27 January, 2012

காசு மேலே காசு வந்து

விவசாய பொருட்கள் விளைச்சலைப் பொருத்து ஒரு நாள் விலை உச்சத்தில் இருக்கும், மறு நாள் அதல பாதாளத்தில் இருக்கும். ஆனால் செயற்கையாக உருவாக்கப்படும் விஷயங்களில் இது போல் ஏற்றத்தாழ்வுக்கு காரணங்கள் பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில்லறை காசுகள் அந்த ரகம் தான். சில வருடங்களுக்கு முன் சில்லறை காசுகள் சீ,சீ என்று சீரழிந்து கொண்டு இருந்தன. லாரியில் எல்லாம் சில்லறை காசுகள் மூட்டை கட்டி பயணம் செய்தது. ஒவ்வொரு வியாபாரியின் கல்லாவிற்கு கீழே சில்லறை காசுகள் பாக்கட்,பாக்கட்டாக கிடந்தன. இன்று நிலைமை தலைகீழ். சில்லறை காசுகள் வேண்டுமென்றால் 100 ரூபாய்க்கு 10 முதல் 20 கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. 1,2,5 ரூபாய் சில்லறைகளைப் பொருத்து கமிஷன் மாறுகிறது. 

இருந்த சில்லறைகள் எல்லாம் என்ன ஆயிற்று. RBI வழக்கம் போல் கணக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறது. இத்தனை மில்லியன் சில்லறை காசுகள் வெளியிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அடித்த காசுகள் ஒரு ஒழுங்கு முறையில் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. 50 காசுக்கும் 5 ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை, 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை. இப்ப 50 காசை முன்பு வெளியிட்ட சின்ன 10 பைசா சைஸில் வெளியிட்டுள்ளார்கள். ஏன் இந்த கொலவெறின்னு தெரியல.

பொருத்து, பொருத்துப் பார்த்த மும்பை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவங்க சில்லறைப்பஞ்சத்தைப்போக்க அவங்களே கோதாவில இறங்கிட்டாங்க. வேறென்ன சில்லறைக்காசை அவங்களே அடிச்சிக்கிட்டாங்க. நலல வேளையா ஒரிஜினல் காசு மாதிரியே அடிக்காம முன்பக்கம் காசோட மதிப்பும் மறுபக்கம் அவங்க சங்கத்தோட பெயரையும் போட்டு அடிச்சு வெளியிட்டு விட்டார்கள். மும்பையில் அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களில் எல்லாம் ஒரிஜினல் காசுகளுக்கு பதில் இவர்களின் காசுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் புலங்கிக்கொண்டு இருக்கிறது.




RBI யிடம் கேட்டதற்கு எங்களுக்கு இது சம்பந்தமாய் எந்த புகாரும் வரவில்லை என்றிருக்கிறார்கள். ஆனால்  இது ஒன்றும் புதிதில்லை. 1985 ம் வருட குமுதம் இதழில் வந்த துணுக்கு ஒன்று.


டெல்லியில் உள்ள சில்லறைப் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற 10 பைசாக் கூப்பன்களை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். பஸ்ஸில் மட்டுமல்ல, இந்தக் கூப்பன்களைக் கடை, ஓட்டல்,தியேட்டர் எங்கு வேண்டுமானாலும் கொடுத்துத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

சிகரம் வைத்தாற்போல் நான் புது டில்லியை விட்டு புறப்படும்போது பாக்கெட்டிலிருந்த சில கூப்பன்களை ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டான்.
                                                                                                         - ஜி.மோஹன் சந்திரன்.



பெரிய நிறுவனங்களில் சம்பளத்துடன் Cash Coupon என்று கொடுக்கிறார்கள். அதை குறிப்பிட்ட ஸ்டோர்களில் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கிளப்களில் கொடுக்கப்படும் டோக்கன்கள் கூட ஒரு வகையில் இது போன்ற மாற்று ஏற்பாடு தான். ஆனால் என்ன ஒன்று, மும்பை வியாபாரிகள் இந்த தடவை ஒரிஜினல் காசு போலவே தோற்றமளிக்கும்படி அவர்கள் காசை அடித்துள்ளதால் கேள்வி எழுந்துள்ளது.

வருடகணக்காக உள்ள இந்த சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க அரசு எந்த ஒரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. விலைவாசியை தான் குறைக்க மாட்டிக்கிறாங்க, தேவைக்கேற்ற காசு கூட அடிச்சு தர முடியவில்லை.


மீண்டும் சந்திப்போம்.


1 comment:

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...