22 December, 2012

Share Auto - பாவமும் ஷேர் தானே!

'கரணம் தப்பினால் மரணம்' என்ற ரீதியில் நித்தம் நித்தம் பயணம் செய்யும் மக்களின் வழியில் புகுந்து விளையாடும் வாகனங்களில் முதல் இடம் பெறுவது நிச்சயமாக ஷேர் ஆட்டோக்கள் தான். இஷ்டத்திற்கு ஓடித்திரிந்த மினிபஸ்காரர்களை நல்லவர்கள் ஆக்கிய பெருமை ஷேர் ஆட்டோக்களுக்கு தான் சேரும்.



சமீபத்தில் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகில்  ஒரு தந்தை தன் மகளை கல்லூரிக்கு பைக்கில் இறக்கி விடசென்ற போது முன்னாள் சென்ற ஷேர் ஆட்டோ தீடிரென இடது புறமாக திரும்ப பைக் ஓட்டி  வந்தவர் தடுமாறி ரோட்டில் மகளுடன் கீழே விழுந்திருக்கிறார். பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி தந்தை மகள் இருவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகி விட்டனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை போலிஸ் தேடுகிறது என்பது செய்தியாகி விட்டது. ஆனால் தீடிரென்று திருப்பிய ஷேர் ஆட்டோவும்,  ஆட்டோவில் ஏறிய  பயணியும் நிற்காமல் கூட போய் விட்டனர்.



வெறும் 7 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரோட்டைப் பார்த்து வண்டி ஒட்டாமல் ஓரத்தில் யாராவது தலையை சொறிந்தால் கூட சட்டென்று வண்டியை திருப்பும் ஷேர் ஆட்டோக்களால் தினம்,தினம் விழுந்து எழும் வாகனங்கள் அதிகம். பின்னால் வண்டி வருவதும் வராததும் நம் அதிர்ஷ்டத்தை பொருத்தது. ஆனால் ஷேர் ஆட்டோ என்றால் எங்கு வேண்டுமானாலும்    ஏறலாம், இறங்கலாம் என்ற எண்ணத்தில் நடமாடும் மக்களும் இது மாதிரியான விபத்துகளுக்கு நாம் தான் முதல்  காரணம் என்பதை உணர வேண்டும் . சிறிது தூரம் நடந்து சென்று ஏறிக்கொள்வதால் நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.



                                                    விலை மதிப்பில்லாதது உயிர் 


மீண்டும் சந்திப்போம்.


17 December, 2012

மனைவியை பக்கத்தில வைச்சுக்கிட்டு படிக்காதீங்க!


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
                    பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!


                                              

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
                     கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????





மனைவி :- கருமம்... கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட
                       கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா!  இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?





பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
              நான் பங்கெடுத்துகுவேன!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!





கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி
                     சொல்றீங்க..!



மீண்டும் சந்திப்போம் ....




12 December, 2012

12-12-12

1) ரஜினி,சினிமாதுறையில் உள்ள மூன்று பேர் முன் இன்றும் சிகரெட் பிடிக்கமாட்டார். 1.அவர் குரு கே.பாலசந்தர், 2. ஏ.வி.எம்.சரவணன், 3. எஸ்.பி.முத்துராமன்.


2) தான் நடித்ததிலேயே ரஜினிக்கு மிகவும் பிடித்த படம் மகேந்திரனின். 'முள்ளும் மலரும்'.


3) ரஜினி, அமிதாப்பின் 12 படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த ரீமேக் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள்.






4) ஒவ்வொரு படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன், ரஜினி திருப்பதிக்குச் சென்று பாலாஜியைத் தரிசித்த பின்னரே Shooting ஆரம்பிப்பது என்ற வழக்கத்தை இன்றும் பின்பற்றுகிறார்.


5) கண்டக்டர் ஆவதற்கு முன்னர், ரஜினி 'கன்னட சம்யுக்தா' என்ற தினசரியில், 3 நாட்கள் உதவி ஆசிரியராக வேலை செய்தார்.


6) தன் முதல் காரான பியட், முதல் ஸ்கூட்டர் லாம்பரெட்டா அனைத்தையும் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.







7) இளையராஜாவை "சாமி" என்று தான் ரஜினி கூப்பிடுகிறார். ரமண மகரிஷியையும், திருவண்ணாமலையையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். சினிமாவையும் தாண்டிய ஆழ்ந்த நட்பு இருவருக்கும் இடையே உண்டு.


8) ரஜினி இன்றளவும் சாதாரண நோக்கியா 3000 மாடல் போனையே பயன்படுத்தி வருகிறார்.


9) கடுமையாக, உயிரையே உறைய வைக்கும் அளவு ஜில்லிப்பான ருத்ரா பிரயாகில் மற்றவர்கள் தயங்கி நிற்கும் போது, தடாலென வெறும் துண்டுடன் உள்ளே குதித்து ஆனந்தமாய்க் குளிப்பது ரஜினியின் பொழுது போக்கு.







10) ரஜினியின் குசேலன் உருவப்படத்தை அமெரிக்காவின் M&M Candy Company (நம் ஊர் Gems போன்ற மிட்டாய்கள்) ஒவ்வொரு மிட்டாய் மேலும் பொறித்துள்ளது.


11) ரஜினிக்கு மிகப் பிடித்த உணவுப் பொருள்கள் அவித்த வேர்க்கடலையும் சிக்கன் கால்களும் தான்.


12)  ரஜினிக்கு மாறு வேடத்தில், தியேட்டருக்குச் சென்று அடுத்தவர் நடித்த படத்தைப் பார்ப்பதில் கொள்ளைப் பிரியம்.





"ரஜினி பேரக் கேட்டாலே... "    புத்தகத்திலிருந்து.



12-12-12 என்ற Special தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




ஏற்கனவே ஒரு பதிவில் வெளியிட்ட தளபதி ரீமிக்ஸ் வீடியோ மறுபடியும்.





மீண்டும் சந்திப்போம்.



15 November, 2012

பெண்டு எடுக்கும் டெங்கு

தீபாவளிக்கு எல்லா விடுகளிலும் வெடி சத்தம் கேட்டதோ இல்லையோ கொசு அடிக்கும் பேட் சத்தம் நன்றாகவே கேட்டது. கரண்ட கட்  மற்றும் கொசு தொல்லை காரணமாக இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் பகல் முழுவதும் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அழகில் சிக்கன் குனியாவை விட பல மடங்கு பீதியை டெங்கு  கிளப்பிக் கொண்டிருக்கிறது.




குழந்தைகளை அதிகம் குறி வைக்கும் டெங்கு கொசுவின் தாக்கம் பயமுறுத்தும் வகையில் உள்ளது.
1) வாந்தி 
2)  மூட்டுகளில் வலி 
3) தலைவலி 
4) வாய், ஈறுகளில் ரத்தக்கசிவு 
5) காய்ச்சல் 
6) கண்ணில் வலி 

 போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விடுவது உத்தமம். டெங்கு காய்ச்சல் வியாதிக்கு ஓரளவு பெரிய ஆஸ்பத்திரியில் நன்றாகவே சிகிச்சை தருகிறார்கள். இதற்கு தடுப்பு மருந்து சரியாக இல்லாத காரணத்தால் கொசுவை அண்ட விடாமல் வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாக கருதப்படுகிறது.



   


டெங்கு கொசு உரல், டயர் போன்று தண்ணீர் தேங்கும் இடங்களில் அதிகம் உற்பத்தியாகிறது. எனவே நமது வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகம் தண்ணிர் தேங்காமல் பார்த்துக் கொள்வது நமக்கு மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்லாமல் நாமும் முன்ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது.
  

மீண்டும் சந்திப்போம்.


07 November, 2012

பேசும் படம்

'சிலை உயிர் பெற்று வந்தது போல 'என்று  வர்ணிப்பார்கள். அது போல் ஓவியம் என்றே சொல்லமுடியாத படி நிஜமான பெண்ணின் போட்டோ போல் உள்ள இந்த ஓவியங்களை வரைந்தவர் இளையராஜா. (இசைஞானி இளையராஜா இல்லை.)  அவரின் படங்கள் சில.




















இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்







மீண்டும் சந்திப்போம்



11 October, 2012

Google Doodle contest for childrens

இந்தப் பதிவை படிக்கும் அனைவருக்கும் Internet பற்றி தெரிந்திருக்கும். Intetnet பற்றி தெரிந்த எல்லோருக்கும் Google பற்றி தெரிந்திருக்கும். Google பற்றி தெரிந்த பலருக்கு Doodle பற்றியும் தெரிந்திருக்கும். இருந்தாலும் Doodle பற்றி ஒரு சின்ன க.சு.



நம் வீட்டு காலண்டர்களில் காந்தி ஜெயந்தி அன்று காந்தி படத்தை போட்டிருப்பார்கள் அல்லவா? அதே  Concept தான். கூகிள் தனது Home Pageல் வ்ழக்கமான லோகோவிற்கு பதில் சில ஸ்பெஷல் தினங்களில் அந்த நாளை நினைவுப்படுத்தும் விதமாக Special Logo வை வெளியிடுகிறது. அதற்கு Doodle என்று பெயரிட்டுள்ளார்கள்.கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட டூடிள்களை கூகிள் வெளியிட்டுள்ளது.


1998 ல் முதன்முதலில் Burning Man Festival ஐ முன்னிடு கூகிள் வெளியிட்ட Doodle



மற்றும் சில ரசிக்கும்படியான Doodles





                                         
                                             































அவ்வப்போது நாமும் பங்கேற்று டூடுள்களை வடிவமைத்து வெளியிடும்படி சில போட்டிகளையும் கூகிள் நடத்தி வருகிறது. China, Ireland,Poland,Newzealand நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற டூடிள்ஸ்.
 














இந்தியாவில் 2009 முதல் Doodle Contest ஐ Google நடத்தி வருகிறது. 2009, 2010 மற்றும் 2011 ல் டூடிள் போட்டியில் வென்ற படங்கள்













தற்போது கூகிள் Doodle 4 Google Contest இந்தியாவில் அறிவித்துள்ளது. 

5-16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.
'Unity In Diversity' என்ற தலைப்புக்கேற்றவாறு வடிவமைத்து அனுப்பவேண்டும்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 23-10-2012
Winning Doodle 14-11-2012 (Children's day) அன்று வெளியிடப்படும்.
Winner டெல்லியில் நவம்பர் மாதம் நடைபெறும் Doodle 4 Google eventல் பங்கு பெறலாம்.

போட்டிகளை அனுப்ப கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Formஐ டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள்.


வெற்றி பெற வாழ்த்துக்கள்.



மீண்டும் சந்திப்போம்




29 September, 2012

கூ தூ கா நல்லது

தலைப்பு புரிகிறதா?, தவறு ஒன்றும் இல்லை. சுத்தத் தமிழில் கூறியுள்ளேன். அவ்வளவு தான். ஓர் எழுத்துச் சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. நம்மிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஒரே ஒரு சிக்கல். அவைகளில் பெரும்பாலான சொற்கள் புத்தகத்தில் மட்டுமே உள்ளன புழக்கத்தில் இல்லை. தமிழ் ஒரெழுத்துச் சொற்களை கீழே பட்டியலுட்டுள்ளேன்.




                                                  தமிழ் ஓரெழுத்து சொற்கள்
 
 எட்டு
 ஆ
 பசு
  ஈ
 கொடு, பறக்கும் பூச்சி
  உ
 சிவன்
  ஊ
 தசை, இறைச்சி
  ஏ
 அம்பு
  ஐ
 ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
  ஓ
 வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
  கா
 சோலை, காத்தல்
  கூ
 பூமி, கூவுதல்
  கை
 கரம், உறுப்பு
  கோ
 அரசன், தலைவன், இறைவன்
  சா
 இறப்பு, மரணம், பேய், சாதல்
  சீ
 இகழ்ச்சி, திருமகள்
  சே
 எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு
  சோ
 மதில், அரண்
  தா
 கொடு, கேட்பது
  தீ
 நெருப்பு
  து
 கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
  தூ
 வெண்மை, தூய்மை,
  தே
 நாயகன், தெய்வம்
  தை
 மாதம், தையல்
  நா
 நாக்கு
  நீ
 நின்னை
  நே
அன்பு, நேயம்
  நை
 வருந்து, நைதல்
  நொ
 நொண்டி, துண்பம்
  நோவு
 நோவு, வருத்தம்
  நெள
 மரக்கலம்
  பா
 பாட்டு, நிழல், அழகு
  பூ
 மலர்
  பே
 மேகம், நுரை, அழகு
  பை
 பாம்புப்படம், பசுமை, உறை










 போ
 செல்
 மா
 மாமரம், பெரிய, விலங்கு
 மீ
 உயரம், மேலே, ஆகாயம்
 மு
 மூப்பு
 மூ
 மூன்று
 மே
 மேல், மேன்மை
 மை
 அஞ்சனம், கண்மை, இருள், செம்மறி ஆடு
 மோ
 மோதல், முகர்தல்
 யா
 மரம், அகலம்
 வா
 அழைத்தல்
 வீ
 பூ, அழகு, பறவை
 வை
 வைக்கோல், கூர்மை வைதல், வைத்தல்
 வெள
 கெளவுதல், கொள்ளை அடித்தல்



                                                          இப்பொழுது உள்ள SMS மற்றும் Facebook யுகத்தில் ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் ஒரெழுத்து சொற்களாகி விட்டன. உதாரணத்திற்கு C = See, Y = Why, U = You, R = Are, V = We. இன்னும் நிறைய இருக்கிறது. SMS அதிகம் உபயோகிப்பவர்களை கேட்டால் அள்ளி வீசுவார்கள். ஆனால் நாம் நிறைய ஒரெழுத்து சொற்களை கையில் வைத்துக் கொண்டு உபயோகம் செய்யாமல் வைத்திருக்கிறோம். குறைந்த பட்சம் மூன்றுக்கு மூன்று எழுத்துக்களை வீணடிக்காமல் 'மூ' என்றும், நாட்டில் பல அரசியல்வாதிகள்  'வெள'வுகிறார்கள் என்றும் எளிதாக சொல்லலாம்.



மீண்டும் சந்திப்போம்.


24 September, 2012

FUNtastic படங்கள்

Gif Images  ஒரு விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள் இவை.





Computer ல் ஒரு மனிதன் சிக்கி விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்






வளைந்து கொடுத்தால் வாழ்க்கைக்கு நல்லது..
   





டீஸல் விற்கிற விலையில் பின்ன எப்படி வண்டி ஓட்டுறது.







'சரக்கு'  விமானம் போல


எறும்பு மொய்க்கிற மாதிரி இங்க ஒன்னும் இல்லையே!





சேர்ல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் திமிர்னு சொல்வாங்க, சேரே கால் மேல் கால் போட்டு இருந்தால்?







என்ன இது! சின்னப்பிள்ளைத்தனமா வேலை பார்க்கிற இடத்தில விளையாட்டு.






வாழைப்பழ விலையையும் ஏத்திட்டாங்களோ? இந்த திட்டு திட்டுதே!




டீ விற்கிறாங்களாம்!








யார் மேலே கோபமோ!  ' R ' ஐ இந்த அடி அடிக்கிறாரு.






He can walk english, talk english





மீண்டும் சந்திப்போம்.


10 September, 2012

அரசியலுக்கும் இந்தப் புதிருக்கும் சம்பந்தமில்லை

கணக்கு வழக்கில்லாம ஏகப்பட்ட தொழில் செய்து வரும் ஒரு முதலாளிக்கு  திடீர் என்று பெருத்த சந்தேகம் வந்தது. நாம் செய்து வரும் தொழிலில் எது அதிகம் கல்லா கட்டுது அப்படின்னு. கணக்குப் புலின்னு நினைச்சு ஒருத்தர கல்லாவில உட்கார வைச்சா அவரு வாயே திறக்க மாட்டேங்கறாரு. ஆனா அவரு சில Hints மட்டும் கொடுத்தார்.


1) ஆட்டுக்கறி விற்பவர்
2) செல்போன் ரீசார்ஜ் செய்பவர்
3) விளையாட்டு சாமான் விற்பவர்

இந்த மூன்று பேரில் ஒருவருக்கு  தான் அதிகம் வருமானம். 
யார் அதிகம் என்று அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்.

ஒரே ஒரு கண்டிசன் 
மூவரில் ஒருவர் மட்டுமே உண்மை பேசுவார். 
மற்ற இரண்டு பேரும் பொய் பேசுபவர்கள்.



முதலாளி மூவரிடமும் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்கள்

ஆட்டுக்கறி விற்பவர்                             -        "நான் இல்லை."

செல்போன் ரீசார்ஜ் செய்பவர்             -        "நான் இல்லை"

விளையாட்டு சாமான் விற்பவர்        -        "செல்போன்  ரீசார்ஜ் செய்பவர்
                                                                                     என்று போட்டுக் கொடுத்தார்"








முதலாளிக்கு குழப்பம்.
இதில் யார் உண்மை பேசுகிறார்கள், 
யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.



மீண்டும் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...