26 July, 2011

சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது

                                          Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற
ஆள பாத்திருக்கீங்களா?  கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற
இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு
நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம
சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.
இத பாருங்க.                                        வில்லன்கள் பாலகிருஷ்ணாவை ஒரு Chair ல  கட்டி போட்டிருக்காங்க.


                                                       அவரோட அண்ணனையும் கட்டி போட்டு அவர்
வயித்தில பயங்கரமான Latest BOMB ஒன்னையும் சேர்த்து கட்டி விட்டிராங்க அந்த பாவிங்க.


                                                                     நம்ம Hero அப்ப தான் கவனிக்கிறாரு, 
கீழே 2 Bullet கிடக்கு. திருட்டு பசங்க துப்பாக்கி இல்லாம குண்டை மட்டும் போட்டுட்டு போயிருக்கானுங்க.


                                             அந்த குண்டை பார்க்கவும் பாலகிருஷ்ணாவுக்கு
பயங்கரமான Idea தோணிருச்சு, அப்படியே சேரோட கீழே விழுந்து குண்டை ஒரு லுக் விடுறாரு.அந்த இடமே கப்படிக்கிற மாதிரி முக்கிக்கிட்டே சேரை இழுத்துக்கிட்டே குண்டு கிட்ட வர்றாரு.                                                                      என்ன செய்ய போராருன்னு தெரியலயே?
டயம் வேற ஆகிக்கிட்டிருக்குனு யோசிக்கிறப்ப குண்டு பக்கத்தில வந்து
அந்த குண்டை வாயில கவ்விராரு.                                                                அந்த  பாமை பார்த்து ஒரு லுக் விடுறாரு பாருங்க.


 
                                                                  இப்ப நான் அந்த பாமை பத்தி சொல்லியே ஆகனும். அது ரொம்ப Latest,  User Friendly வேற. ஆன் செய்ய சிகப்பு பட்டன், ஆப் செய்ய பச்சை பட்டன். குழந்தை கூட Use செய்யலாம்.


                                      இப்ப அவரு Punch Dialog வேற பேசனுமே? பல்லுல
குண்டை வைச்சுக்கிட்டு மனுசன் எப்படி பேசுவாரு.அப்பிடியே பேசினாலும்  தெலுங்குல இல்ல பேசுவாரு, அதனால நானே எழுதுறேன் படிச்சுக்குங்க.


 தோட்டாவை வைச்சு கைத்துப்பாக்கில சுட்டு பாத்திருக்க,
நாட்டு துப்பாக்கில சுட்டு பாத்திருக்க, ஏன் மெசின் கன்ல கூட
சுட்டு பாத்திருக்க, பல்லால கடிச்சுக்கிட்டு பட்டுனு போட்டு
தள்ளரதை பாத்திருக்கியா? காறி துப்பினா 400 மைல் வேகம்டா
பாக்கிறயா? பாக்கிறயா? 

                                                    அப்படியே குண்டை குறி பார்த்து பச்சை  பட்டன் மேலே எறிஞ்சு பாமை Off ஆக்கிறாரு. வில்லன்களுக்கும் சரியான ஆப்பு.                                                           சும்மா கொரியா, ஈரான்னு போகாம இந்த மாதிரி யோசிங்கப்பா. நாங்களும் ஜாலியா பாத்துட்டு வருவோம்ல.


                                                           ஆனா நம்ம விஜய்க்கு இதெல்லாம் மேட்டரே
இல்ல, சும்மா வெறும் வாயாலேயே ஊதி Off பண்ணிருவாரு.கிளம்புறதுக்கு முன்னாடி ஓட்டு, பதில்  
எதையாவது போட்டுட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.

35 comments:

 1. செம காமெடி.. ஒரு விஷயம்.. அந்த தெலுங்கு ஹீரோ பாலக்ருஷ்ணா அப்படின்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 2. இவங்க என்ன சுடுறது நான் சுட்டு இருக்கேன் பாரு அது போல முடியுமா?
  மேலும் விவரங்களுக்கு http://manasaali.blogspot.com/2011/07/blog-post_27.html பார்வையிடவும்.

  ReplyDelete
 3. hero appuram unga mela bullet-i thuppiraporaaru? avar peru balakirhsna NTR magan

  ReplyDelete
 4. @bandhu

  கலவரபட்டதுல பேரை மாத்திட்டேன்
  இப்ப சரி பண்ணிட்டேன்.

  நன்றி

  ReplyDelete
 5. @Anonymous

  இப்ப சரி பண்ணிட்டேன்.

  நன்றி

  ReplyDelete
 6. @MANASAALI

  உங்ககிட்டயெல்லாம் பாலகிருஷ்ணாவை
  தாம்பா அனுப்பனும்.

  ReplyDelete
 7. பாலகிருஷ்ணா மாதிரி வேற எதுனா இருந்தா போடுங்க சார் குருவி , ஊர்காவலன்

  ReplyDelete
 8. நல்ல இருக்கு உன்கள் எழுத்து நடை

  ReplyDelete
 9. ஹா ஹா சூப்பர் பாஸ். பாக்கும் போதே சிரிப்பு தாங்க முடியல.

  ReplyDelete
 10. ஹிஹி ஒரு படத்தை வெற்றி பெற செய்ய எப்பூடி எல்லாம் ஏமாத்த வேண்டி இருக்கு

  ReplyDelete
 11. இந்த மாதிரி டப்பாத்தனமான ஐடியாவை ஒருவன் படமாகவும் எடுக்கிறான் என்றால் அவனை சொ(கொ)ல்லணும்.

  ReplyDelete
 12. @கே. ஆர்.விஜயன்

  டாலிவுட்டுன்னா சும்மாவா!

  அது சரி. உங்க பேருக்கு முன்னாடி
  'புன்னகை அரசன்' பட்டம் போட்டுறலாமா?

  ReplyDelete
 13. ஆனா நம்ம விஜய்க்கு இதெல்லாம் மேட்டரே
  இல்ல, சும்மா வெறும் வாயாலேயே ஊதி Off பண்ணிருவாரு

  mela irukka indha point than , neenga sonna kadhaile irukka periya comedy...!

  ReplyDelete
 14. @SITHIK
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 15. ஹ! ஹா! ஐயோ முடியல! சிரிச்சி..முடிந்சதும் காமென்ட் பன்றன். ஹ! ஹா!

  ReplyDelete
 16. ''அது ரொம்ப Latest, User Friendly வேற. ஆன் செய்ய சிகப்பு பட்டன், ஆப் செய்ய பச்சை பட்டன். குழந்தை கூட Use செய்யலாம்.'' SAMAYA SIRICHEAN NUNGA..,,,,,

  ReplyDelete
 17. @Arun J Prakash

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 18. viraivil viyaj padathil intha seen kattayam varum.

  ReplyDelete
 19. // ஆனா நம்ம விஜய்க்கு இதெல்லாம் மேட்டரே
  இல்ல, சும்மா வெறும் வாயாலேயே ஊதி Off பண்ணிருவாரு.//

  அவரு மேம்பாலத்துல இருந்து ஓடுற ரயிலுக்குள்ள கரெக்டா குதிச்சவர் ஆச்சே!

  ReplyDelete
 20. Attagaasam :-)

  ReplyDelete
 21. வலைசரம் மூலம் அறிமுகம் நீங்கள் ..............அருமையான நகை சுவை ............சுவைத்தேன் .......மகிழ்ந்தேன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், உங்களுக்கு என்னை அறிமுகம் செய்த வலைச்சரம் மற்றும் பலே பிரபு அவர்களுக்கும் நன்றி.

   Delete
 22. அருமையான காமெடி பாஸ்... நல்லாவே சிரிப்பு வந்தது...

  ReplyDelete
  Replies
  1. பகிர்வுக்கு நன்றி!

   Delete
 23. ஹ ஹா சிரித்தேன்

  ReplyDelete
  Replies
  1. பகிர்வுக்கு நன்றி!

   Delete
 24. பாஸ் இதே பதிவை இப்போது விகடன் அவங்க பேஸ்புக் பக்கத்துல போட்டு இருக்காங்க. ஆனா ஒரு இமேஜ் மட்டும் அதிகமா இருக்கு. உங்களுதா இது?

  http://goo.gl/frb4j

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் குறிப்பிட்டதற்கு பிறகு தான் நானே பார்த்தேன். கொஞ்சம், கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

   Delete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...