28 March, 2011

parvayil padatha padal 2

பார்வையில் படாத பாடல் 2

இந்த முறை அலைகள் ஒய்வதில்லை படத்தில்
இடம் பெற்ற புத்தம்புது காலை பாடலை பார்க்கலாம்.ஆயிரம் தாமரை
மொட்டுக்களே மற்றும் காதல் ஓவியம் பாடல்கள் அளவுக்கு இந்த பாடல்
ஹிட் ஆகாததிற்கு காரணம் படத்தில் இடம் பெறாததே.

இளையராஜாவிற்கு ஒரு பாடல் மிகவும் பிடித்து போய் விட்டால் மீண்டும் உபயோகம் செய்வார். 'சந்தத்தில் பாடாத
கவிதை' பாடலை கிட்டத்தட்ட 7 முறை பயன்படுத்தி உள்ளார்.இந்த
பாடலையும் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெறாத காரணத்தினாலோ என்னமோ, மறுபடியும் ஆப்பிரிக்காவில் அப்பு என்ற
படத்தில் 'சின்னஞ்சிறு யானை' என்று இசையமைத்தார். அது படம்
வெளிவந்ததும் யாருக்கும் தெரியவில்லை, அந்த பாடலும் பெரிய அளவில் பேசபடவில்லை. இணையத்திலும் காணக்கிடைக்கவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹிந்தியில் 'பா'
படத்திற்காக 'ஹல் கே சே போலே' (அப்படித்தானே!) என்று இசை
அமைத்தார். மிக நன்றாக வந்திருந்தது. எனினும் முதலில் வந்த 'புத்தம் புது காலை' பாடல் வரிகள்,குரல் கம்போசிங் என அனைத்திலும் சிறப்பாக
இருந்தது. அந்த பாடலை இயற்கை காட்சிகளுடன் சேர்த்து செய்த வீடியோவை காண






மீணடும் சந்திப்போம்.


18 March, 2011

அழகர்சாமியின் குதிரை இசை

                              அழகர்சாமியின் குதிரை இசை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
 ASK170311_177
தற்போது எல்லாம் இளையராஜாவின் இசையில் வரும் படங்களில் இளையராஜாவை தவிர மற்ற யார் பேரும் தெரிவதில்லை.
எந்த கணக்கில் படம் தேர்ந்தெடுக்கிறார் என்றே
தெரியவில்லை.  இந்த படத்தை பொருத்தவரை கவுதம்மேனன் தயாரிப்பில்,சுசீந்திரன் இயக்கத்தில் சிறு எதிர்பார்ப்புடன் வந்துள்ளது.
படத்தில் மூண்றே பாடல்கள். மீதியை Re-recording ல் பார்த்து கொள்ளலாம் என்று நினனத்து விட்டார் போலும்.  பாடல்கள் திருப்தியாக உள்ளது.

முதல் பாடல்
J.ஃப்ரான்சிஸ் கிருபா வரிகளில் இளையராஜா பாடியுள்ள ‘ குதிக்கிற குதிக்கிற’  பாடல்
Azhagar Samiyin Kuthirai Songs


அப்புக்குட்டி Hero  என்பதால் குரலிலும் நிறையவே மெனக்கட்டிருக்கிறார். கேட்க இனிமையாக உள்ளது.

இரண்டாவது பாடல்
சினேகன் வரிகளில் தஞ்சை செல்வி,சினேகன் மற்றும் ஒரு கும்பலே பாடியுள்ள பாடல்.
ASK170311_164
ஏற்கனவே கேட்ட பாடல் போலவே ஆரம்பிக்கும் இந்த பாடல் பல தாளங்களில் பயணித்து செல்கிறது. ஈசன் புகழ் தஞ்சை செல்வியின்
குரலில் உள்ள மெல்லிய சோகம் ‘ஜில்லா விட்டு’  பாடலுக்கு பலம் சேர்த்தது. ஆனால் இந்த பாடலுக்கு வித்தியாசத்தை மட்டுமே கொடுத்துள்ளது.

மூண்றாவது பாடல்
யுகபாரதியின் வரிகளில் கார்த்திக்,ஸ்ரேயா கோஸல் பாடியுள்ள பாடல்.
Azhagarsamiyin-Kuthirai-Tamil-Movie-Stills-10
இந்த படத்தில் மட்டும் அல்ல சமீபத்தில் வந்த பாடல்களில் மிக இனிமையான பாடல். இவ்வளவு நல்ல Melody யை கேட்டு ரொம்பவே நாட்களாகி விட்டது.  ஸ்ரேயா கோஸல் குரலின் உள்ள இனிமை பாடலுக்கு பலம்.  கார்த்திக் எந்த பாடலையும் கெடுக்காமல் பாடினாலும் மெருகேற்றுவதில்லை.
பல்லவியில் வரும் ”தீராததே ஆசை”  வரிகளை ஹரிஹரன் குரலில் கேட்டால் நிச்சயம் உருக்கியிருக்கும். மற்றபடி குறையென்றால்
பூ, காத்து, மான், மயில் என மெட்டை நிரப்பினால் போதும் என்ற அளவில் எழுதப்பட்ட பாடல் வரிகள்.

மொத்தத்தில் இனிமையான பாடல்கள்.

இனிமேலாவது நல்ல கதைகளம், இயக்குநர் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து இசை அமைத்தால் சரி.

தொடரட்டும் இசை ராஜாங்கம்.

மீண்டும் சந்திப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...