23 July, 2011

இளையராஜா வைரமுத்து விரிசல் பற்றி பாரதிராஜா

                                   சமீபத்திய பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இளையராஜா வைரமுத்து  விரிசல் பற்றி பாரதிராஜாவிடம் கேட்ட போது
'கலைஞர்களுக்குள் சண்டை வருவது சகஜம், ஆனால் நீங்கள் தான்
அதை பெரிது ஆக்கி விட்டீர்கள்.' என்று பத்திரிக்கைகளை குற்றம் சாட்டி இருந்தார்.


           இப்பவாவது மீடியாவை பற்றி தெரிந்து கொண்டீர்களா ராசா!


                                                         
                                                           இளையராஜா வைரமுத்து சண்டை  
எதுக்குன்னு இன்னக்கி வரைக்கும் அலிபாபா ரகசியமா  இருந்தாலும் 
டபால்னு ஒரே நாள்ல நட்பு உடைஞ்சிருக்காது. சின்ன சின்ன உரசல்கள்  
ஒரு நாள் ஒன்னு கூடியிருக்கும்.

                        ஆனா உரசல்களுக்கு இடையிலும், அதற்கு முன்னாலுமான
அவர்களின் நட்பு  ரொம்பவே ஆழமா தான் இருந்திருக்கனும். அவர்களின் பழைய புகைப்படம் ஒன்னு கீழே உள்ளது.அந்த போட்டாவில் அவர்களின் விரல்கள் கோர்த்துள்ளதை பாருங்கள் எவ்வளவு அன்னியோன்யம் தெரிகிறது.

                                                      பழைய நினைவுகள் பல கதைகள் சொல்லும்.
இந்த போட்டாவை பார்த்ததும் அவர்களுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்து உடனே ஒரு போனை போட்டு  நண்பா எப்படியிருக்கனு கேட்டு ஒண்ணு
கூடி இதுக்கெல்லாம் காரணம் நான் தான்னு எனக்கு விழாவெல்லாம் எடுக்க வேணாம். சேர்ந்துட்டீங்கனு கேள்வி பட்டா போதும். சந்தோசம்.

              சட்டுபுட்டுனு ஒரு முடிவு எடுங்க, நாளாகி போச்சுல்ல.


 இந்த படம் சும்மாக்காச்சுக்கும் போட்டு வைச்சியிருக்கேன்.

 நிஜம் விரைவில்
கிளம்புறதுக்கு முன்னாடி ஓட்டு, பதில்  
எதையாவது போட்டுட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.20 comments:

 1. "எதையாவது போட்டுட்டு போங்க"னு...ஒரு தர்மசங்கடமான நெலமைக்கு உள்ளாக்குறீங்களே!!!
  புகைப்படங்கள் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!!

  ReplyDelete
 2. @அனு
  உங்க கிட்ட இருந்து ஒன்னு வாங்கறதுக்குள்ள நான் பட்ற பாடு இருக்கே ! ஒரே கஷ்டமப்பா!!!

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 3. kasa,panama inthanka. Old friendship should be renewed. Samy

  ReplyDelete
 4. @Samy

  நன்றி நன்பா

  தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 5. வோட்டும் போட்டுட்டேன். வோட்டு மட்டும் தான் போடணும இல்ல வேட்டும் போடுனுமா?

  ReplyDelete
 6. @MANASAALI

  வோட்டுக்கு நன்றி

  வேட்டுக்கு வெட்டு

  ReplyDelete
 7. ஏன்யா, நாங்க என்னா ஜாதி, அந்த ...... என்னா ஜாதி?
  அந்தப்பயலுவோ கிட்ட நாங்க ஒட்டி ஒரசணுமாக்கும்

  நாலு காசு, கொஞ்சம் புகலு சேந்திட்டா போதுமா?
  தேவனுக்கு சமமாயிடுவானுங்களா இந்த ம....னுங்க

  ReplyDelete
  Replies
  1. ஜாதியை மட்டும் வைத்து நட்பு
   பாராட்டும் சமூகத்தை இணையம் வரை கொண்டு வர வேண்டாம்.

   Delete
 8. @Anonymous
  எத்தனை யுகங்கள் கடந்தாலும் முதல்
  மரியாதை,அலைகள் ஓய்வதில்லை
  etc., மூவரின் திறமையை மட்டுமே காட்டி நிற்கும், அவர்களின் ஜாதியை அல்ல.
  ஜாதியை மட்டும் வைத்து நட்பு
  பாராட்டும் சமூகத்தை இணையம் வரை கொண்டு வர வேண்டாம்.

  ReplyDelete
 9. Minmalar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  @Anonymous
  எத்தனை யுகங்கள் கடந்தாலும் முதல்
  மரியாதை,அலைகள் ஓய்வதில்லை
  etc., மூவரின் திறமையை மட்டுமே காட்டி நிற்கும், அவர்களின் ஜாதியை அல்ல.
  ஜாதியை மட்டும் வைத்து நட்பு
  பாராட்டும் சமூகத்தை இணையம் வரை கொண்டு வர வேண்டாம்.
  July 24, 2011 1:45 PM  சொந்த பேர்ல கருத்து சொல்ல தைரியம் இல்லாத கோழை சமுதாயத்தை சேர்ந்த இவர்களுக்கு எல்லாம் பதில் பின்னுட்டம் போட்டு ஏன் நேரத்தை வீணடித்து கொள்கிறாய். போன ஆட்சியில் அழகிரி முன்னால் கூட அல்ல பின்னாலும் கை கட்டி நின்றவர்கள் தானே இவர்கள். அழகிரி முன் பவ்யம் காட்டிய இவர்களுக்கு அழகிரி என்ன சாதி என்று தெரியாதா?

  ReplyDelete
 10. @Anonymous
  are u mental?????the maestro is introduce the vairamuthu otherwise he is invisible man..ok..first try to understand this..yow ennaiya sathi netlula comments write pandra alavuku education irunthum arivu illayee.....yow poya unnaiyellam innum 100 varusam aanalum thiruthamudiyathu...

  ReplyDelete
 11. புகைப்படங்கள் அருமை.பதிவும் கூட...

  ReplyDelete
 12. தனுஷ் ரஜினியின் மகளையும், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயையும் கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்னர் என்ன சொன்னார்கள் தெரியுமா? அந்த ஜோடிகளுக்கு நடுவே காதலே இல்லையாம், பத்திரிக்கை காரர்கள் காதல் இருப்பதாகக் கதை கட்டி விட்டார்களாம், இந்த மாதிரி ஊர் முழுக்க பேச்சு அடிபடுகிறதே என்ன செய்வது என்று யோசித்து பின்னர் வேறு வழியில்லை என்று கல்யாணம் பண்ணிக் கொண்டார்களாம். அப்புறம் முன்னால் முதல்வர் கருணாநிதி ஒன்னு சொன்னார். அவரது கட்சியின் கொ.ப.செ ராசா அப்பாவியாம், பத்திரிகைக் காரர்கள் அவர் மீதும், கனி மீதும் வீண் பலி சுமத்தி எழுதி ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்களாம். அவரது கட்சி தோற்றதே இவர்கள் எழுதித் தானாம்!! இப்போ பாரதி ராசா இன்னொருகதையைத் தூக்கிட்டு வந்திட்டார். இளைய ராசாவும், வைரமுத்துவுக்கும் நடுவுல எந்த பிரச்சினையும் இல்லைன்னா போது மேடைகளில் ரெண்டு பெரும் கட்டிப் பிடித்துக் கொண்டு நீங்கள் நினைப்பது தவறு என்று நிரூபிக்கலாமே, ஏன் செய்வதில்லை? அது கூட பரவாயில்லை, இளைய ராஜாவின் தாயார் மறைந்த போது கூட அங்கு வந்த வைரமுத்து, இளையராஜா, பாரதிராசா எல்லோரும் நவகிரகம் மாதிரி வெவேறு திசைகளில் மூஞ்சியை வைத்துக் கொண்டிருந்தது ஏனோ? கேக்குறவன் கேனையனா இருந்தா எருமை எரோபிலான் ஓட்டுதுன்னு கதையலப்பானுங்க.

  ReplyDelete
 13. ஒரு சமயம் இளையராஜா தனது வீட்டில் வருமான வரி ரெய்டு வருவார்கள் என நினைத்து வைரமுத்துவிடம் ஒரு கணிசமான தொகையை கொடுத்து இருந்ததாகவும் பின் இளையராஜா கேட்ட போது அதை திருப்பித் தரவில்லை எனவே சண்டை வந்ததாகவும் அந்த கால குமுதம் கிசு கிசு வில் படித்த நினைவு.நம்பிக்கை துரோகம் செய்தவரை அவர் எப்படி மறப்பார்?எப்படி சேருவார்?

  ReplyDelete
 14. @T G Ramamurthy
  நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தங்கமுட்டையிடும் வாத்தை
  அறுத்து பார்க்கும் அளவுக்கு வைரமுத்து
  இருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்
  இந்த விஷயத்தை நான் நம்பவில்லை.
  வேறு ஏதோ காரணங்கள். காலம் தந்த இடைவெளியில் இருவரும் நிறைய பக்குவப்பட்டு இருக்கிறார்கள்.பார்ப்போம்.

  ReplyDelete
 15. manitharkalukku matham pidiththuvittatho onrdru isai matham ondru kavithai matham nasungiyathu naame

  ReplyDelete
 16. manitharkalukku matham pidiththuvittatho onrdru isai matham ondru kavithai matham nasungiyathu naame

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி!

   Delete
 17. அன்புள்ள அய்யா,

  வணக்கம். இளையராஜா வைரமுத்து விரிசல் பற்றி பாரதிராஜா
  சொல்லியவற்றைப் படித்தேன். இசைஞானியும் + கவியரசரும் மீண்டும் கூட்டணி சேர்ந்தால்...எவ்வளவு நன்றாக இருக்கும்...! நல்ல பாடல்கள் நிரம்பக்கிடைக்கும்... அந்தக் காலம் வரவேண்டும். ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் .... வியக்க வைத்துவிட்டீர்கள்.

  அருமை. அனிமேஷன் படங்களையும் ரசித்தேன்.

  நன்றி. வாழ்த்துகள்.

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...