10 February, 2012

சச்சினும் தோனியும்

சச்சின் மற்றும் தோனி பெயரில் சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ளது. சச்சின் பெயரில் Boost வழங்க Why this கொலவெறி டீம் கிட்டத்தட்ட அதே சாயலில் 'Sachin is the secret of INDIA's  energy' என்ற பெயரிலும், தோனி பெயரில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இளையராஜா இசையிலும் பாடல்கள் வெளியாகி உள்ளது. முதலில் சச்சின்.




பட்டி தொட்டி என்றில்லாமல் நாடுகளை கடந்து ஹிட் அடித்த ரஜினி குடும்ப டீமின் அடுத்த வெளியீடு.
வழக்கம் போல் தனுஷ் எழுதி பாடியுள்ளார்.
வழக்கம் போல் அனிருத் அதே சாயலில் இசையமைத்துள்ளார்.
Extra Fitting  அனுஷ்கா
வழக்கம் போல் அழகாய் உள்ளார்.
Why this கொலவெறி ஹிட்டானதற்கே பல பேர் கொலவெறியுடன் அலைகிறார்கள். அதற்குள் அதே போல் இன்னொரு பாடல். கொலவெறி பாடல் ஹிட்டானதற்கு மார்கெட்டிங்  தான் காரணம் என்று கூறப்பட்டாலும் பாடல் எனர்ஜிட்டாக தான் இருந்தது.  நண்டு, சிண்டு கூட பாடிக்கொண்டு அலைந்தது. ஆனால் இது போன்ற பாடல்களின் ஆயுட்காலமும் கம்மி. நாளடைவில் மறந்து விடுவோம். சச்சின் போன்ற மாஸ்டர் பேட்ஸ்மேனின் புகழ் பாட எடுத்த பாடல் காலம் கடந்து நிற்கும் படி எடுத்திருக்கலாம். சச்சினை வைத்து சில ஷாட்ஸ் கூட எடுக்காமல் பழைய கிளிப்பிங்ஸ்,போட்டோவை வைத்தே முழுப்பாடலையும் முடித்து விட்டார்கள். எப்படி இருந்தாலும் என்னைப் போன்ற சச்சின் ரசிகர்களுக்கு ரஜினி படம் Opening Show பார்த்த குதூகலத்தை தருகிறது பாடல்.
பாடல் பார்க்க:



அடுத்து தோனி
இளையராஜா தன் இசையை கேட்க வருபவர்கள் மட்டும் வந்தால் போதும்  என தனக்கென ஒரு கடையை நடத்திக்கொண்டு வருகிறார். பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி வழக்கமான பாடல்கள். ஒரே ஆச்சர்யம் மற்றும் சந்தோசம்.
வாங்கும் பணத்துக்கும்  என ஆரம்பிக்கும் பாடல். SPB தன்னை அடித்துக் கொள்ள ஆளில்லை என சம்மட்டி அடி அடித்து நிருபித்திருக்கிறார். மற்றுமொரு ஆச்சர்யம் பிரபுதேவா. மெலடியான இந்த பாட்டிற்கு தனது Favourite Steps மூலம் மேலும் அழகூட்டியுள்ளார்.  

மீண்டும் சந்திப்போம்.


08 February, 2012

எங்க சட்டசபையைப் போல ஏது மச்சான்.

சமீபத்திய ஹாட்டாபிக் கர்நாடக சட்டசபையில் பிட்டு படம் பார்த்த அமைச்சர்கள் மேட்டர் தான். அதில் ஒருவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இலாகா அமைச்சர். ( நல்லா மேம்படுத்திருவாரு). நம்ம நாட்டு அரசியல்வாதிகள் சட்டசபையில்  சண்டை போடாம  இருப்பதே அதிசயம். அதிலயும் நாட்டு பிரச்சனைகளைப் பற்றி பேசுவது ரொம்ப ரொம்ப அதிசயம். அந்த மாதிரி ஒரு வகுப்புவாத பிரச்சனையைப் பற்றி சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது தான் லட்சுமன் சவடி மற்றும் சி.சி.பட்டில் என்ற இரண்டு அமைச்சர்களும் படா சீரியஸாக செல்போனில் பிட்டு படம் பார்த்துக் கொண்டிருந்ததை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறது.






இது சம்பந்தமான கேள்விக்கு பதிலளித்த லட்சுமன் சவடி பிரச்சனைக்குரிய உடுப்பி தீவுத்திருவிழா சம்பந்தப்பட்ட படத்தை தான் செல்போனில் பார்த்ததாக கூறியுள்ளார்.(அது ஒரு தனிக்கூத்து, Tourism த்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் குதாம் பார்ட்டிகளைக் கூப்பிட்டு குத்துப்பாட்டு ஆட விட்டிருக்கிறார்கள்.) மற்றொரு அமைச்சரான சி.சி.பட்டீல் வெளிநாட்டில் நடந்த ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார். மொத்தத்தில் ஓட்டுப்போட்டவங்களுக்கு நல்லா படம் காட்டுறாங்க!.



                                       
                              சர்ச்சைக்குரிய உடுப்பி தீவுத்திருவிழா ரேவ் நடனக்குழு



டிஸ்கி நீதி :

1) தப்பு செய்யக்கூடாது.

2) செஞ்சாலும் மாட்டக்கூடாது.

3) மாட்டினாலும் ஆளாளுக்கு மாத்தி, மாத்தி பேசக்கூடாது.


மீண்டும் சந்திப்போம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...