05 January, 2012

நல்லதம்பியும் நல்லதண்ணி பாட்டிலும்

நல்லதம்பி பஸ் டிரைவரா வேலை செய்து கொண்டிருக்கும் போது நடந்த விஷயம் இது.  ஒரு நாள் நல்லதம்பி பஸ் ஓட்டிக்கிட்டு இருக்கும் போது அவருடன் குப்பை கொட்டிக்கிட்டு இருந்த கண்டக்டர் தண்ணி குடிச்சிட்டு காலி பாட்டிலை நல்லதம்பிகிட்ட கொடுத்து ' ஒரமா போடுங்க, ஊர்ல போய் தண்ணி பிடித்துக்கொள்ளலாம்' என்றார். நல்லதம்பிக்கு சரியான கடுப்பு. பாட்டிலையும், கண்டக்டரையும் மேலேயும், கீழேயும் பார்த்தார்.  நல்லதம்பி லுக்கைப் பார்த்த கண்டக்டர் சிரித்துக்கொண்டே சொன்னார், 'தம்பி,  அதெல்லாம் நான் பார்த்துட்டேன்,  7 தடவை Reuse செய்யலாம் என்று போட்டிருக்கு. நான் 6 தடவை தான் use செய்திருக்கிறேன்' என்றார்.


அதுக்கு நல்லதம்பி ' இதுல மட்டும் இலலை, எந்த Plastic item ஆ இருந்தாலும் அதுல போட்டிருக்கிற நம்பர் Society of the plastic industry (SPI) வரையறை செய்து இருக்கிற தரம் மற்றும் எத்தனை தடவை அந்த plastic- ஐ recycle செய்து கொள்ளலாம் என்கிற விபரங்களை குறிப்பது ஆகும். ( நாம் reuse செய்து கொள்ளும் கணக்கல்ல)




உபயோகிப்பவர்களை பொறுத்தவரை ,பொதுவாக 1,2,3 மற்றும் 4 எண்கள் குறிப்பிடப்பட்டுள்ள பாட்டில்கள் மறு உபயோகத்திற்கு லாயக்கில்லாதவை.
5,6 மற்றும் 7 ஓரளவிற்கு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காது, மேலும் சில தடவை மறு உபயோகம் செய்து கொள்ளலாம். அதற்காக இது மாதிரி உள்ளே இருப்பது தண்ணியா? காபியா? என்று தெரியாத அளவுக்கு மக்கிப்போன பாட்டிலை எல்லாம் யூஸ் செய்யக்கூடாது என்றார். ஒரு பாட்டிலுக்கு இவ்வளவு பெரிய லெக்சரா என்று கடுப்பான கண்டக்டர் 'எனக்கு தண்ணியே வேணாம், அந்த பாட்டிலை தூக்கி வெளியே எறிந்து தொலை! ' என்றார். அதுக்கு நல்லதம்பி ' 4 Track road ல நடுவில செடியா இருக்கிற  பக்கம் தூக்கிப்போட்டா, அதுக்கு தண்ணி ஊத்த வர்றவங்க, பாட்டில்ல சின்ன, சின்ன ஓட்டைப் போட்டு யூஸ் செய்து கொள்வார்கள் என்று சொல்லவும், பஸ் சிட்டியை தாண்டி ரிங்ரோடு வரவும் சரியாக இருந்தது.

4 Track Road க்கு நடுவில அழகா பூ,பூவா பூத்திருக்கிற செடியா நட்டு வைச்சிருக்காங்க. ஆனா நம்ம மக்கள் அதுல ஆடு, மாடுகளையெல்லாம் மேய விட்டுக்கிட்டு இருக்காங்க. அதுங்க மேய்ஞ்சிட்டு,  சாவகாசமா ரோடை கிராஸ் செய்றேன்னு, வேகமா வண்டில போறவங்களையெல்லாம் பீதியை கிளப்பிக்கிட்டு இருக்கு. ஏதாவது விபரீதம் நடந்தால் தான் யோசிப்போம் என்றில்லாமல் இதற்கு உடனே தடை போட்டால் தேவலை. 





ரிங்ரோடு நடுவில சேது மாதிரி ஒரு ஆளு பழைய பாட்டிலை கையில வைச்சிக்கிட்டு  காலி பாட்டில்ல மின்சாரம் எடுக்க முடியுமாங்கிற ரேஞ்சுல ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாரு. அத பார்க்கவும் நல்லதம்பிக்கு சந்தோசம். கையில இருக்கிற பாட்டில அந்தாளுக்கிட்ட போட்டு விடலாம்னு தூக்கிப்போட்டாரு. ஆனா பாருங்க! ,  அடிச்ச காத்துல பாட்டில் விருட்டுன்னு டயருக்கு அடியில போயிருச்சு. டமால்னு ஒரு சத்தம். தீவிர ஆராய்ச்சில இருந்த ஆளு மிரண்டு போயிட்டாரு. சேது இப்ப லேது.


மீண்டும் சந்திப்போம்.


3 comments:

  1. /Track Road க்கு நடுவில அழகா பூ,பூவா பூத்திருக்கிற செடியா நட்டு வைச்சிருக்காங்க. ஆனா நம்ம மக்கள் அதுல ஆடு, மாடுகளையெல்லாம் மேய விட்டுக்கிட்டு இருக்காங்க. அதுங்க மேய்ஞ்சிட்டு, சாவகாசமா ரோடை கிராஸ் செய்றேன்னு, வேகமா வண்டில போறவங்களையெல்லாம் பீதியை கிளப்பிக்கிட்டு இருக்கு. ஏதாவது விபரீதம் நடந்தால் தான் யோசிப்போம் என்றில்லாமல் இதற்கு உடனே தடை போட்டால் தேவலை.


    //


    உண்மை உண்மை

    ReplyDelete
  2. @"என் ராஜபாட்டை"- ராஜா
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...