31 July, 2011

நல்லதையே செய்வாரு நல்லதம்பி

                                                            ரோட்டுல ஒருத்தரு தடுமாறி விழுந்தாருன்னா
போய் காப்பத்தலாமானு நாம யோசிப்போம். ஆனா அந்த மனுசன் கீழே
விழறதுக்குள்ள எங்கிருந்தோ ஓடி வந்து தாங்கி பிடிக்கிறவரு தான் நம்ம
நல்லதம்பி. ஊருக்கு உழைத்த உத்தமர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்
மாதிரி ஊர்,நாடு என்ற எல்லை இல்லாமல் எங்கு யாருக்கு எந்த உதவி
தேவைபட்டாலும் தானே ஓடிப் போய் உதவி செய்வார் நம்ம நல்லதம்பி.


30 July, 2011

உங்கள் பொருட்களை இண்டர்நெட்டில் பாக்கனுமா?

                                                               நீங்க ஆசையா, ஆசையா வைச்சிருக்கிற
பொருளை இண்டர்நெட்டில் பாக்கனும்னு ஆசையா? . சட்டுபுட்டுனு
சென்னையிலிருந்து ஏதாவது ஊருக்கு டிரெயின் ஏறுங்க. இறங்கும்போது
நீங்க கொண்டு போன பொருளை ஞாபகமா மறந்துட்டு வந்துருங்க. நம்ம
ஊரு நல்லவங்க யார் கண்ணுலயும் அது படலைனா, ரயில்வே போலிஸ்
அத பத்திரமா எடுத்து வைச்சி அத பத்தின விபரங்களை இண்டர்நெட்டில்
போடுவாங்க. நீங்க அத பாத்து மத்த அடையாளத்தை சொல்லி அந்த
பொருளை வீட்டுக்கு கொண்டு வந்திரலாம். எப்படி நம்ம Idea.


28 July, 2011

சீனப் பெருஞ்சுவருக்கு போட்டி

                                                       
                                                              Space இல் இருந்து பூமியை பார்க்கும் போது
மனிதன் உருவாக்கிய விஷயங்களில் கண்ணுக்கு தெரியும் ஒரே விஷயம்
சீன பெருஞ்சுவர் மட்டும் தான். நாமல்லாம் அத செய்தியா படிச்சா UAE
மன்னர் குடும்பத்தை சேர்த்த Sheikh HAMAD Bin Hamdan Al Nahyan  எரிச்சலா
படிச்சாரு போல.26 July, 2011

சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது

                                          Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற
ஆள பாத்திருக்கீங்களா?  கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற
இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு
நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம
சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.
இத பாருங்க.

24 July, 2011

போனை வேவு பாக்கனுமா?


                                                 நமது போனில் இருந்து யார் யாருக்கு அழைத்து
இருக்கிறோம்  என்று எப்படி பார்ப்பது  தெரியுமா? போனை வேவு பார்ப்பது எப்படி என்றவுடன் நீரா ராடியா அளவுக்கு எல்லாம் யோசிக்க வேண்டாம்.

                        இது முழுக்க முழுக்க BSNL வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட
விஷயம்.வேறு யாரும் உள்ளே வந்து பார்க்க கூடாது என்று கடுமையாக எச்சரிக்க படுகிறார்கள். இதுக்கும் மேலே வந்து படிச்சீங்கனா கம்பெனி பொருப்பு இல்ல.

23 July, 2011

இளையராஜா வைரமுத்து விரிசல் பற்றி பாரதிராஜா

                                   சமீபத்திய பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இளையராஜா வைரமுத்து  விரிசல் பற்றி பாரதிராஜாவிடம் கேட்ட போது
'கலைஞர்களுக்குள் சண்டை வருவது சகஜம், ஆனால் நீங்கள் தான்
அதை பெரிது ஆக்கி விட்டீர்கள்.' என்று பத்திரிக்கைகளை குற்றம் சாட்டி இருந்தார்.


           இப்பவாவது மீடியாவை பற்றி தெரிந்து கொண்டீர்களா ராசா!
19 July, 2011

போதைக்கு சண்டையிடும் தோனியும்,ஹர்பஜனும்

                           தோனியும் ஹர்பஜனும் ஆளாளுக்கு ஒரு Brand  க்கு
விளம்பரம் செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பியதில் தப்பில்லை.
ஹர்பஜன் Royal Stag விளம்பரத்தில் Have I Made It Large? என்று ஆரம்பிக்க, தோனியோ Mc Dowell's விளம்பரத்தில் ஹர்பஜன் மாதிரியே ஆளை
வைத்து அடங்கொய்யாலே  Large எல்லாம் வேஸ்ட் Try Different என்று முடிக்கிறார்.
18 July, 2011

ஆங்கிலம் மறந்து போகனுமா

              
                   நீங்க படிச்ச English மறந்து போகனுமா? கீழே இருக்கிறத 
கொஞ்சம் படிங்க.

Purantu cinnappillaikal crying crying
Have you seen?. Can you do it now
If you. You Am I's latest TV Programme - in
Treatment with fat people and body ilaikka
....... Who were talking on the field.


அழுது புரண்டு உடம்பை குறைக்க

                                      சின்னப்பிள்ளைகள் அழுது புரண்டு அழுவதை
பார்த்திருக்கிறீர்களா?. அது போல இப்ப செய்ய முடியுமா
உங்களால். சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா Programme -ல் 
குண்டாக இருப்பவர்கள் மற்றும் உடல் இளைக்க Treatment
செய்பவர்கள் இரு பிரிவாக பேசிக்கொண்டே.......இருந்தார்கள்.
 
அலோபதி,ஹோமியாபதி,இயற்கை உணவு என ஆளாளுக்கு
ஒரு வழி சொல்ல கோயமுத்தூர் குசும்புடன் குபீரென்று ஒருத்தர்
கோதாவில் குதித்தார். தானே கண்டுபிடித்த முறை என்றும்
Hot and Short என்று பெயர் வைத்திருப்பதாகவும் சொல்லி அவர்
செய்ததை கீழே வீடியோவில் போட்டுள்ளேன். சிரிக்காம பாருங்க.


அதை போல் செய்தால் உடம்பு குறையுமோ என்னமோ தெரியாது.
ஆனா செய்யறதை பார்த்தாலே சிரிச்சு,சிரிச்சு இளைச்சுருவாங்க.
Finishing Touch ஆ ஒன்னு சொன்னாரு பாருங்க. அவருக்கு வயசு 61
ஆச்சாம். இந்த வயசுல இவ்வளவு Brisk-ஆ இருக்கிறது பெரிய
விஷயம் தான். முடிஞ்சா நல்ல குத்து பாட்டா ஒன்னு போட்டுட்டு
இதே மாதிரி செய்து பார்த்துட்டு Result சொல்லுங்க.கிளம்புறதுக்கு முன்னாடி ஓட்டு, பதில்  
எதையாவது போட்டுட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.

15 July, 2011

அப்பா குடிக்காம வாங்க

                                   குழந்தைகள் சொல்லுக்கு என்று உலகில் தனி
மதிப்புண்டு. பொதுவாக யார் பேச்சையும் கேட்காத மனிதன் கூட
பிள்ளைகள் சொல்லும் போது கொஞ்சம் யோசிப்பான். அதை
நினைத்தோ என்னமோ கரூரில் ஒரு மினி பஸ் பின்புறம்
இந்த வாசகத்தை எழுதியிருந்தார்கள்.

                                    'அப்பா குடிக்காம வாங்க'


                ஒரு முடிவோட போற மனுசன யாராலும் மாத்த முடியாது.
ஆனா இங்கிட்டும் இல்லாம அங்கிட்டும் இல்லாம தள்ளாடிக்கிட்டு
(போதையில் இல்ல) இருக்கிற மனுசங்கள நிச்சயம் யோசிக்க
வைக்கும். இதை படிச்ச யாராவது ஒருத்தரு வண்டியை வீட்டுக்கு
திருப்பினாருன்னாலே இதை எழுதினவங்களுக்கு வெற்றி தான்.


கிளம்புறதுக்கு முன்னாடி ஓட்டு, பதில்  
எதையாவது போட்டுட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.

14 July, 2011

இலவசங்களின் விலை

                                                     தமிழக அரசு சுமார் 3900 கோடி அளவுக்கு
புதிதாக வரிகளை  போட்டிருக்கிறது. பட்ஜெட்டிற்கான டிரைலர் போலிருக்கிறது. தமிழகத்தில் திமுக மட்டும் மெல்ல 
முனங்கியிருக்கிறது. காச்மூச்னு கத்தியவரும் கப்சிப். இதற்கு
ஒரு படி மேலே திமுக கவுன்சிலர் தெரு சண்டையில் கைது
என தலைப்பு செய்தி வெளியிடும் நாளிதழ் கூடுதல் வரிகள் பற்றி
அரசு வெளியிட்ட செய்தியை அன்று வெளிடவேயில்லை.


                                             உண்மையில் அரசுக்கு வேறு வழியில்லை.
எந்த அரசியல்வாதியும் அறிவிக்கும் இலவசங்களை வீட்டிலிருந்து
கொண்டு வந்து கொடுப்பதில்லை.அதற்கான நிதியை கடன்
வாங்குவது என்பது பெரிய முட்டாள்தனம்.கூடுதல் வரிகள்
ஒன்றே நிரந்தர தீர்வு.

                                         பின்னாளில் ஏதாவது கணக்கு புலியோ,
குதிரையோ நாம் அதிகமாக கட்டும் வரித்தொகையை நமக்கு
கொடுக்கும் இலவச பொருட்களுடன் கணக்கிட்டு நாம் பெரும்
பொருட்களின் விலையை சொன்னால் இதற்கு இம்பூட்டு விலையா?
என மிரண்டு அடுத்து இலவசம் என்றாலே காதை மூடிக்கொண்டு
ஓடினால் போதும்.


                                எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு நண்பர்களே !

                         கிளம்புறதுக்கு முன்னாடி ஓட்டு, பதில் 
                              எதையாவது போட்டுட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.


10 July, 2011

சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் ' 2ஜி ஸ்பெக்ட்ரம்'
2 ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் புதிதாக ஒரு
படம் இன்று முதல் கிளப்பியிருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றித்தான்
படம் என்றும் நீரா ராடியா கேரக்டரில் லட்சுமிராய் நடிப்பதாகவும், முக்கிய
வேடத்தில் நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தயாரிப்பு
தரப்பு தெரிவித்து உள்ளது.


ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது
இந்த படத்தை எடுப்பதில் எந்த அளவு சட்ட சிக்கல் இருக்கும் என்று தெரியவில்லை. ஆளும் தரப்பில் இருந்து நல்ல சப்போர்ட் கிடைக்கும் என்பது
மட்டும் உறுதி.


படத்தின் பப்ளிசிட்டிக்கு பஞ்சமிருக்காது. பார்க்கிற மாதிரி
எடுப்பார்களா பார்ப்போம். பட விளம்பரத்தில் பெயர் சொல்லும்படி ஒருத்தரும் தெரியவில்லை. எல்லாம் புதுமுகம் போல் தெரிகிறது.

என்ன மேட்டர்னா இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுமா?
சன் டிவியில் அவர்கள் படத்திற்கு செய்யும் விளம்பரத்தை இந்த தலைப்பில் கற்பனை செய்து பாருங்கள்.' சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம்'

சும்மா அதிருதில்ல


மீண்டும் சந்திப்போம்.

உல்டா கவிஞர்கள்

ஒன்றை பார்த்தால் அதற்கு உல்டாவாக யோசிப்பதற்கென்றே ஒரு
கூட்டம் உள்ளது.


'உன் நன்பர்களை பற்றி சொல், உன்னை பற்றி சொல்கிறேன்' என்று ஒருவர்
ஆரம்பித்தால் 'உன்னை பற்றி சொல், உன் நன்பர்களை பற்றி சொல்கிறேன்'
என்று ஒரு குருப்பே கிளம்பி விடுகிறது.
சமீபத்தில் அதை போல் ஒன்று பத்திரிகைகளில் பார்க்க நேர்ந்தது.
இப்ப நாம சகஜமா பார்க்கிற கவிதைங்ற தலைப்பில் வருகிற கவிதை மாதிரி,
வரிசை படுத்தின வரிகள் மாதிரியான பொன்மொழி மாதிரியான ஒன்று.
நான் நுனிப்புல் மேய்பவன் என்பதால் வரிகள் குத்துமதிப்பாக தான் உள்ளது.'கிளி ஜோஸ்யம் பாருங்கள், கிளிக்கு சிறிது நேரம் விடுதலை கிடைக்க' என்று
ஒருத்தர் எழுத பின்னாடியே ஒருத்தர் ஆனியே பிடுங்கவேணாம்ங்கற மாதிரி
'கிளி ஜோஸ்யமே பார்காதீர்கள், கிளிகள் சுத்ந்திரமாக இருக்கட்டும்' என்று
எழுதியிருந்தார்.

இதை பத்தி மல்லாக்க படுத்துக்கிட்டு Fanஐயே பாத்துக்குட்டு
யோசிச்சுக்கிட்டே ! ! ! இருக்கும்போது மடார் ஒரு விஷயம் தோணுச்சு.
நாம முடிவெடுக்கிற பல விஷயங்களும் இப்படி தான் இருக்குது. பேயை
பாத்தாச்சு, இப்ப பிசாசை பாப்போம் என்றோ, இருக்கிறதுல யார் கொஞ்சமா
கொள்ளையடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று பலர்
கிளம்பினால், யாரும் வேணாம் '49 O' போடுகிறேன் என்று சிலர் கிளம்புகிறாங்க.
இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 'சிலர்' 'பலர்' ஆவது நல்லது போல் தோண்றது.
முழுசும் படிச்சு முடிச்சீங்கனா ஏதாவது சொல்லிட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...