25 January, 2012

சச்சினுக்கு மேலும் நெருக்கடி

சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் முன்பு ஒரு தடவை கொடுத்த பேட்டியில் 'நான் ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் முதல் தடவை களம் இறங்குவது போல் நினைத்துக்கொண்டு தான் விளையாடுவேன்' என்றார். அதனால் தானோ என்னவோ அவர் தனது 100 வது சதத்தையும் முதல் சதம் அடிப்பது போலவே பதட்டத்துடன் எதிர்கொள்கிறார். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக மனிதன் போராடிக்கொண்டிருக்கிறார். பார்ம் இல்லையென்றாலும் பரவாயில்லை. நல்ல பார்மிலும் இருக்கிறார். சமீப காலங்களில் நடந்த தொடர்களில் இந்திய அணியில் அதிக ரன் எடுத்தவர் அவர் தான். பிறகாலங்களில் சச்சின் சாதனைகள் எந்த அளவுக்கு பேசப்படுமோ, அந்த அளவுக்கு அவரின் பதட்டங்களும் மனோதத்துவ  வல்லுனர்களால் அலசப்படும். சச்சினின் 100 வது சதத்தை எதிர்பார்த்து பொறுமை இழந்தவர்களின் காமெடி கலாட்டா கீழே.அடுத்து பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி

2002 ம் ஆண்டில் சச்சின் மற்றும் கங்குலியை கடத்த திட்டமிட்டதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 6 பேர்களின் மேல் முறையீட்டில் அவர்களின் விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு 8 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே 9 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால் ஒருவர் தவிர மற்ற அனைவரும் விடுதலை செய்யப்படுள்ளனர். ( ஒருவர் மட்டும் தனனை நிரபராதி என அறிவிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளார்.) மேட்டர் என்னன்னா! சச்சினை கடத்த திட்டம் போட்டவரு வெளியே வந்துட்டாரு. சச்சின் 100 வது சதத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கிட்டே இருக்காருன்னு கோபப்பட்டு அவங்களை வெளியே விட்டுட்டாங்களான்னு கேட்கக்கூடாது. அது வேற நியூஸ், இது வேற நியூஸ். சச்சின் இதோ இப்ப செஞ்சுரி போட்டிருவாரு, பார்த்துக்கிட்டே இருங்க.

சச்சின் இன்னும் 100 தடவை 100 அடிக்கவில்லை என்பதால் 1000 பேர் 1000 சொல்வாங்க!., அதை எல்லாம் மனசுல வைச்சுக்காம விளையாட்டிற்கான முதல் பாரத ரத்னா விருது சச்சினுக்கு கொடுத்திருங்கப்பா!. (சச்சின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என நினைக்கிறேன்.) பின்னாடி பீல் பண்ணாதீங்க. வேற எந்த விளையாட்டிலும் உலகம் போற்றும் நபர் இந்தியாவில் இல்லை என்பதை மனசில வைச்சுக்கோங்க.மீண்டும் சந்திப்போம்.


6 comments:

 1. ஹா..ஹா..ஹா... படங்கள் எல்லாம் சூப்பர். நூறாவது சதத்தை சச்சின் நூறு தடவை மிஸ் பண்ணிடுவாரு போல?
  :) :) :)

  ReplyDelete
 2. @Abdul Basith
  வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!

  ReplyDelete
 3. >> வேற எந்த விளையாட்டிலும் உலகம் போற்றும் நபர் இந்தியாவில் இல்லை என்பதை மனசில வைச்சுக்கோங்க.

  விசுவநாதன் ஆனந்த என்று ஒரு உலக சாம்பியன் இருபது உங்களுக்கு தெரியாதா ?

  ReplyDelete
 4. @Anonymous
  நிச்சயமாக அவரை குறை சொல்ல முடியாது. ஆனால் உலக அளவிளான சாதனைகளை கணக்கிடும் போது சச்சின் பெயர் தான் முதலில் நினைவுக்கு வரும்.

  ReplyDelete
 5. இந்த மஹா பெரியவர் சச்சிர் ( மரியாதை நிமித்தம் ) தெண்டுல்கரை இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து வெளியேற்றினால் தான் இந்திய கிரிக்கெட் உருப்படும்.

  ReplyDelete
 6. @Anonymous
  இவ்வளவு வயிற்றெரிச்சலிலும் மரியாதை கொடுக்கனும்னு நினைக்கும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்.

  ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...