்க்க சலிப்பு தட்டாத
விஷயங்களில் அருவியும் ஒன்று. அதிலும் நயாகரா மாதிரி பிரமாண்டமான
நீர்வீழ்ச்சியை பார்ப்பதே சுகம். அப்படி ஒரு நீர்வீழ்ச்சி நமது அண்டை மாநிலம்
கேரளாவில் உள்ளது. தமிழ் சினிமாவிலும் நிறையவே நடித்துள்ளது.

                                                                 

                                                                            கொச்சியிலிருந்து சுமார் 75 கி.மீ.
தூரத்தில் உள்ள சாலக்குடியில் உள்ள இந்த அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியை
வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. போய் பார்த்தால் தான் புரியும். கிட்டத்தட்ட 80 அடி உயரத்திலிருந்து பிரமாண்டமா தண்ணி கொட்டுற அழகை பார்த்துக்கிட்டே இருக்கலாம்.                                                                     
                                                                     கேரளாவிற்கே உரித்தான கிளைமேட்டும், தண்ணியும் ( நல்ல தண்ணியை சொன்னேன்) அதிரம்பள்ளிக்கு போனவுடனே
குஷியாயிடும். இந்த அருவியின் இன்னொரு Special நாம் போய் சேரும் இடமே அருவியின் உச்சி தான்.  குளிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப்பட்டு  தான் இறங்க வேண்டும்.


                        


                                            
                                                               வைரமுத்து சொன்னது போல் 'வீழ்வதில்
அழகு அருவி மட்டும் தான்'   என்பதை அதிரம்பள்ளி போய் பார்த்தால் புரிந்து
கொள்ள்லாம். புன்னகைமன்னன் படத்தில் வரும் 'என்ன சத்தம்' பாடல் எடுத்த
இடம் என்று சொன்னால் எளிதில் விளங்கும். (அவ்வளவு அழகான இடத்தில
எடுக்க வேற சீனே கிடைக்கலயா?) நம்மூரு ஆட்டோவில எழுதியிருக்கிற
மாதிரி அங்க ஒரு போர்டை மாட்டனும்.
                                          "அழகை ரசி,  அடைய நினைக்காதே"
                      பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?மீண்டும் சந்திப்போம்.

11 August, 2011

நல்லதம்பியின் வென்னீர் வைத்தியம்

                                                         நல்லதம்பிக்கு அப்பத்தான் கல்யானம்
முடிஞ்சிருந்தது. மனுசன் தல தீபாவளிக்காக மாமனார் வீட்டில
புது மாப்பிள்ளை முறுக்கோட சுத்திக்கிட்டு இருந்தார். அது பத்தாதுன்னு
மேற்கொண்டு முறுக்கு கொடுக்கனும்னு அவரோட பொண்டாட்டி,
மச்சினி,மாமியார் எல்லோரும் அடுப்படில சுட்டு தள்ளிக்கிட்டு
இருந்தாங்க.

                                                          நல்லதம்பி மாமனார் மாதிரி சுறுசுறுப்பான
ஆள பாக்கவே முடியாது. பக்கத்தில இருக்கிற பேப்பரை எடுக்கிறதுக்கு
கூட பொண்டாட்டிக்கு போன போட்டு வரச்சொல்வாரு. அவரு குளிக்க
போறாருன்னா வென்னீர், டவல், சோப் எல்லாம் ரெடியா இருக்கனும்.
ஆனா இன்னிக்கு அவர சீண்ட கூட ஆளில்லை. மாமனார் பாத்தாரு,
இதுக்கு மேலே பொறுத்துப் பாத்தோம்னா நாம குளிக்கறதுக்குள்ள
பொங்கல் வந்துரும்னு அவரே கோதாவில இறங்கிட்டாரு.
                                                      அவரு வென்னீர் வாளியை அடிபட்ட தவளை
தவ்வி தவ்வி வர்ற மாதிரி தூக்கிட்டு வந்ததில வாளிலிருந்த சுடுதண்ணி
அலம்பி கொஞ்சம் மேலே சிந்திருச்சு. அவரு போட்ட அலறல் சத்தத்தில
வீட்டிலிருந்தவங்க மட்டுமில்லாம, பக்கத்து வீட்டில பலகாரம் சுட்டவங்களும்
ஓடி வந்துட்டாங்க.இந்த நேரத்தில தான் வின்னர் வடிவேலு கண்க்கா
'வந்துட்டேன்' னு குறுக்க பாய்ஞ்சு வந்தாரு நம்ம நல்லதம்பி. மச்சினி
கையில இருந்த மருந்தை பாத்தவரு டென்சனாயிட்டாரு. உடம்பில
சுடுதண்ணி பட்டா முதல்ல என்ன செய்யனும் தெரியுமா? கேட்டுக்க,

                             நம்ம தோல்ல மூனு லேயர்ஸ் இருக்கு.நம்ம 
                             உடம்பில பட்ற சுடுதண்ணி ஒவ்வொரு லேயரையும்
                             காயப்படுத்திக்கிட்டே போகும். மூனாவது லேயரை
                             தாக்கிறப்ப காயத்தோட அளவும் அதிகமாகுது.
                             அதனால சுடுதண்ணி மேலே பட்டவுடன் குளிர்ந்த 
                              நீரை மெல்லிசா மேலே ஊத்தினா காயத்தோட
                              வீரியம் குறையும். மருந்தெல்லாம் அப்புறம் தான்.

                                                                       அப்படின்னு மாமனார் கதற, கதற
லெக்சர் அடிச்சவரு, பச்சைதண்ணிக்கு எங்க போறதுன்னு சுத்தி, சுத்தி
பாத்தாரு, கடைசில மாமனார் சிந்தினது போக மீதமிருந்த வென்னீரை
வாளியோட எடுத்து அவர் மேலேயே ஊத்திட்டாரு. அப்ப அவர் மாமனார்
போட்ட அலறல்ல நாலு Fire Engine வண்டி வீட்டுக்குள்ளேயே வந்திருச்சு.

                                                         அதுக்கப்புறம் மொத்த குடும்பமும் தீபாவளியை ஆஸ்பத்திரில தான் கொண்டாட வேண்டியதா போச்சு. இதுக்கு
நல்லதம்பியை ஏன் திட்டுறீங்க, அவரு மாமனாருக்கு வெந்த புண்ணில
வென்னீரை பாச்சனும்னு இருக்கு, அதுக்கு நல்லதையே நினைக்கும்
நம்ம நல்லதம்பி என்ன பன்னுவாரு பாவம்.


             பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?


மீண்டும் சந்திப்போம்.

                                                              

07 August, 2011

மானிட்டரை சுத்தம் செய்ய எளிய வழி

                                                                     புதுசு புதுசா கண்டுபிடிக்கிறதுக்கு
அடிப்படையான விஷயம் அதீத கற்பனை தான். இந்த மாதிரி
விஷயத்தில இப்பல்லாம் Photo Editing Softwares ரொம்பவே நல்லா
Use ஆகுது.  மனுசப்பசங்க "Monitor" அடிச்சிக்கிட்டே  "Monitor" முன்னாடி
உக்காருவாங்க போல. நல்லா தான் யோசிக்கிறாங்க.                        இனிமே உள்ளாற மழை பெய்தாலும் கவலை இல்லை.

06 August, 2011

காப்பியடித்ததை ஒப்புக்கொண்ட தமிழ் இசையமைப்பாளர்

                                                               
                                                   'இது என் பாட்டு இல்லை' என்று open Statement கொடுத்திருக்கிறார் ஒரு Music Director. யாருன்னு பாக்கிறீங்களா? இந்த மாதிரி Open Talk சொல்ல யாரு இருக்கா நம்ம கங்கை அமரனை விட்டா.  மனுசன் எதையும் சிரிச்சிக்கிட்டே ஜாலியா சொல்லிடுவாரு.
01 August, 2011

Computerized அரசியல் வாதிகள்

                                                               Computer Parts பத்தி ஒரு பதிவும், அரசியல்வாதிகள் பத்தி ஒரு பதிவும் போடலாம்னு சில Photos Collect செய்து வைச்சிருந்தேன். என்ன ஆச்சோ தெரியல, என் Computer குழம்பி போய் போட்டாக்களை எல்லாம் இஷ்டத்துக்கு Mix செய்து வைச்சிருச்சு. 
அதனால இதுக்கெல்லாம் நான் காரணமில்ல. வீட்டுக்கு யாரும் ஆட்டோவை அனுப்பி வைச்சிராதீங்க. நான் எங்க  போனாலும் Share Auto லயே போய்க்கிறேன்.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...