அமிதாப்,ஷாருக்கான்,சரத்குமார் என பல நடிகர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் நடத்திய KBC என சுருக்கமாக அழைக்கப்படும் குரோர்பதி புரோக்ராம் இப்பொழுது விஜய் டிவியில் சூர்யா மூலமாக வருகிறது. அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக அறியப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போழுது லாபம் கொழிக்கும் நிகழ்ச்சியாக உருமாறியதற்கு முக்கிய காரணம் Mobile மற்றும் SMS தான். சர்வசாதாரணமாக SMS அனுப்புங்கள் என்று சொல்லி விடுகிறார்கள். மக்களும் விரல் தேய,தேய அனுப்பி குவிக்கிறார்கள். ஒரு SMS என்ன Charge என்று தெரியுமா என்று கூட தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் கவலைப்படுவதில்லை. லாட்டரி டிக்கட் மாதிரி மனதை தேற்றிக்கொள்கிறார்கள். (வந்தா லாபம் தான!) வியாபார உலகில் இதெல்லாம் சகஜம் தான்.
இது ஒரு Flash Game அப்படியே கோன் பனேகா குரோர்பதி போலவே வாய்ஸ் கூட அமிதாப் மாதிரியே இருக்கிறது. விளையாடிப்பாருங்கள். செலவும் இல்லை, வரவும் இல்லை. சும்மா டைம் பாஸ் தான். எத்தனை கேள்விகளுக்கு விடை தெரிகிறது என்று பெருமை பட்டுக்கொள்ளலாம். அதிகம் கேள்விகள் இல்லை என்ற ஒரு குறை தான். மற்றபடி Crorepati நிகழ்ச்சி மாதிரியே தான் இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.
ஜெய்தால் யார் காசு தருவா ?
ReplyDelete@"என் ராஜபாட்டை"- ராஜாprocessing charge ஆ ஒரு 10000 D/D எடுத்து அனுப்பினா படகோட்டி படத்துல சரோஜாதேவி use செய்த சோப்பு டப்பாவை கம்பெனி உங்க விலாசத்துக்கு அனுப்பி வைக்கும். (சுய விலாசமிட்ட போதிய தபால்தலையுடன் Long size cover 1 உடன் அனுப்பவும்).
ReplyDelete@"என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteநண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..
@அப்பு
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி!