Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

27 July, 2012

மலிவாகிப்போன மனித உயிர்கள்

ஒவ்வொரு நாளும் செய்திதாள்களை படிக்கும் போது வரும் செய்திகளை தாங்கிக் கொள்ள தனி தைரியம் வேண்டும் போலிருக்கிறது. மனிதர்களை ஆண்,பெண்,குழந்தைகள் என்று பார்க்காமல் தங்கள் சுயநலத்திற்காக ஈவு இரக்கமில்லாமல் கொல்லும் கொடூரர்கள் ஒரு பக்கம்,  மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அசால்டாக செயல்படும் கூட்டம் ஒரு பக்கம்.  சமீபத்தில் வந்த செய்திகள் இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? என்று அச்சம் கொள்ள வைக்கிறது.




முதல் செய்தி தலைப்பு செய்தியாக வலம் வந்த செய்தி.  பள்ளி பஸ்சின் ஓட்டை வழியே வெளியே விழுந்து மரணமடைந்த சிறுமி. குழந்தை விழும் அளவுக்கு அவ்வளவு பெரிய ஓட்டையுடன் பஸ்சை ஓட்டி வந்த நபருக்கும், அப்படி ஒரு பஸ்சை எந்த வேலையும் பார்க்காமல் அப்படியே அனுப்பிய நிர்வாகத்தினருக்கும் மனித உயிரின் மதிப்பு என்ன என்று தெரியுமா? அல்லது பெற்றோர்களின் வலி தான் புரியுமா?. அந்த பஸ்சின் ஓட்டையை ஏதோ ஒரு பலகை கொண்டு தற்காலிகமாக சரிசெய்ய அதிகபட்சம் 500 ரூபாய் ஆகி இருக்குமா!, இப்பொழுது அந்த மாணவியை இழந்து தவிக்கும் குடும்பத்தின் நிலை என்ன?. 




அடுத்தது
பஞ்சாப் மாநிலத்தில் வெறும் 200 ரூபாய் கட்டவில்லை என்று பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தையின் சுவாச இணைப்பு கருவியை நீக்கியிருக்கிறார்கள். அதனால் அந்த குழந்தை இறந்து விட்டது. சொல்லப்போனால் கொன்று விட்டார்கள். சினிமாவில் வில்லன்கள் தான் இது போல் செய்வது போல் காட்சி வைப்பார்கள். அந்தளவுக்கா ஆகிவிட்டார்கள் நம் சக மனிதர்கள். இரண்டு சம்பவங்களிலும் குழந்தை என்பதால் செய்தியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.  உடனடியாக பள்ளிப்பேருந்துகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் பல அரசு பேருந்துகள் பெரிய, பெரிய ஓட்டையுடனும் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. பல அரசு மருத்துவமனைகளில் ஆதரவற்ற உயிர்கள் ஊசலாடிக்கொண்டு தான் இருக்கிறது
.



மும்பையில் ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு வழி விடாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப் போவதாக வந்த செய்தியை கேள்விப்படும் போதும் மனம் கணக்கிறது. மனிதாபிமானம் எங்கே போய் விட்டது. சட்டம் போட்டு செய்ய வேண்டிய விஷயங்களா இது. திண்ணை கலாச்சாரம், தெரு சாமி கும்பிடு என்றெல்லாம் பல விஷயங்கள் சுற்றுப்புற மனிதர்களை ஒன்றினைத்திருந்தது. இன்று கலாசார மாற்றம், லைப் ஸ்டைல் என்றெல்லாம் பெயர் வைத்து ஒவ்வொரு மனிதரும் அருகிலிருந்தும் எங்கோ விலகி போய் விட்டனர். சட்டம் என்றாலே எப்படி தப்பிப்பது என்றும் அப்படியே அதை கடைப்பிடித்தாலும் வேண்டா வெறுப்பாக செய்யும் எண்ணமும் தான் வரும். மனிதனை மனிதன் நேசிக்கும் குணத்தை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


சக மனிதனை நேசிக்க போடப்படும் சட்டங்கள் நமக்கு கேவலம் இல்லையா!


மீண்டும் சந்திப்போம்.

 



20 August, 2011

குத்தாட்டம் பார்த்தால் படிப்பு வரும்.

                                                 முன்பெல்லாம் கோவில் திருவிழா என்றாலே
பாட்டுக்கச்சேரி, ஆடல் பாடல் என்று ஏரியாவே விடிய,விடிய, களை கட்டும். சமீப  காலத்தில் இதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு. டி.வி. வந்த பிறகு கச்சேரி
கேட்கும் கூட்டமும் குறைந்து விட்டது. ஆடல், பாடல் கொஞ்சம் அத்து
மீறியும் போய்க்கொண்டிருக்கிறது.



                                                    கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) யில்
உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு
அனுமதி கொடுக்க காவல் துறை மறுத்து விட்டதால் கோர்ட்டுக்கு வந்த
வழக்கில் நீதிபதி வித்தியாசமான தீர்ப்பு கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு
ஆகும் செலவில் (ரூபாய் 20,000) பாதியை அந்த ஊரில் உள்ள பள்ளிக்கு
செலவு செய்து விட்டு நிகழ்ச்சி நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.

                                                  ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏன் காவல்துறை மறுத்தது.
பள்ளிக்கு செலவு செய்தால் பிரச்சனை தீர்ந்து விடுமா? என்பதெல்லாம் நமக்கு
தேவையில்லாத விஷயம். இதை பார்த்து பணம் படைத்த கோவில்  நிர்வாகங்கள் அவர்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கு கொஞ்சம் செலவு செய்தால் கூட நாட்டில் பல பள்ளிகளுக்கு ஒழுகாத கூரை கிடைக்கும்.


                                                 சரஸ்வதியும் சாமி தானப்பா


                            பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?




மீண்டும் சந்திப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...