01 October, 2011

ரத்தத்தின் ரத்தமே

                                                                             பாசம்,கோபம்னு எல்லாத்துக்கும்
சொல்லிக்காட்ட நம்ம உடம்பில ஒன்னு இருக்குன்னா! அது ரத்தம் தான்.
என் ரத்தம்டா!! ன்னு மார் தட்டிக்கிற்வங்களும் இருக்காங்க, ரத்தவெறி
பிடிச்சவனா இருக்கானேன்னு திட்ட்ப்படுபவர்களும் இருக்காங்க. ஆனா
ரத்ததுக்கு இந்த மேட்டரெல்லாம் தெரியாது. உடம்பிலுள்ள செல்களுக்கு
Oxygen,Nutrition ஐ கொடுக்கவும்,Waste களை எடுத்து வருவதும் தான்
ரத்ததின் மிக முக்கியமான பணி. 


                                                                       
                                                                               ரத்தத்தில் கிட்டத்தட்ட 8 வகைகள்
உள்ளன.

  1.  O Positive
  2.  O Negative
  3.  A Positive
  4.  A Negative
  5.  B Positive
  6.  B Negative
  7.  AB Positive
  8.  AB Negative


                                                                         அடிபட்டவுடன் ஒருவருக்கு முதலில்
தேவைப்படுவது  ரத்தம் தான். ஆனால் நம்மால் ஒரு துளி ரத்தத்தை கூட 
செயற்கையாக உருவாக்க முடியாது. இது போன்ற சூழலில் தான் சக மனிதனின் உதவி தேவைப்படுகிறது. சராசரி மனிதனின் உடலில் சுமார்
5 லிட்டர் ரத்தம் உள்ளது. நாம் ஒரு தடவை ரத்தம் கொடுக்கும் போது
சுமார் 350 மில்லி லிட்டர் மட்டுமே எடுக்கப்படுகிறது. அதுவும் 24 மணி
நேரத்தில் மறுபடி ஊறி விடும்.  நாம் இழக்கும் ரத்த சிவப்பணுக்கள் 60
நாட்களுக்குள் சீராகிவிடும்.



சில விபரங்கள்.

           ரத்தம் கொடுக்க 10 நிமிடம், ஒய்வுக்கு 20 நிமிடம் ஆக 30 நிமிடம்
                         செலவழித்தால் போதும்.

           ரத்தம் கொடுப்பதால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

           ரத்தம் கொடுப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எந்த போதைப்
                          பொருட்களையும் உபயோகப்படுத்தியிருக்ககூடாது.
                            ( எப்பவும் USE  பண்ணலனா நமக்கும் நல்லது.)

            இதய, சிறுநீரக, நுரையீரல், ஆஸ்துமா நோயாளிகள் மற்றும்
                         கர்ப்ப காலத்தில் உள்ளவர்கள் ரத்தம் கொடுக்ககூடாது.

             வயது 18 க்கு மேலும் (சட்டத்திற்காக) , 65 க்கு உள்ளேயும் இருக்க
                           வேண்டும்.


              ரத்தம் கொடுத்து 3 மாதங்கள் சென்ற பின்னரே அடுத்த ரத்தம்
                           கொடுக்க  வேண்டும்.


                                                                                    என்ன திடீர்னு இதெல்லாம் என்பவர்களுக்கு இன்று (அக்டோபர் 1) இரத்தக்கொடையாளர்கள் தினம்.
ரத்தம் கொஞ்சம் கொடுத்து நாமும் கொண்டாடலாமே!.


                                                      "சுண்டுனா ரத்தம் வருமா?"
                                        
மீண்டும் சந்திப்போம்

7 comments:

  1. நீங்கள் எத்தனை முறை ரத்ததானம் கொடுத்தீர்கள்?

    ReplyDelete
  2. @kannan t m
    என்னது சின்னப்புள்ளதனமா?
    நல்லது சொன்னா கேட்கனும்.
    கேள்வி கேட்கக்கூடாது.

    ReplyDelete
  3. ஆகட்டும் ஐயா நீங்கள் தொடருங்கள்

    ReplyDelete
  4. பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல் ஏதாவுது?

    ReplyDelete
  5. மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
    www.shareblood.in


    இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
    பலருக்கும் பேருதவியாக இருக்கும்

    ReplyDelete
  6. @Surya
    தளத்தை பார்த்தேன். அருமையான சேவை செய்கிறீர்கள், தெரிந்தவர்களுக்கும்,தேவைப்படுபவர்களுக்கும் அவசியம் தெரியப்படுத்துகிறேன்.

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...