22 December, 2012

Share Auto - பாவமும் ஷேர் தானே!

'கரணம் தப்பினால் மரணம்' என்ற ரீதியில் நித்தம் நித்தம் பயணம் செய்யும் மக்களின் வழியில் புகுந்து விளையாடும் வாகனங்களில் முதல் இடம் பெறுவது நிச்சயமாக ஷேர் ஆட்டோக்கள் தான். இஷ்டத்திற்கு ஓடித்திரிந்த மினிபஸ்காரர்களை நல்லவர்கள் ஆக்கிய பெருமை ஷேர் ஆட்டோக்களுக்கு தான் சேரும்.



சமீபத்தில் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகில்  ஒரு தந்தை தன் மகளை கல்லூரிக்கு பைக்கில் இறக்கி விடசென்ற போது முன்னாள் சென்ற ஷேர் ஆட்டோ தீடிரென இடது புறமாக திரும்ப பைக் ஓட்டி  வந்தவர் தடுமாறி ரோட்டில் மகளுடன் கீழே விழுந்திருக்கிறார். பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி தந்தை மகள் இருவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகி விட்டனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை போலிஸ் தேடுகிறது என்பது செய்தியாகி விட்டது. ஆனால் தீடிரென்று திருப்பிய ஷேர் ஆட்டோவும்,  ஆட்டோவில் ஏறிய  பயணியும் நிற்காமல் கூட போய் விட்டனர்.



வெறும் 7 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரோட்டைப் பார்த்து வண்டி ஒட்டாமல் ஓரத்தில் யாராவது தலையை சொறிந்தால் கூட சட்டென்று வண்டியை திருப்பும் ஷேர் ஆட்டோக்களால் தினம்,தினம் விழுந்து எழும் வாகனங்கள் அதிகம். பின்னால் வண்டி வருவதும் வராததும் நம் அதிர்ஷ்டத்தை பொருத்தது. ஆனால் ஷேர் ஆட்டோ என்றால் எங்கு வேண்டுமானாலும்    ஏறலாம், இறங்கலாம் என்ற எண்ணத்தில் நடமாடும் மக்களும் இது மாதிரியான விபத்துகளுக்கு நாம் தான் முதல்  காரணம் என்பதை உணர வேண்டும் . சிறிது தூரம் நடந்து சென்று ஏறிக்கொள்வதால் நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.



                                                    விலை மதிப்பில்லாதது உயிர் 


மீண்டும் சந்திப்போம்.


17 December, 2012

மனைவியை பக்கத்தில வைச்சுக்கிட்டு படிக்காதீங்க!


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
                    பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!


                                              

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
                     கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????





மனைவி :- கருமம்... கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட
                       கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா!  இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?





பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
              நான் பங்கெடுத்துகுவேன!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!





கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி
                     சொல்றீங்க..!



மீண்டும் சந்திப்போம் ....




12 December, 2012

12-12-12

1) ரஜினி,சினிமாதுறையில் உள்ள மூன்று பேர் முன் இன்றும் சிகரெட் பிடிக்கமாட்டார். 1.அவர் குரு கே.பாலசந்தர், 2. ஏ.வி.எம்.சரவணன், 3. எஸ்.பி.முத்துராமன்.


2) தான் நடித்ததிலேயே ரஜினிக்கு மிகவும் பிடித்த படம் மகேந்திரனின். 'முள்ளும் மலரும்'.


3) ரஜினி, அமிதாப்பின் 12 படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த ரீமேக் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள்.






4) ஒவ்வொரு படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன், ரஜினி திருப்பதிக்குச் சென்று பாலாஜியைத் தரிசித்த பின்னரே Shooting ஆரம்பிப்பது என்ற வழக்கத்தை இன்றும் பின்பற்றுகிறார்.


5) கண்டக்டர் ஆவதற்கு முன்னர், ரஜினி 'கன்னட சம்யுக்தா' என்ற தினசரியில், 3 நாட்கள் உதவி ஆசிரியராக வேலை செய்தார்.


6) தன் முதல் காரான பியட், முதல் ஸ்கூட்டர் லாம்பரெட்டா அனைத்தையும் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.







7) இளையராஜாவை "சாமி" என்று தான் ரஜினி கூப்பிடுகிறார். ரமண மகரிஷியையும், திருவண்ணாமலையையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். சினிமாவையும் தாண்டிய ஆழ்ந்த நட்பு இருவருக்கும் இடையே உண்டு.


8) ரஜினி இன்றளவும் சாதாரண நோக்கியா 3000 மாடல் போனையே பயன்படுத்தி வருகிறார்.


9) கடுமையாக, உயிரையே உறைய வைக்கும் அளவு ஜில்லிப்பான ருத்ரா பிரயாகில் மற்றவர்கள் தயங்கி நிற்கும் போது, தடாலென வெறும் துண்டுடன் உள்ளே குதித்து ஆனந்தமாய்க் குளிப்பது ரஜினியின் பொழுது போக்கு.







10) ரஜினியின் குசேலன் உருவப்படத்தை அமெரிக்காவின் M&M Candy Company (நம் ஊர் Gems போன்ற மிட்டாய்கள்) ஒவ்வொரு மிட்டாய் மேலும் பொறித்துள்ளது.


11) ரஜினிக்கு மிகப் பிடித்த உணவுப் பொருள்கள் அவித்த வேர்க்கடலையும் சிக்கன் கால்களும் தான்.


12)  ரஜினிக்கு மாறு வேடத்தில், தியேட்டருக்குச் சென்று அடுத்தவர் நடித்த படத்தைப் பார்ப்பதில் கொள்ளைப் பிரியம்.





"ரஜினி பேரக் கேட்டாலே... "    புத்தகத்திலிருந்து.



12-12-12 என்ற Special தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




ஏற்கனவே ஒரு பதிவில் வெளியிட்ட தளபதி ரீமிக்ஸ் வீடியோ மறுபடியும்.





மீண்டும் சந்திப்போம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...