24 July, 2011

போனை வேவு பாக்கனுமா?


                                                 நமது போனில் இருந்து யார் யாருக்கு அழைத்து
இருக்கிறோம்  என்று எப்படி பார்ப்பது  தெரியுமா? போனை வேவு பார்ப்பது எப்படி என்றவுடன் நீரா ராடியா அளவுக்கு எல்லாம் யோசிக்க வேண்டாம்.

                        இது முழுக்க முழுக்க BSNL வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட
விஷயம்.வேறு யாரும் உள்ளே வந்து பார்க்க கூடாது என்று கடுமையாக எச்சரிக்க படுகிறார்கள். இதுக்கும் மேலே வந்து படிச்சீங்கனா கம்பெனி பொருப்பு இல்ல.




                           BSNL Landline வைத்திருப்பவர்கள் டெலிபோன் பில் வரும் போது
எல்லாம் ஒன்று யோசிப்பார்கள். 'நாம இவ்வளவு பேசின மாதிரி தெரியலயே' அதுக்கு தான் இந்த மேட்டரு.


               மேலே உள்ள Link ல் கிளிக் செய்து பல விஷயங்களை  பார்த்து  கொள்ளலாம்.

BSNL என்றால் கண்டிசன் இல்லாமல் இருக்குமா?


1) கண்டிப்பாக Internet Explorer ல் மட்டுமே வேலை செய்யும்.

2) Password ல் Alphabet மற்றும் Numeric இருக்க வேண்டும்.

                             உள்ளே நுழைந்தவுடன் User ID மற்றும் Password கேட்கும் 
நீங்கள் BSNL Broadband வாங்கியிருந்தால் அப்பொழுது கொடுத்த User ID 
மற்றும் Password ஐ பயன்படுத்தி உள் செல்லலாம். Login செய்து உள்ளே சென்றவுடன் வரும் பக்கத்தில் 



             HOME / SERVICE என்ற Tab ல் (Image ல்  சிகப்பு கலரில் Mark  செய்துள்ளேன்) Service Option ஐ செலக்ட் செய்யவும். 


              Sevice Menu பக்கத்தின் கடைசியில் 'Check My Call Details' (Blue கலரில் 
Mark செய்துள்ளேன்) இருக்கும். அதற்கு மேலே 'Check My Broadband Unbilled
Usage Details" (Red கலரில் Mark செய்துள்ளேன்) இருக்கும். இதை Select செய்தால் Current Month க்கான Usage Details ஐ பார்த்து கொள்ளலாம்.
                          'Check My Call Details' கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில்
நாம் பார்க்க விரும்பும் போன் நம்பர்,மாதம், தேதி போன்ற விபரங்கள்
கொடுத்தவுடன் நாம் எந்த நம்பருக்கு எந்த தேதியில் எவ்வளவு நேரம் பேசினோம் என்ற அனைத்து விபரமும் கிடைக்கிறது. அப்பப்ப Check செஞ்சுக்குங்க.

                       இது தவிர Mobile ல் 'BBU' என்று டைப் செய்து Space விட்டு STD Code Phone Number  டைப் செய்து Message  அனுப்பினாலும் BSNL Broadband Usage தெரிந்து கொள்ளலாம்

           From BSNL Mobile -  52295
           From Other Mobile  -  94480 77777

கிளம்புறதுக்கு முன்னாடி ஓட்டு, பதில்  
எதையாவது போட்டுட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.






3 comments:

  1. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. என்ணுடைய id password தெரியாது எப்படி பெறுவது?

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...