11 August, 2011

நல்லதம்பியின் வென்னீர் வைத்தியம்

                                                         நல்லதம்பிக்கு அப்பத்தான் கல்யானம்
முடிஞ்சிருந்தது. மனுசன் தல தீபாவளிக்காக மாமனார் வீட்டில
புது மாப்பிள்ளை முறுக்கோட சுத்திக்கிட்டு இருந்தார். அது பத்தாதுன்னு
மேற்கொண்டு முறுக்கு கொடுக்கனும்னு அவரோட பொண்டாட்டி,
மச்சினி,மாமியார் எல்லோரும் அடுப்படில சுட்டு தள்ளிக்கிட்டு
இருந்தாங்க.

                                                          நல்லதம்பி மாமனார் மாதிரி சுறுசுறுப்பான
ஆள பாக்கவே முடியாது. பக்கத்தில இருக்கிற பேப்பரை எடுக்கிறதுக்கு
கூட பொண்டாட்டிக்கு போன போட்டு வரச்சொல்வாரு. அவரு குளிக்க
போறாருன்னா வென்னீர், டவல், சோப் எல்லாம் ரெடியா இருக்கனும்.
ஆனா இன்னிக்கு அவர சீண்ட கூட ஆளில்லை. மாமனார் பாத்தாரு,
இதுக்கு மேலே பொறுத்துப் பாத்தோம்னா நாம குளிக்கறதுக்குள்ள
பொங்கல் வந்துரும்னு அவரே கோதாவில இறங்கிட்டாரு.




                                                      அவரு வென்னீர் வாளியை அடிபட்ட தவளை
தவ்வி தவ்வி வர்ற மாதிரி தூக்கிட்டு வந்ததில வாளிலிருந்த சுடுதண்ணி
அலம்பி கொஞ்சம் மேலே சிந்திருச்சு. அவரு போட்ட அலறல் சத்தத்தில
வீட்டிலிருந்தவங்க மட்டுமில்லாம, பக்கத்து வீட்டில பலகாரம் சுட்டவங்களும்
ஓடி வந்துட்டாங்க.இந்த நேரத்தில தான் வின்னர் வடிவேலு கண்க்கா
'வந்துட்டேன்' னு குறுக்க பாய்ஞ்சு வந்தாரு நம்ம நல்லதம்பி. மச்சினி
கையில இருந்த மருந்தை பாத்தவரு டென்சனாயிட்டாரு. உடம்பில
சுடுதண்ணி பட்டா முதல்ல என்ன செய்யனும் தெரியுமா? கேட்டுக்க,

                             நம்ம தோல்ல மூனு லேயர்ஸ் இருக்கு.நம்ம 
                             உடம்பில பட்ற சுடுதண்ணி ஒவ்வொரு லேயரையும்
                             காயப்படுத்திக்கிட்டே போகும். மூனாவது லேயரை
                             தாக்கிறப்ப காயத்தோட அளவும் அதிகமாகுது.
                             அதனால சுடுதண்ணி மேலே பட்டவுடன் குளிர்ந்த 
                              நீரை மெல்லிசா மேலே ஊத்தினா காயத்தோட
                              வீரியம் குறையும். மருந்தெல்லாம் அப்புறம் தான்.

                                                                       அப்படின்னு மாமனார் கதற, கதற
லெக்சர் அடிச்சவரு, பச்சைதண்ணிக்கு எங்க போறதுன்னு சுத்தி, சுத்தி
பாத்தாரு, கடைசில மாமனார் சிந்தினது போக மீதமிருந்த வென்னீரை
வாளியோட எடுத்து அவர் மேலேயே ஊத்திட்டாரு. அப்ப அவர் மாமனார்
போட்ட அலறல்ல நாலு Fire Engine வண்டி வீட்டுக்குள்ளேயே வந்திருச்சு.

                                                         அதுக்கப்புறம் மொத்த குடும்பமும் தீபாவளியை ஆஸ்பத்திரில தான் கொண்டாட வேண்டியதா போச்சு. இதுக்கு
நல்லதம்பியை ஏன் திட்டுறீங்க, அவரு மாமனாருக்கு வெந்த புண்ணில
வென்னீரை பாச்சனும்னு இருக்கு, அதுக்கு நல்லதையே நினைக்கும்
நம்ம நல்லதம்பி என்ன பன்னுவாரு பாவம்.


             பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?


மீண்டும் சந்திப்போம்.

                                                              

3 comments:

  1. @rajasundar
    ஹிஹி! எப்பவுமே இப்படி தான்.

    ReplyDelete
  2. நல்லதையே நினைக்கும் நல்லதம்பி!

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...