18 August, 2011

பட்டைய கிளப்பும் இளையராஜா

                                                                        புராணகால படமாக இராமாயணத்தின்
பின்பகுதியை அதாவது இராவணனை கொன்ற பிறகு உள்ள கதையை
ஸ்ரீ ராமராஜ்யம் என்ற பெயரில் தெலுங்கில் படமாக்கியுள்ளனர். இசை :
இளையராஜா. இது பாலகிருஷ்ணாவின் கனவு படமாம்.இராமாயணம்
தெலுங்கு மக்களிடம் இரண்டற கலந்த விஷயம். எடுத்துக்கொண்டே
இருப்பார்கள்

                                                      
              
                                                          இளையராஜா   படத்திற்க்கு 15 பாடல்களை
அள்ளிக் கொடுத்துள்ளார்.  பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் பாடல்களை பாடியவர்கள்
S.P.B., சித்ரா  என்று எல்லாம் அருமையான, கேட்டு ரொம்ப நாளான Singers.



                                                          

                                                                     படம் ஆரம்பிக்கும் போதே சர்ச்சையுடன் தான் ஆரம்பித்தார்கள். காரணம் நயன் தாரா. சீதை கேரக்டரில் இவரா என கொதித்தனர் ஒரு பிரிவினர். மற்ற நடிகைகள் எல்லாம் சீதைக்கு இணையாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. நயன் தாரா  இந்த
படத்துடன் திரையுலகை விட்டு விலகுவதாக பத்திரிகைகளில் வந்திருந்தது.
நயன் தாராவின் முதல் படமும் இளையராஜாவின் இசை தான்.
'மனசினக்கரே'  (2003) மலையாள திரைப்படம்.  'மரக்குடையாள்',
'மெல்ல ஒன்னு' பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?




                                                                Fast Beat மட்டுமே கேட்பேன் என்பவரா நீங்கள்.
மங்காத்தா பக்கம் போய் விடுங்கள். இது இளையராஜா ரசிகர்களுக்கான இசை.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது இளையராஜா பேசியது
"இசையை விளக்குவது கஷ்டம். அனுபவிப்பது ஆனந்தம்."
எனவே அனுபவியுங்கள்.






                           பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?




மீண்டும் சந்திப்போம்.

5 comments:

  1. உண்மைதான். ஷ்ரேயாவும் சித்ராவும் மயக்கும் நிலையில் பாலு கிரங்கடிக்கிறார். இருவரை தேசிய விருதுக்கு அனுப்புவார் இளையராஜா இந்த முறை

    ReplyDelete
  2. நயன்தாரா என்று இல்லை பல பேருடைய முதல் படம் இளையாராஜா தான் இசை அமைத்து இருப்பார். ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் அது அந்த காலம்.

    ReplyDelete
  3. @ILA(@)இளா
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. @MANASAALI
    "நயன்தாரா என்று இல்லை பல பேருடைய முதல் படம் இளையாராஜா தான் இசை அமைத்து இருப்பார்"
    சரியா சொன்னீங்க.

    "ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் அது அந்த காலம்."
    (ஆனால் 2003 என்பது
    அந்த காலம் இல்லையே.)

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...