25 August, 2012

Catches win the Matches

கிரிக்கெட் விரும்பி பார்க்கும் அனைவரையும் 'அட' போட வைக்கும் விஷயம் ஒன்று உண்டு என்றால் அது கேட்ச் தான். டைவ் அடித்து பிடிக்கும் கேட்சை மறுபடியும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே விக்கெட் விழுந்த பிறகு வரும் விளம்பரங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருத்திருக்கிறேன். அப்படி அட போட வைக்கும் கேட்ச்களின் Gif Images சில. பைல் லோடு ஆக கொஞ்சம் லேட்டாகும்.Second Innings
பிரமாதமான கேட்ச் பிடிக்கும் யுவராஜ்சிங் மீண்டும் பல சாதனைகள் செய்ய வேண்டும்.கிரிக்கெட் விளையாட்டில் இங்கிலாந்தின் கை ஓங்கி இருந்த கால கட்டத்தில் விளையாட்டு வீரர்கள் அவர்கள் போட்டிருந்த டிரஸ் கூட அழுக்காமல் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியா ஓரளவுக்கு பரவாயில்லை. தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் விளையாட வந்த பின் தான் பீல்டிங் தனி கவனம் பெற ஆரம்பித்தது. முக்கியமாக பீல்டிங் மன்னன் ஜாண்டி ரோட்ஸ்.Brawo வின் ரன்னிங் கேட்ச்

தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் போது ஜாண்டி ரோட்ஸ்க்கு மட்டும் 2 கேமராக்கள் தனியாக வைத்தார்கள். ரன் அடிக்கிறாரோ இல்லையோ, எதிரணியின் ரன்னில் குறைந்த பட்சம் 30,40 ரன்களை தடுத்து விடுவார். அவரின் சுறுசுறுப்பு மிகப்பெரிய பலம். பீல்டிங் செய்யும் போது பந்தை பிடித்தவுடன் எழும் அந்த வேகம் யாருக்கும் வராது.


உள்ளே வெளியே

Bichel பந்தை உள்ளே தூக்கி எறிந்து பவுண்டரி லைனுக்கு வெளியே போய் பின் உள்ளே வந்து பிடிக்கும் கேட்ச்.


இந்திய அணியைப் பொருத்த வரை பில்டிங்கில் ஆரம்பத்தில் அசாருதீன் மற்றும் ஜடேஜாவைச் சொல்லலாம். பிறகு ராபின்சிங். (பீல்டிங்கில் தனித்து பாரட்டப்பட்ட முதல் இந்தியர் என்றே சொல்லலாம்). யுவராஜ் சிங், கைப் வருகைக்குப் பிறகு ஓரளவுக்கு இப்பொழுது எல்லா புதிய வீரர்களும் நன்றாகவே பீல்டிங் செய்கிறார்கள்.


பெரிய ஆச்சரியம்
சின்ன நாடான பெர்முடாவின் பெரிய ஸ்பின்னர்(120 kg) Dwayne Leverock சூப்பர் டைவிங் கேட்ச் தான் இந்தியாவுடனான அன்றைய மேட்சின் ஸ்பெசல் 

Third Umpire முறை முதன்முதலில் Test Matchல் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதலில் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டவர் சச்சின் தெண்டுல்கர். (எத்தனை முதல்) 
Styne catch பிடிக்கும் இநத படத்தில் தான் எத்தனை விதமான ரியாக்சன். ரன்னர், பவுலர், பேட்ஸ்மேன் எல்லோரையும் விட அந்த அம்பயர் சூப்பர்..
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாவதற்கு 10 வழிகள் உள்ளன.

  1)   Caught
  2)   Bowled
  3)   Leg Before Wicket
  4)   Hit Wicket
  5)   Timed Out
  6)   Handling the ball
  7)   Obstructing the field
  8)   Hit the ball twice
  9)   Run Out
10)   Stumpedகூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கீழே உள்ள வீடியோவை கவனித்து பார்த்தால் தெரியும். முதலில் செகண்ட் சிலிப்பில் உள்ளவர் பிடித்து பந்து அவரிடமிருந்து நழுவி கீப்பரிடம் சென்று பிறகு அவரும் விட்டு மறுபடி செகண்ட் சிலிப் வீரர் காலில் பட்டு (காலால் தூக்கி விட்டு) கேட்ச் பிடிக்கிறார்.
விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி
 விடாமல் போராடும் பொல்லார்டு. (எத்தனை தடவை)Last but not Least

பீல்டிங் மன்னன் ஜாண்டியின் சூப்பர் கேட்ச்.
மீண்டும் சந்திப்போம்
21 August, 2012

உண்ணாவிரதம் இருந்த குரங்குகள்


ஒரு காட்டில் நிறைய குரங்குகள் கூட்டம் கூட்டமா வாழ்ந்து வந்தது. அந்த காட்டை சிங்கம் ஒன்று ஆட்சி செய்து கொண்டு வந்தது.  அந்த சிங்கம் அநியாயத்துக்கு அந்த காட்டில இருந்த மிருகங்களை டார்ச்சர் செய்து வந்தது. எல்லா மிருகங்களும் கொதித்துப் போய் இருந்தாலும் யாராலும் சிங்கத்தை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியவில்லை.  காட்டில் இருந்த குரங்குகள் எல்லாம் இது விஷயமாக முடிவு எடுக்க ஒரு கூட்டம் கூட்டின.
 அந்த கூட்டத்தில் இருந்த வயதான குரங்கு நம்மால் பெரிய அளவில் போராட முடியாது. அதனால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதம் இருந்து நம்து எதிர்ப்பை தெரிவிப்போம் என்று சொன்னது. எந்த குரங்குக்கும் சாப்பிடாமல் இருந்து பழக்கமில்லை என்றாலும் சிங்கத்திடம் கடிபட்டு சாவதற்கு இந்த டீல் எவ்வளவோ பெட்டர் என்ற முடிவுக்கு வந்தது. 

ஒரு நல்ல நாளாக பார்த்து எல்லா குரங்குகளும் ஓரிடத்தில் ஒன்று கூடி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தன.  அப்போது ஒரு வயதான குரங்கு நாம் எல்லோரும் இப்படி கீழே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பது எனக்கு சரியாகப்படவில்லை என ஆரம்பித்தது. திடீரென்று யானைக்கூட்டம் ஒன்று ஓடி வந்தால் நாம் எல்லோரும் சட்னி ஆகிவிடுவோம். உண்ணாவிரதம் இருப்பதால் டயர்டாக வேறு இருப்போம், சட்டென்று ஓடவும் முடியாது. அதனால் நாம் எல்லோரும் எப்பவும் போல் மரம் மேல் ஏறி உட்கார்ந்து கொள்வோம். அது தான் நமக்கு பாதுகாப்பு என்றது. மற்ற குரங்குகளும் ஆமோதிக்க, எல்லா குரங்குகளும் மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது.
 அடுத்து ஒரு குரங்கு திடீரென்று ஒரு சிறுத்தை மரத்தின் மேல் ஏறி வந்து விட்டால் என்ன செய்வது, நாம் எல்லோரும் நுனி கிளையில் போய் உட்கார்ந்து கொள்ளலாம். மிருகங்கள் வந்தால் அடுத்த மரத்திற்கு தாவி செல்ல வசதியாக இருக்கும் என்றதும், மற்ற குரங்குகளும் அதை ஆமோதித்து நுனி கிளையில் பழங்கள் காய்த்து தொங்கும் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.

இன்னொரு குரங்கு அடுத்த சந்தேகத்தை கிளப்பியது. உண்ணாவிரதம் முடிந்தவுடன் நாம் மிகவும் களைப்பாக இருப்போம். அந்த நேரத்தில் நம்மால் நன்கு பழுத்த பழங்களை தேடி எடுக்க முடியாது. அதனால் நாம் இப்போதே நன்றாக பழுத்த பழங்களை பொறுக்கி எடுத்து கையில் வைத்துக் கொள்வோம். விரதம் முடிந்தவுடன் சாப்பிட வசதியாக இருக்கும் என்றது. மேலும் பழுத்த பழங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உதிர்ந்து கீழே விழுந்து விடலாம் என்று சொல்லவும், உடனே எல்லா குரங்குகளும் நல்ல பழங்களை எடுத்து கையில் வைத்துக் கொண்டது.அடுத்து ஒரு குரங்கு ஆரம்பித்தது. பார்ப்பதற்கு எல்லா பழங்களும் நல்லா இருப்பது போல் தான் இருக்கும், உள்ளே பூச்சி எதுவும்
 கடித்து இருந்தால் நம்க்கு தெரியாது. அதனால் நாம் கையில் வைத்திருக்கும் பழத்தை ஓரே ஒரு தடவை கடித்து மட்டும் பார்த்துக் கொள்வோம். ஆனால் சாப்பிட்டு விடக்கூடாது ஜாக்கிரதை என்றது. எப்படா ! என்று இருந்த எல்லா குரங்குகளும் பழத்தை வாயில் வைத்தவுடன், பழக்கதோஷத்தில் முழுங்கி விட்டன.  உண்ணாவிரதமும் ஆரம்பித்த வேகத்தில் முடிந்து விட்டது.

மீண்டும் சந்திப்போம்.
11 August, 2012

திருடுவது தப்பில்லை

பொதுவாக மக்களுக்காக (!!!)  உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் தான் கொடுப்பார்கள். ஆனால் உத்திரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சிவபால் யாதவ் அரசு அதிகாரிகளிடம் உங்கள் உழைப்புக்கேற்றவாறு கொஞ்சமாக அரசுப்பணத்தை திருடிக்கொள்ளலாம் தப்பில்லை. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு கொள்ளை அடித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.  


பத்திரிக்கைகளும், எதிர்க்கட்சிகளும் கண்டனக்குரல் எழுப்பியதும், முதலில் இது அதிகாரிகளுக்காக நடந்த கூட்டம், மீடியாவிற்கு அனுமதியில்லை என்று சொல்லியிருந்தும் நீங்கள் எப்படி உள்ளே வரலாம் என்று கோபப்பட்டார்.. பிறகு சொன்ன வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று வருத்தப்பட்டார். பிறகு ஏன் தான் நான் என்ன சொன்னாலும் மீடியா பெரிதுபடுத்துகிறதோ? என்று சலித்துக் கொண்டார்.. இவர் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் அபிலேஷ் யாதவின் சித்தப்பா. (சமாஜ் வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவின் தம்பி). 


அப்படின்னா திருட்டுக்கும் கொள்ளைக்கும் என்ன வித்தியாசம். சின்னதா செஞ்சா திருட்டு, பெரிசா செஞ்சா கொள்ளைன்னு எடுத்துக்கிட்டா பெரிய திருட்டை சின்ன கொள்ளைன்னும், சின்ன கொள்ளைய பெரிய திருட்டுன்னு சொல்லலாமா?. ஒரு வேளை சிவபால் யாதவ், அதிகாரிகள் செஞ்சா திருட்டு, அரசியல்வாதிகள் செஞ்சா கொள்ளை என்று நினைத்திருப்பாரோ?. எனக்கு என்னமோ, யாருக்கும் தெரியாம செய்வது திருட்டு, ஆட்களை அடித்துப் போட்டு ரணகளமாய் அள்ளிக்கொண்டு போவது கொள்ளை என்று தோன்றுகிறது. விபரம் தெரிந்தவர்கள் (திருட்டு, கொள்ளையில் இல்லை, தமிழில்) கொஞ்சம் விளக்கமாக சொன்னால் தேவலை.


மீண்டும் சந்திப்போம்.


06 August, 2012

சிரிக்க மட்டும்

a

பீலு     :   எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் தெரியுமா? டைனோசரையெல்லாம் 
                 சுட்டுத் தள்ளியிருக்காரு.

வாலு :   என்னடா சொல்ற, இப்பத்தான் டைனோசரே இல்லையே!

பீலு     :   அதான் சொன்னேனே, 
                 எங்கப்பா டைனோசரையெல்லாம் சுட்டுட்டாருன்னு.
லவ்வர் கேர்ள்  :   நேத்து நம்ம காதலை மெதுவா                                       எங்க   வீட்டுல சொல்லிட்டேன்.


லவ்வர் பாய்      :  அப்படியா, என்ன சொன்னாங்க?


லவ்வர் கேர்ள்   :  மெதுவா சொன்னதால யாருக்கும்
                                    கேட்கல.                                                                                                                                                                 

மனைவி       :  என்னை  நேத்து தூக்கத்தில கண்டபடி திட்டிக்கிட்டு இருந்தீங்க?


கணவன்       :   யார் சொன்னா, நான் தூக்கத்தில இருந்தேன்னு!

                                                                                                                                                               

ஆ..பிசர்                 :   நீங்க தான தமிழ்செல்வன்?

தமிழ்செல்வன்   :   ஆமாங்க.

ஆ..பிசர்                  :  உங்க பேர்ல கணக்கு இருக்கா?

தமிழ்செல்வன்    :   இல்லேங்க! , என் பேர்ல தமிழ் தான்
                                      இருக்கு.


நல்லவர்                 :   உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  
                                        பிடிக்கிறானே?

வல்லவர்                :   உளராதீங்க!, அவனுக்கு முன்னாடியே நான் பிடிக்க 
                                        ஆரம்பிச்சிடேன்.
                                        (cigaratte smoking is injurious to health)
                                        (( ஜோக்கா இருந்தாலும் ரூல்ஸை Follow பண்ணுவோம்ல))

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...