28 July, 2011

சீனப் பெருஞ்சுவருக்கு போட்டி

                                                       
                                                              Space இல் இருந்து பூமியை பார்க்கும் போது
மனிதன் உருவாக்கிய விஷயங்களில் கண்ணுக்கு தெரியும் ஒரே விஷயம்
சீன பெருஞ்சுவர் மட்டும் தான். நாமல்லாம் அத செய்தியா படிச்சா UAE
மன்னர் குடும்பத்தை சேர்த்த Sheikh HAMAD Bin Hamdan Al Nahyan  எரிச்சலா
படிச்சாரு போல.





                                                           நம்மாளுங்க பஸ், தியேட்டர், கக்கூஸ்
அப்படினு எங்க போனாலும் போன வேலையை விட்டுட்டு பொறுமையா
அவன் பேரு, அவனுக்கு பிடிச்ச பேருன்னு பொறிச்சிட்டு வராங்கல்ல,
அத ஷேக்கு எங்க பாத்தாருன்னு தெரியல ஒரு கூட்டத்தோட அவருக்கு
சொந்தமான தீவுக்கு கிள்ம்பிட்டாரு.



                                                           கிட்டத்தட்ட சுமார் ஒரு கிலோமீட்டர் உயரம்,
மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு அவர் பெயரை எழுதி வைச்சுட்டாரு.
முழு பெயரை எழுதினா தீவு பத்தாது நினைச்சாரோ என்னமோ அவரோட
பெயர் சுருக்கமான "HAMAD" யை எழுதி வைச்சிருக்காரு. இந்த 5 எழுத்தே
இவ்வளவு பெரிசு. இது தான் Satellite ல இருந்து பாத்தாலே தெரியுதாம்.
இதுல முதல் 2 எழுத்து " H,A" அப்புறம் "M" ல பாதி எழுத்துல கடல் தண்ணீர்
ஒடற மாதிரி கிட்டத்தட்ட வாய்க்கால் மாதிரி செட் பண்ணி வைச்சிருக்காரு.




                                                          இதுக்காக சுமார் 99 ஆயிரம் கோடி ரூபாய் வரை
செலவு செய்திருக்கிறார். ஆனா பணம் ஒரு மேட்டரே இல்ல, என் பேரு
பெரிசா தெரியனும்னு சொல்லியிருக்கிறார் மனுசன்.  பீச் மணல்ல
விளையாடிட்டிருக்கிற  பிள்ளைஙகளா, எக்குதப்பா காசை வைச்சுக்கிட்டு
பேரை பேராக்க ஒவ்வொருத்தரும் என்னா பாடு பட்றாங்க பாத்தீங்களா.



                                                         ஹமத் இது மட்டுமில்லாம அவரு வைச்சிருக்கிற
200 காரை நிப்பாட்ட பிரமாண்டமா பிரமிட் டைப்பில பார்க்கிங் கட்டிருக்கிறாரு.
சும்மா 50 டன் எடையில நாலஞ்சு பெட்ரூமோட டிரக் வைச்சிருக்காராம்.
டிரக்குல எதுக்கு பெட்ரூம்? இப்ப எல்லாத்தையும் தூக்கி சாப்பிடற மாதிரி
பெயர் எழுதி வைச்சிருக்கிறாரு. பாத்துப்பா பேரை பாத்துட்டு Aliens யாரும்
வந்துரபோராங்க.



கிளம்புறதுக்கு முன்னாடி ஓட்டு, பதில்  
எதையாவது போட்டுட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.

5 comments:

  1. என்ன இது இவர் பெயர் இப்படி எல்லம் பெயர் ஆகனுமா?

    ReplyDelete
  2. do you know who am i? dont play with cast otherwise see you later

    ReplyDelete
  3. It look like (Hai mad)HaMad wasting so much money :(

    ReplyDelete
  4. He is not from U.A.E sheikh. He is ruler of Qatar.
    Please don't spoil our u.a.e. sheikhs.

    ReplyDelete
  5. @Anonymous
    நன்பரே, எனக்கும் UAE க்கும் என்ன வாய்க்கா தகராறா? சும்மா சொல்ல, wikipedia வில் தேடினாலும் அவர் UAE ஐ சேர்ந்த Abu Dhabi Ruling Family என்று தான் காட்டுகிறது. சரி பார்த்துக் கொளளுங்கள்.

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...