27 December, 2011

கலைஞரின் சின்ன சின்ன மலர்கள்

                                        அரசியல் ரீதியாக  கலைஞரை விமர்சிப்பவர்கள் கூட  இலக்கியம் என்று வரும் போது  கலைஞரை பாராட்டாமல் இருக்க முடியாது. சிறந்த இலக்கியவாதியாக பல ஆண்டுகளாக வலம் வரும் கலைஞர் கருணாநிதி முரசொலி பொன்விழாவை ஓட்டி தினமும் தன் கருத்துக்களை 'சின்ன சின்ன மலர்கள்' என்ற பெயரில் எழுதி வந்தார்.  அதில் சில மலர்கள்.







                            " அளந்து பேசு ;
                              அதற்காக அளக்காதே!
                              நினைத்துப்பேசு ;
                              ஆனால் நினைத்ததையெல்லாம் பேசாதே! "



                           "  அரங்கேற்றத்திலே மேதையாக யாரும்
                               திகழ்ந்து விட முடியாது ;
                              ஆனால்
                              அரங்கேற்றத்திலேயே " இவர்கள் மேதையாக
                              வருவார்களா ; இல்லையா?  என்பதை அறிய முடியும். "



                           "  அடிமையாக இருப்பவன், தனக்கு கீழே ஓர் 
                              அடிமை இருக்க வேண்டுமென்று கருதினால்
                              உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு
                              உரிமையே கிடையாது "



                          "   தேன்கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான்!
                               காரணம் ;
                               இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்க்குப் 
                               பயன்படுவதில்லை ! "




                          "  புத்தகத்தில் உலகத்தைப் படித்தால்
                             அறிவு செழிக்கும் !
                             உலகத்தையே புத்தகமாக படித்தால்
                            அனுபவம் தழைக்கும் !. "

   


                          "  'நெஞ்சு பொறுக்குதில்லையே நிலைகெட்ட
                              மனிதரை நினைத்து விட்டால் ' என்றான் பாரதி!
                              என் செய்வது ;
                              நெஞ்சே இருப்பதில்லையே நிலைகெட்ட 
                              மனிதர்களுக்கு !. "




                          "  ஒருவர் எத்தனை ஆண்டு வாழ்கிறார் என்பதை
                              அவர் இறந்து போன நாளில் இருந்து கணக்கிட்டு
                              தெரிந்து கொள்ளலாம். "




                           "  மனசாட்சி உறங்கும் போது தான்
                              மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. "    









மீண்டும் சந்திப்போம்.


22 December, 2011

உயிரை கொடுத்து போராடாதீர்கள்



                                 தமிழகத்தில் சமீபகாலமாக போராட்டங்கள் பல்வேறு ரூபங்களில் தொடந்து வந்து கொண்டே இருக்கிறது.ஆனால் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் சிலர் தீக்குளித்தோ, அல்லது வேறு முறையிலோ தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. உயிரின் மதிப்பு சாதாரண மனிதர்களை விட உயிரை துணிந்து போராட்டத்தில் இறங்குபவர்களுக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். 
  


                                              உயிரைக் கொடுத்து போராட வேண்டும் என்று சொல்வது போராட்டத்தின் இறுதி எல்லையை குறிப்பிட தானே தவிர எல்லை மீறுவதற்கு அல்ல!.  அந்த எல்லையையும் தாண்ட துணிந்தவர்கள்  உயிருடன் இருந்திருந்தால்  அந்த போராட்டத்தையும் வென்று , அடுத்த போராட்டத்திற்கும் தலைமை ஏற்றிருப்பார்கள். உயிரை விட மேலாக சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களே ! , நீங்கள் இந்த நாட்டிற்கு அஸ்திவாரம் போன்றவர்கள்.மக்கள் கவனத்தை போராட்டத்தின் பக்கம் திருப்பவோ, போராட்டத்தை வெல்லவோ பல வழிகள் இருக்கின்றன. மேலும் தற்கொலைகளால் எந்தப்போராட்டமும் வென்றதில்லை, இருந்து போராடியவர்கள் தான் வென்று தந்து இருக்கிறார்கள்.



                                                   தாங்கள் சார்ந்த கட்சிக்காக, அல்லது இயக்கத்திற்காக என்று நாம் பல தற்கொலைகளை பார்த்திருக்கிறோம். தற்கொலை எந்த காரணத்திறகாக இருந்தாலும் அது கோழைத்தனம் தான். போராட்டக்காரர்களுக்கு அது அழகல்ல. ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த தலைவனும் இது வரை தங்கள் போராட்டத்திற்காக தற்கொலை செய்து கொண்டதில்லை.   அப்படியானால் போராட்டத்திற்காக உயிரையே கொடுத்தவர்களின் உயிருக்கு மதிப்பில்லையா?. இருக்கிறது. நிறைய மதிப்பிருக்கிறது. அதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.



                                                   தற்கொலை செய்து கொண்டவர்களை தியாகி ஆக்கும் போது அது போல் நொறுங்கி கிடக்கும் மேலும் சில நெஞ்சங்களுக்குள் சிறு பொறியை ஊதி விடுகிறோம் என்று நினைவில் கொள்ளுங்கள்.  ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் நமது போராட்டம் வலுப்பெற்றது என்று சொல்லாமல் நமது போராட்டம் மிகப்பெரிய போராளியை இழந்து தவிக்கிறது என்று இருப்பவர்களுக்கு உணர செய்யுங்கள். தீக்குளித்த அப்பாவி இதயங்களின் சூட்டில் குளிர் காய வேண்டாம். எனவே நன்பர்களே இனி களம், காரணம் எதுவாக இருந்தாலும் 



                                                      இருந்து போராடுங்கள்
                                                      இறந்து போராடாதீர்கள்.




மீண்டும் சந்திப்போம்.

  

15 December, 2011

படமும் செய்தியும்

                                   செம கொத்து படமாக வெளிவந்த 'தீபாவளி' படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான 'போகாதே,போகாதே' பாடலில் லாஜிக்கே இல்லாமல் ஒரு காட்சி வரும். ( ஒரு காட்சி மட்டுமா?).  பெட்ரோல் பங்கில் பாவனா, கூட வந்தவரை விட்டுவிட்டு ஜெயம் ரவியுடன் (ஹெல்மேட் போட்டிருப்பதால்) போவது போல் காட்சி வரும். இது படம்.




                                                      நெல்லையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் இரவு நேரத்தில் பெட்ரோல் போட வந்த இரண்டு வெவ்வேறு தம்பதிகள் கரண்ட் கட் மற்றும் ஒரே பைக், ஒரே ஹெல்மேட் போன்ற காரணத்தால் (நெல்லையில் ஹெல்மேட் போடவில்லை என்றால் பிடிக்கிறார்களா?) ஒரு பெண் மற்றொருவர் பைக்கில் ஏறி போய் விட்டாராம். கணவன் மனைவியை காணவில்லையே என செல்லில் அழைக்க, பிறகு விஷயம் தெரிந்து  அவரவர்கள், அவரவர்களுடன் வீட்டிற்கு போய் இருக்கிறார்கள். என்னத்த சொல்ல, பைக், ஹெல்மேட் எல்லாம் அடையாளம் பார்த்து வைச்சவங்க கொஞ்சம் புருஷனையும் அடையாளம் பார்த்து வைச்சிருக்க்லாம்.  இது செய்தி.




                                           நான் ஒரு நாள் ஒரு கடையில் பர்சேஸ் செய்து கொண்டிருக்கும் போது இப்படித்தான் கொஞ்சம் வயதான தம்பதி பர்சேஸ் செய்து விட்டு கிளம்பும் போது அவரு வாங்கின பொருட்களையெல்லாம் Activa வில் முன்னாடி வைத்து விட்டு 'சரி ஏறு' என்று வண்டியை ஸ்டார்ட் செய்து பேசிக்கொண்டே கிளம்பி விட்டார். இந்தம்மா 'என்னங்க, என்னங்க' என்று சன்னமாய் இரண்டு தடவை கூப்பிட்டு விட்டு பேசாமல் நின்று விட்டார். நான் என்னம்மா? செல்லில் வேணும்னா கூப்பிடுங்க! என்றேன். அதற்கு அந்த அம்மா ரொம்ப கூலாய், அதெல்லாம் வேண்டாம். வீட்டிற்கு போன பிறகு, பின்னாடி நான் இல்லேன்னு தெரிஞ்சவுடன் திரும்பி வந்து கூட்டிக்கொண்டு போய் விடுவார் என்றார். (ரெகுலர் போல) நான் ஷாக்காயிட்டேன். என்னடாது ! , வீட்டிற்கு போய் தான் பார்ப்பாரா?  பேசிக்கிட்டே போற மனுசன் பின்னாடி பதில் வரலேயேன்னு திரும்பி பார்க்க மாட்டாரான்னா? , அந்தம்மா 'நான் எங்க பேசறது, கல்யாணம் ஆனதில இருந்து அவர் தான் பேசிக்கிட்டே இருக்காருங்கறாங்க.  வாயே திறக்காத மனைவின்னா யார் தான் திரும்பி வந்து கூட்டிட்டு போகாம இருப்பாங்க.  அதெல்லாம் கொடுப்பினை சார்.


மீண்டும் சந்திப்போம்.


12 December, 2011

ஸ்டைல் மன்னனின் ஸ்பெசல் படங்கள்

                                                     ரஜினி - மூன்று எழுத்து மந்திரம்.  இது வருடக்கணக்கில் கணக்கில்லாத ரசிகர்களை கட்டி வைத்திருக்கிறது. சிறு வயதில் ஆரம்பித்து என் ரசனைக்கு பிடித்தமான நபர்களாக  இன்று வரை மாறாமல் இருந்து வருபவர்கள் ரஜினியும், இளையராஜாவும் தான். வேகம், ஸ்டைல் இது தான் ஆரம்பத்தில் ரஜினியிடம் என்னை மிகவும் ஈர்த்த விஷயங்கள். என்னை கவர்ந்த சில ரஜினி படங்களின் போட்டோ  ரஜினி பிறந்தநாள் ஸ்பெசலாக. (சில படங்கள் லோடாக கொஞ்சம் லேட்டாகும், ரஜினியின் வேகத்துக்கு இணையம் ஈடு கொடுக்க முடியாதல்லவா !! )




























































சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


மீண்டும் சந்திப்போம்


10 December, 2011

யுவன் ராஜபாட்டை

                                                                                  யூத் ஐகான் என அழைக்கப்படும் யுவன்  சங்கர் ராஜாவின் இசையில் சுசீந்திரனின் இயக்கத்தில்  விக்ரம் நடித்துள்ள
ராஜபாட்டை படத்தின் இசை வெளியாகி உள்ளது. சில சறுக்கல்களுக்கு பிறகு விக்ரம் நம்பும் படம்,  நல்ல படங்கள் வரிசையில்உள்ள வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை மற்றும் இயல்பானகமர்சியல் படமாக வந்து வெற்றி பெற்ற  நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் படம்.



                                           
                                                                   பாடல்களை பொறுத்த வரை 80 களில் வந்த இளையராஜா பாடல்கள் மற்றும் சில ஹிந்தி பாடல்களை கலந்து வழக்கமான யுவன் ஸ்டைலில் கேட்பது போல் உள்ளது. கேட்டவுடன் பிடிக்கிறது. 80 களின்
சாயல் சுசீந்திரன் சாய்ஸ் ஆக கூட இருக்கலாம். (ஏதாவது ஒரு காட்சியில் புரோட்டாவின் விலையில் படம் நடக்கும் கால கட்டத்தை சுட்டிக்காட்டுவார்.)
சிட்டியின் ஹாட் டாபிக்கான நில அபகரிப்பு மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள  படம். விக்ரம் ஜிம் மாஸ்டராக வருகிறார். (பார்த்தாலே தெரிகிறது).




படத்தை பற்றிய சில விபரங்கள்:

நடித்தவர்கள் : விக்ரம், தீக்சா சேத், கே.விஸ்வநாத், ஸ்ரேயா,ரீமாசென்
இயக்கம்          :  சுசீந்திரன்
இசை                 :  யுவன் சங்கர் ராஜா
பாடல்கள்        :  யுகபாரதி





பாடல்கள்:

1) பொடி பையன் போலவே  -  ஹரிசரண்
         (யுவன் படத்தில் தவறாமல் இடம் பெறும் காதல் வயப்பட்ட ஹீரோ
          பாடும்  பாடல்)

2) வில்லாதி வில்லன்             -  மனோ, மாலதி
          (வில்லன் கூடாரத்தில் ஹீரோ மாறு வேடத்தில் பாடும் 80 களின்
            கிளைமாக்ஸை ஞாபகப்படுத்துகிறது, காரணம் மனோவா?)

3) பனியே, பனிப்பூவே             -  ஜாவித் அலி, ரேணுகா
         ( வழக்கமான யுவன் ஸ்வீட் மெலடி)

4) லட்டு,லட்டு 2 லட்டு             -  விக்ரம், சுசீத்ரா,பிரியதிர்ஷனி
         (ஸ்ரேயா,ரீமா சென்,விக்ரம் கூட்டணி பாடல்.  வருது, வருது (தூங்காதே
           தம்பி, தூங்காதே) போல பல பாடல் லேசாக ஞாபகம் வருவதை
           தவிர்க்க முடியவில்லை.)





ரஜினி குடும்ப பாடலான 'Why This கொலவெறி' யை தாண்டி கேட்காது.
ஆனால் அதையும் தாண்டி நிற்கும்.


மீண்டும் சந்திப்போம்.




05 December, 2011

Type ஆன ஓவியங்கள்

                                                                                       ஓவியம் வரைவது என்பது ஒரு
அரிய கலை. என்ன தான் முட்டி மோதி பழகினாலும் இயல்பாய் வரையும்
ஒவியர்களிடம் உள்ள நேர்த்தி போல் நிச்சயம் வராது.ஆனால் இதெல்லாம்
அவ்வை வாக்கின்படி அரிதிலும்,அரிதாக ஆரோக்யமாய் பிறந்தவர்களுக்கு மட்டுமே. மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்வே ஒரு போராட்டமாய்
இருக்கும் போது அவர்களிடமிருந்து வெளிப்படும் படைப்புத்திறன் என்பது
அதிசயப்படவேண்டியது மட்டுமல்ல, போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒன்று
ஆகும். ஏனெனில் அந்த படைப்பில் தெரிவது படைப்பாளியின் திறமை மட்டும்
அல்ல, அவர்களின் அளவிடமுடியாத விடாமுயற்சி. மேலும் அவர்களைப்
போல் உள்ளவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் Practical ஊக்கம்.







                                         


                      






                                                                                மேலே உள்ள படங்கள் அழகாக
வரையப்பட்டுள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது.
ஆனால் ஒரு சின்ன திருத்தம், அவை வரையப்பட்ட ஓவியங்கள் இல்லை.
அடிக்கப்பட்ட ஓவியங்கள் -  டைப் ரைட்டரில். Type writer ல் நாம் தப்பில்லாமல்
டைப் செய்வதையே உலக சாதனையாக நினைத்துக்கொண்டிருக்கும் போது
ஒருவர் அதில் படமே வரைந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்
பாருங்கள். இதைவிட அதிசயம் அவர் Celebral palsy என்னும் நோயால் பாதிக்கப்
பட்டவர். முடக்குவாதம் என்று சொன்னால் எளிதில் விளங்கும். இந்நோய்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்றாட செயல்களே மலையேற்றம் போல்
கடினமான விஷயங்கள். ஒரு பொருளை கையில் எடுக்ககூட நிறைய மெனக்
கெடவேண்டும். சட்டைக்கு பட்டன் போடுவது கூட கஷ்டம். அப்படிப்பட்ட
கடினமான நோயால் பிறப்பிலேயே பாதிக்கப்பட்ட Paul Smith (1921 - 2007) என்னும் 
Philadelphia ல் பிறந்தவர் டைப்ரைட்டரில் வரைந்த ஓவியங்கள் தான் அவை.
11வது வயதில் இருந்து வரைய ஆரம்பித்த அவர் சில படங்களை வரைய
வாரக்கணக்கில் கூட ஆகியிருக்கிறது.  இதற்கு அவர் பெரும்பாலும் பயன்படுத்திய Keys ...  @ # $ % ^  &  *   (  ) _  



அவர் வரைந்த மேலும் சில படங்கள்


















அவரைப்பற்றிய சிறு ஆவணப்படம்






              விடாமுயற்சியும், கடின உழைப்புக்கும் சாட்சி தான் இந்த படங்கள்




மீண்டும் சந்திப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...