16 October, 2011

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்



                                                                ஒவ்வொரு தடவை தேர்தல் வரும் போது
எல்லாம் இந்த சந்தேகமும் எனக்கு வந்துகிட்டே இருக்கு. ஓட்டு
போடுவதற்கு ஒரு நாள் முன்னாடி பிரசாரத்தை நிப்பாட்டனும்னு  சட்டம் போட்டு விடுகிறார்கள் ஆனால் அதற்கு அப்புறமும் எல்லா சானல்களிலும் நியூஸ் காட்டுகிறேன் பேர்வழி என்று பிரசாரம் செய்ததை காட்டி கொண்டே இருக்கிறார்கள்.  இது எந்த கணக்கில் வரும் என்று தெரியவில்லை. ஒரு வேளை டி.வி.,பேப்பர் எல்லாம் மீடியா கிடையாது என்று தேர்தல் கமிஷன் நினைக்கிறதோ என்னமோ?  

                          யாராச்சும் விளக்குங்களேன்.



                                             ஓட்டு போட போகனும் விடுங்கப்பா !



                                                          இதே கணக்கு தான் டாஸ்மாக் கடைகளுக்கும்.
ஒட்டுப்பதிவின் போது எல்லா ஒயின்ஸாப்பிற்கும் லீவு விட்டு விடுகிறார்கள். மற்ற நாட்களில் எப்படி வேண்டுமானால் குடித்து சாவுங்கள்,  ஓட்டு போடும் நாளில் மட்டும் தெளிவாக இருங்கள் என்று சொல்கிறார்களா? இல்லை நம் மக்கள் மட்டையாகி ஓட்டு போட யாரும் வரமாட்டார்கள் என்று கடையை மூடி விடுகிறார்களா?

            யாராச்சும் விளக்குங்களேன்.

 
 இது ஆப்படிக்க !




இது ஆப் அடிக்க !!



டிஸ்கி:

                  தேர்தல் நடைமுறை அறிவித்த பின்னர் எந்த ஒரு சலுகையோ,
திட்டமோ அறிவிக்கக்கூடாது என்று சொல்வாங்க. ஆனால் முதல்வர்
போனஸ் அறிவிச்சிருக்காங்களே. அது எப்படினு விளக்கமெல்லாம்
கேட்க மாட்டேன். கேட்டாலும் வாயா திறக்கப் போறீங்க!



மீண்டும் சந்திப்போம்.

10 comments:

  1. கோழி முதலா முட்டை முதலா என்பது போலத்தான்

    ReplyDelete
  2. அரசியல்லே இது எல்லாம் ச.க.ஜ.ம்.ங்.கோ...!!!!!!

    ReplyDelete
  3. @எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  4. @kannan t m
    என்ன செய்ய?
    நமக்கும் இது சகஜம் ஆயிருச்சே!

    ReplyDelete
  5. மற்ற நாட்களில் குடிச்சிட்டு இருந்தா தான் நாம இந்த பதிவுல உள்ள மாதிரி கேள்வி கேட்கமாட்டோம்னு நினைக்கிறார்களோ? என்னவோ?

    :) :) :)

    ReplyDelete
  6. @Abdul Basith

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. //ஓட்டு போடும் நாளில் மட்டும் தெளிவாக இருங்கள் என்று சொல்கிறார்களா?/

    குடித்துவிட்டால் எங்கே தெளிவான முடிவு எடுத்து விடுவார்களோ என்ற அச்சம் தான் காரணம்.
    குடிக்க வி

    ReplyDelete
  8. //ஓட்டு போடும் நாளில் மட்டும் தெளிவாக இருங்கள் என்று சொல்கிறார்களா?/

    குடித்துவிட்டால் எங்கே தெளிவான முடிவு எடுத்து விடுவார்களோ என்ற அச்சம் தான் காரணம்.
    குடிக்க வில்லை என்றால் கை உதறி,குழம்பும் நிலைதான் இன்று இருக்கிறது.

    ReplyDelete
  9. @Learn Tally.ERP 9 in Tamil
    உண்மை தான்.மக்கள் குழப்பத்தில் தான் அரசாங்கமே உருவாகிறது போல!

    ReplyDelete
  10. வெறும் நாளே டாஸ்மாக்ல 15000 கோடி லாபமாம் இப்போ சொல்லவா வேணும்

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...