23 January, 2012

சென்சார் படங்கள்

பொதுவாக Censor என்ற வார்த்தை Examine செய்வது, தேவையில்லாத விஷயங்களை மறைப்பது போன்ற அர்த்தங்கள் இருந்தாலும் எனக்கு (நமக்கு!) சென்சார் என்றாலே பலான காட்சிகளை தான் நினைவு  - படுத்துகிறது.  சென்சார் போர்டு என்ற அமைப்பே தேவையில்லை என்று சிலரும், சென்சார் போர்டு ஒழுங்காக தங்கள் கடமையை செய்வது இல்லை என்று பலரும் காலங்காலமாக குற்றம் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலும் இல்லை. ஒரு படத்தில் அனுமதிக்கப்பட்ட காட்சி/ வசனம் மற்றொரு படத்தில் மறுக்கப்பட்டுள்ளது. கிளாமரின் அளவுகோலும் படத்துக்கு படம் மாறுகிறது. காரணம் பல இருந்தாலும் யார் படம், யார் ஆட்சி என்பதும் பல விஷயங்களை முடிவு செய்வதால் சென்சார் போர்டை ஒரு நல்ல அமைப்பாக கருத முடியாது என்று தான் தோன்றுகிறது.



முன்பெல்லாம் பாடல் காட்சிகளில் பாடல் வரிகள் நிறைய சென்சார் போர்டால் மாற்றப்பட்டுள்ளது. கேசட்டில் ஒரு மாதிரியான வரிகளும், படத்தில் வேறு மாதிரியான வரிகளும் இடம் பெறும். ஒரு முறை  கமல் மதனுக்கு கொடுத்த Interviewல் நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெற்ற 

'நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால
அத வைக்கிறப்ப சொக்கனும்  தன்னால"

என்று ஆரம்பிக்கும் பாடலில் 'அத வைக்கிறப்ப' என்ற சொல் தப்பான அர்த்தம் வருவதாக சொல்லி சென்சாரில் ஏற்றுக்கொள்ளவில்லை,சாதாரணமாக எழுதிய பாடலை பிரித்து,பிரித்து அர்த்தம் பார்த்தால் என்ன செய்வது? என்றார். ஆரம்பத்தில் இருந்து சென்சார் மேல் கொஞ்சம் கடுப்பில் இருப்பவர் கமல். ( விளையாட முடியலே இல்ல!)   பின்னர் அந்த பாடல் 

" நான் பூவெடுத்து வைக்கனும  பின்னால   
அதில் வஞ்சி மனம் சொக்கனும் தன்னால"

என்று படத்தில் இடம் பெற்றது. (இரண்டாவது வரியில் மட்டும் Recording வித்தியாசமாக கேட்கும்). 'அந்த நிலாவைத்தான் நான் கையில பிடிச்சேன்', 'மலை,மலை. மருதமலை' போன்ற பல பாடல்கள் சென்சாரால் மாற்றம் செய்யப்பட்டவை. இது போல் நிறையவே இருக்கிறது. இப்போது வரும் பாடல்கள் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் சென்சார் பிடியில் இருந்து எளிதில் தப்பித்து விடுகிறது.அதுவும் போக இப்பொழுதெல்லாம்  கட்சி, ஜாதி, மதம் போன்றவற்றை   பாதிக்கிற மாதிரியான விஷயங்கள் இருக்கிறதா என்று தான் அதிகமாக பார்க்கிறார்கள்.

படங்களுக்கு Censor certificate வழங்கும் Central Board of Film Certification தளத்தில் ஏதாவது படத்தின் பெயரை கொடுத்து தேடினால் அந்த படத்தில் கட் செய்யப்பட்ட வசனம் / காட்சி பற்றிய விஷயங்கள் கிடைக்கிறது.


நண்பன் படத்தில் தடை செய்யப்பட்ட காட்சிகள்  / Mute செய்யப்பட்ட வசனங்கள்.

1) அடீங்க
2) புடிங்கீட்ட
3) நாதாரி
4) இலங்கை
5) Personal  Properties
6) கொங்கைனா லேடிஸ் ............
7) மூன்று முறை வரும் 'கற்பழிக்கும் கர்ணன் விருமாண்டி' ஒரு முறையாக
    குறைக்கப்பட்டது.
8) 'Kingsum தீர்ந்தால்' -( Heartlay Battery பாடலில்)
9) இருக்கானா பாடலில் Cleavage மற்றும் Belly காட்சிகள்
என மொத்தம் 16 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசுத்துறையின் இலக்கணத்தை மீறாமல் மெதுவாக Update செய்வார்கள் போலிருக்கிறது. தமிழ் சினிமாவின் மைல்கல்லான 'மேதை' படத்தைப்பற்றிய விபரங்கள் காணவில்லை.

டிஸ்கி:

சென்சார் கொடுக்கும் Certificate ல்
1)   U
2)   A
3)   U/A
கேள்விப்பட்டிருப்பீர்கள். ' S ' என ஒரு Certificate ம் கொடுக்கிறார்கள். தெரியுமா?
குறிப்பிட்ட பிரிவினருக்கான படமாம். (Specially For Doctors மாதிரி). அது போல் ஏதாவது படத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? தெரியப்படுத்துங்கள்.


மீண்டும் சந்திப்போம்.



3 comments:

  1. Good topic...
    Nice Keep it up

    ReplyDelete
  2. @GANESH
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  3. விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ் -

    http://mytamilpeople.blogspot.in/2013/01/windows-8-tips.html

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...