27 October, 2011

கங்குலியா யாரது?

                                                                இந்தியா-இங்கிலாந்து கடைசி ஒரு நாள்
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால் பிட்ச் ரிப்போர்ட் சொல்வதற்காக
ஈடன் கார்டன் மைதானத்திற்குள் நுழைய முயன்ற சவுரவ் கங்குலியை
ICC ஊழல் தடுப்பு அதிகாரி தடுத்து நிறுத்தி விட்டாராம்

                                                                 எவனா இருந்தா எனக்கென்ன? ID Card இருந்தா
தான் உள்ளே விடுவேன் அப்படின்னு சொல்லியிருந்தா கூட ஏதோ கேப்டன்
படம் பார்த்த Feeling ல் புல்லரித்து போயிருக்கலாம். ஆனா கங்குலியை பார்த்து
நீங்க யாருன்னே தெரியல!  அப்படின்னுட்டாராம். பிறகு கங்குலி ரூமுக்கு போய் அடையாள அட்டையை கொண்டு வந்து காட்டிய பிறகே திருப்தி அடைந்து உள்ளே விட்டாராம்.





                                                                 வங்கப்புலி, லோக்கல் ஹீரோ என ஏகப்பட்ட
பில்டப்புடன் (ஈடன் கார்டனில்)  உள்ள கங்குலிக்கே இந்த நிலைமை. தடுத்த
ஐ.சி.சி அதிகாரியின் பெயரை (தர்மேந்திர சிங் யாதவ்) பார்த்தால் இந்தியரை
போல் தான் தெரிகிறது. இவர்கள் தான் கிரிக்கெட்டில் ஊழலை தடுக்க போகிறார்களாம். விளையாடும்,விளையாடிய வீரர்கள் யார்? அவர்களை பார்க்க  வரும் வி.ஐ.பி க்கள் யார், பேரம் பேச வரும் புரோக்கர்கள் யார் என்று
எப்படி கண்டு பிடிப்பார்கள். பார்த்து, தோனியை ஒரு நாள் வெளியே நிறுத்தி
விடப்பொகிறார்கள். அப்புறம் டாஸ் போட வேற ஆள் தேட வேண்டி இருக்கும்.
 
                                  ஆனால் மேட்ச் பிக்ஸிங் நபர்களை மட்டும் 
                                     கரெக்டாக உள்ளே விட்டு விடுவார்கள். 


மீண்டும் சந்திப்போம்.



6 comments:

  1. ஆனால் மேட்ச் பிக்ஸிங் நபர்களை மட்டும்
    கரெக்டாக உள்ளே விட்டு விடுவார்கள். //

    சரியான சாட்டையடி வரிகள்....

    ReplyDelete
  2. இவர்கள் எல்லாம் ஊழல் தடுப்பு அதிகாரிகள்.....அடையாள அட்டையை காட்டினால் உள்ளே விடுவேன் என்று சொல்லியிருந்தல் பரவாயில்லை...கங்குலியை தெரியாது என்றால்...இவருக்கு ஏன் ஊழல் தடுப்பு அதிகாரி பதவி.....ஓரு கிரிக்கெட் வீரரை அதுவும் உலக அளவில் இந்திய கிரிக்கெ அணியின் பெயரை உயர்த்திய.....அதிரடி கேப்டன் கங்குலியை தெரியாது என்று சொன்னால்...பிறகு எதற்கு இவருக்கு இந்த பதவி...........கிரிக்கெட் வீரர்கள் யார்...மற்றவர்கள் யார் என்று தெரியாமல் இவர் எப்படி ஊழளை தடுக்கப்போகின்றார்....இவருக்கு சச்சினையாவது தெரியுமா?இல்லை அவரையும் தெரியாது என்று சொல்வாரா?

    ReplyDelete
  3. @K.s.s.Rajhவருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. ஆனால் மேட்ச் பிக்ஸிங் நபர்களை மட்டும்
    கரெக்டாக உள்ளே விட்டு விடுவார்கள்.

    ReplyDelete
  5. ஒரு வேலை ஊழல் செய்யாததனால் தெரியலையோ என்னமோ

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...