20 August, 2011

குத்தாட்டம் பார்த்தால் படிப்பு வரும்.

                                                 முன்பெல்லாம் கோவில் திருவிழா என்றாலே
பாட்டுக்கச்சேரி, ஆடல் பாடல் என்று ஏரியாவே விடிய,விடிய, களை கட்டும். சமீப  காலத்தில் இதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு. டி.வி. வந்த பிறகு கச்சேரி
கேட்கும் கூட்டமும் குறைந்து விட்டது. ஆடல், பாடல் கொஞ்சம் அத்து
மீறியும் போய்க்கொண்டிருக்கிறது.



                                                    கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) யில்
உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு
அனுமதி கொடுக்க காவல் துறை மறுத்து விட்டதால் கோர்ட்டுக்கு வந்த
வழக்கில் நீதிபதி வித்தியாசமான தீர்ப்பு கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு
ஆகும் செலவில் (ரூபாய் 20,000) பாதியை அந்த ஊரில் உள்ள பள்ளிக்கு
செலவு செய்து விட்டு நிகழ்ச்சி நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.

                                                  ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏன் காவல்துறை மறுத்தது.
பள்ளிக்கு செலவு செய்தால் பிரச்சனை தீர்ந்து விடுமா? என்பதெல்லாம் நமக்கு
தேவையில்லாத விஷயம். இதை பார்த்து பணம் படைத்த கோவில்  நிர்வாகங்கள் அவர்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கு கொஞ்சம் செலவு செய்தால் கூட நாட்டில் பல பள்ளிகளுக்கு ஒழுகாத கூரை கிடைக்கும்.


                                                 சரஸ்வதியும் சாமி தானப்பா


                            பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?




மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. //
    இதை பார்த்து பணம் படைத்த கோவில் நிர்வாகங்கள் அவர்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கு கொஞ்சம் செலவு செய்தால் கூட நாட்டில் பல பள்ளிகளுக்கு ஒழுகாத கூரை கிடைக்கும்.
    //

    நல்ல எண்ணம்

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...