வசூல்ராஜா படத்தில் கமல்
பரிட்சை எழுதாமல் ஆள் மாறாட்டம் செய்து கிரேசி மோகனைஅனுப்பி
விடுவார். நிஜத்தில் அவ்வப்போது மாணவர்கள் பிடிபடுவதும் சகஜம்.
ஆனால் இப்போது புதுச்சேரி கல்வி அமைச்சர் ! பத்தாவது பரிட்சை !!
எழுதும் போது ஆள் மாறாட்டம் செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
திண்டிவனம் பள்ளியில் புதுச்சேரி கல்வி
அமைச்சர் கல்யாணசுந்தரம் 22ந் தேதி அறிவியல் பரிட்சை எழுதினாராம்.
விஷயம் கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை
சமூக அறிவியல் பர்ட்சை எழுத வருவார் என வழி மேல் விழி வைத்து காத்து
இருக்க மனுசன் வரவேயில்லை. ஆனால் அவருக்கு பதிலா உள்ளே யாரோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி பரவ இப்போழுது அறிவியல் விடைத்தாளையும், சமூக அறிவியல் விடைத்தாளையும் கையெழுத்து வைத்து ஒப்பிட்டு பார்க்கப் போவதாக கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
அதெல்லாம் போகட்டும் விடுங்க,
அரசியல்வாதிகளுக்கு படிப்பு தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகி
விட்டது. ஆனால் கல்வித்துறை அமைச்சரே பத்தாவது பரிட்சை இப்பத்தான்
எழுதப்போறாருங்கறது மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களே கொஞ்சம்
ஓவரா தெரியலை. ஒருவேளை மாணவர்கள் படும் கஷ்டம் புரியனும்னு
பரிட்சை எழுதினாரோ என்னமோ?
வாழ்க ஜனநாயகம்.

மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக