29 September, 2011

இளையராஜாவின் வரலாற்றுச்சுவடுகள்

                                                                           இசைஞானி  இளையராஜாவின்
வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களை தொகுத்து தினத்தந்தி
தனது வரலாற்றுச்சுவடுகள் பகுதியில் வெளியிட்டு வந்தது. அதன்
தொகுப்பு PDF பைலாக பல ஆண்டுகளாக நெட்டில் வலம் வந்து
கொண்டிருக்கிறது.  இது வரை படிககாதவர்கள் படியுங்கள். ஏற்கனவே
படித்தவர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.










மீண்டும் சந்திப்போம்

                                                                                 


 


27 September, 2011

கண்ணாமூச்சி ஆடும் சதுரங்கம்

                                                                  படம் எடுப்பதே பெரிய போராட்டமாய்
இருக்கும் போது எடுத்தும் வெளி வராமல் இருக்கும் படங்கள் ஏராளம்.
அதிலும் ஓரளவுக்கு சொல்லும்படியான 'பார்த்திபன் கனவு' கொடுத்தும் கரு.பழனியப்பன் அடுத்து எடுத்த படமான 'சதுரங்கம்'  இன்னும் பூச்சாண்டி
காட்டிக்கொண்டிருக்கிறது.



                                                               2004 ல் எடுக்கப்பட்ட சதுரங்கம் 'விரைவில்'
என சமீபத்தில் விளம்பரம் செய்துள்ளனர். ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால்
நடித்து வித்யாசாகர் இசையில் கரு.பழனியப்பன் இயக்கியுள்ள இந்த படம்
ஒரு பத்திரிக்கையாளனின் சவால் மற்றும் காதலை சொல்லுகிறது.
ஆனால் இப்படத்தின் ஹீரோ ஸ்ரீ காந்த் தற்போது 2வது ஹீரோ,3வது ஹீரோ
என்ற ரீதியில் போய்விட்டார். கரு.பழனியப்பனுக்கும் சொல்லும்படி படம்
இல்லை. ஹீரோயின் சோனியா அகர்வால் காதலித்து,கல்யானம் செய்து
டைவர்சும் ஆகி இப்போழுது கொஞ்சம் அழகாக வேறு ஆகி விட்டார்.

                                                                 பாடல்கள் பாரதியார் ( ஆடுவோமே ),
பா.விஜய்,யுக பாரதி, அறிவுமதி எழுதியுள்ளனர்.பாரதியார் தவிர்த்து மற்ற
பாடல்கள் யார் யார் எழுதியது என்ற விஷயம் தெரியவில்லை.


           

                                                                 இதில் நிச்சயம் குறிப்பிடபட வேண்டியவர் இசையமைப்பாளர் விதயாசாகர். பாடல் வெளியான காலகட்டத்தில் இந்த
படத்தின் பாடல்கள் தான் நான் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
பாடல்களுக்காகவே படத்தையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். குறிப்பாக
2 பாடல்கள் விழியும்,விழியும் மற்றும் என்ன தந்திடுவேன் பாடல்கள்.


                                                               முதலில் விழியும்,விழியும் பாடல்.எந்த ஒரு
விஷயத்திலும் குறை சொல்ல முடியாதபடி இசை,குரல்கள்,வரிகள் என
சகல துறைகளிலும் முழு திருப்தி தரும் பாடல். காமத்தீ ஊற்றி எழுதிய
பாடல் தனி ரசனை. பாடல் வரிகளை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
கவிஞர் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.



                                                             

                                                                                         அடுத்துள்ள டூயட் பாடலான
என்ன தந்திடுவேன் பாடல் நல்ல மெலடி. 2வது சரணத்தில் வரும் அந்த
'தன தோம் தனன'  ஹம் வித்யாசாகரின் ஸ்பெசல் மயக்கம். மற்ற பாடல்கள்
சுமார் ரகம் தான் என்றாலும் இந்த 2 பாடல்களை கேட்டுப் பாருங்கள்.
நீங்களும் படத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்

மீண்டும் சந்திப்போம்.


                                                                 

20 September, 2011

இளையராஜாவின் சினேகாவீடு

                                                இளையராஜாவின் புது மலையாள படம்
சினேகாவி(வீ?)டு  பாடல்கள் வெளியாகியிருக்கிறது. மோகன்லாலின்
300வது படம் என சொல்லப்படுகிறது. இயக்கம் - சத்யன் அந்திக்காடு.



                                                                          பொதுவாக மலையாள படம் என்றால்
இளையராஜாவின் இசையும் நல்ல மெலடியாகவே இருக்கும். இந்த படத்தில்
வழக்கமான இளையராஜாவே தெரிகிறார். ஸ்ரேயாகோஷலின் 'ஆவணிதும்பி'
பாடல் கேட்க கேட்க இனிமை. 'சந்திரபிம்பத்தின்' (ராகுல் நம்பியார்,ஸ்வேதா)
ரசனையான டூயட்..


                                                         அப்பப்ப தமிழுக்கும் வாங்க ராஜா சார்.

மீண்டும் சந்திப்போம்.


11 September, 2011

கூகிளின் புதிய தேடல் மற்றும் கமலின் காதலர்

                                                             முதலில் ஒரு  புகைப்படம். இது  நெட்டில் துழாவிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது. கமலை மிக அழகாக
வரைந்திருந்தார்கள். அந்த படம் கீழே




                                                                             சூப்பரா இருக்கில்ல! நானும் இது மாதிரி
தான் வரையனும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். என்ன ஒரு சிக்கல்னா?
நமக்கு எப்பவும் மாடர்ன் ஆர்ட் தான் வருது. அதாவது நான் ஒன்னு வரைஞ்சா
அது ஒரு மாடர்னா போகுது. சரி இந்த மாதிரி வேற படம் இருக்கானு கூகிள்ல
தேடும் போது கூகிளோட இந்த (புது!)  வசதி என் கண்ணுல பட்டுச்சு.இது எனக்கு
எப்பவோ தெரியும் சொன்னீங்கன்னா!  ஏன் எனக்கு அப்பவே சொல்லலைனு
கேட்பேன்னு இப்பவே சொல்லிட்டேன்.


                                                                          பொம்பள பிள்ளைங்கள விட அதிகமா
கண்ணுல பட்ற கூகிளோட ஹோம் பேஜில் 'இமேஜஸ்' கிளிக்கி விட்டு   பார்த்தால் வரும் ஸ்கீரினில் உள்ள Search bar ன் கடைசியில் (நீலக்கலரில்
வட்டமிட்டுள்ளது) கேமராவில் (கேமரா தான அது?)  கிளிக் செய்யுங்கள்.





                                                            கொஞ்சம் பெரிதாக வரும் சர்ச் கட்டத்தில்
இரண்டு ஆப்சன்கள் உள்ளது. முதலில் உள்ள ஆப்சன் படி நாம் தேட
விரும்பும் போட்டாவின்  URL இருந்தால் அதை பேஸ்ட் செய்து தேடலாம்.
அடுத்த ஆப்சன் மூலம் நமது கணினியில் உள்ள படத்தை அப்லோடு செய்து
தேடிப் பார்க்கலாம். நம்மிடம் உள்ள போட்டாவை டிராக் செய்து சர்ச் கட்டத்திற்குள் விட்டாலும் போதும்.

                                 
                            
                                                                                  நாம் கொடுத்த புகைப்படம் உள்ள
தளங்களை காண்பித்து விடுகிறது. நான் அது போல் முதலில் பார்த்த கமல் படத்தை கொடுத்து  பார்த்த போது அவரின் தளத்தை பார்த்தேன். மனுசன்
கமல் பிறந்ததில் இருந்து அவர் ரசிகரா இருப்பார் போலிருக்கு. களத்தூர்
கண்ணம்மாவிலிருந்து இப்ப இருக்கும் கமல் வரைக்கும் வரைஞ்சு தள்ளி
இருக்கிறார்.

சில படங்கள்




















                                                                                     வேறு பல இயற்கை காட்சிகளையும்
வரைந்திருக்கிறார். அவரின் தளத்திற்கு சென்று பாருங்கள்


                                                http://latchuart.wordpress.com/


மீண்டும் சந்திப்போம்.


10 September, 2011

மதுரை - எப்படி இருந்த நான் ! இப்படியாயிட்டேன்.

                                                           

                                                                              வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள
மதுரை உலகின் மிக தொன்மையான நகரங்களில் ஒன்று. தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும்  உலகின் மிக சில ஊர்களில் ஒன்றான இந்த ஊர் சுமார் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது.



                                                                        பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள்,
ஆங்கிலேயர்கள் என பலர் ஆட்சி செய்திருந்தாலும் பாண்டியர்கள் மற்றும்
நாயக்கர்கள் ஆட்சியில் தான் மதுரை சொல்லும்படி கொஞ்சம் வளர்ச்சி
அடைந்து இருக்கிறது. குறிப்பாக திருமலை நாயக்கர் காலம்.

 







மதுரையின் பழைய படங்கள்


  












அமெரிக்கன் கல்லூரி

அன்றும்                                                                      




இன்றும்



 மதுரை இன்று






 மதுரையின் இன்றைய வரைபடம்




மீண்டும் சந்திப்போம்


.

03 September, 2011

நாமே வரைந்து அனிமேஷன் செய்யலாம் எளிதாக

   
                                                                   


                                                                      கார்டூன் கேரக்டர் போல் நாமே
வரைந்து அதை சிம்பிளாக அனிமேட் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
 அழகாக வரைய வேண்டும் என்று அவசியமில்லை. என்ன? சில நேரம்
பேய் ஆடுற மாதிரி இருக்கும்.அவ்வளவு தான்.




1) தலை வரைய வேண்டும் என்றால் 'HEAD' ஐ கிளிக் செய்து அந்த
     கட்டத்திற்குள் வரைய வேண்டும். எல்லா பாகத்திற்கும் அப்படியே.

2) பிரஸ் செலக்ட் செய்தால் கலர் செலக்ட் செய்து கொள்ளலாம்.

3)  பென்சிலுக்கு நோ கலர்.

4)  எல்லாம் வரைந்து முடிந்தவுடன் 'ANIMATE'  கிளிக் செய்து நாம் வரைந்த
      படம் வீடு கட்டி ஆடுவதை பார்த்து ரசிக்கலாம்.

5)  'RESET' கிளிக் செய்து மறுபடி புதிதாக உருவாக்கி பார்க்கலாம்..

மீண்டும் சந்திப்போம்

02 September, 2011

சூப்பர் பிகர்ஸ்

                                                                                             பிகர்ஸை கரெக்ட் ப்ண்றது ஒரு தனி கலை. சிலருக்கு மட்டுமே அது இயல்பா வருது.   நிறைய பேருக்கு அது மலைப்பான விஷயம் தான். நான் இந்த விஷயத்தில Majority பக்கம் தான்.

                                                                        நான் சொன்னது முழுக்க, முழுக்க கணக்குல
வர்ற பிகர்ஸை பத்தி தான். நீங்க வேற எதையாவது கற்பனை பண்ணி வைச்சா
நான் பொறுப்பில்ல. எதையோ தேடிட்டு இருக்கும் போது இது கண்ணுல பட்டுச்சு.  நான் சொன்னா கேட்க மாட்டீங்கன்னு இலியானா டீச்சரே வந்திருக்காங்க. அப்பவாவது படிங்க.











                 

           





மீண்டும் சந்திப்போம்

01 September, 2011

வித விதமாய் விநாயகர்

                                                                       எந்த கடவுளுக்கும் இல்லாத தனி சிறப்பு ஒரு கடவுளுக்கு உண்டு. இஷ்டத்துக்கு எப்படி வேண்டும் என்றாலும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். கேள்வியே கிடையாது.அவரு யார். நம்ம பிள்ளையார்.


                                                                     வீணை இல்லை, மேற்கு பக்கமா பாக்கிறாரு, உக்காந்திருக்க மாட்டாரு அப்படின்னு எந்த Complaintம் கிடையாது. வரைய தெரியாதவங்க கூட குத்து மதிப்பா வரைஞ்சுட்டு Design னு சொல்லிக்கலாம். அந்த மாதிரி எல்லாம் இல்லாம உண்மையிலேயே சூப்பரா இருக்கிற விநாயகரோட படங்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு. உங்கள் பார்வைக்கு.



















































மீண்டும் சந்திப்போம்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...