18 August, 2011

ரஜினி பேச்சை கேட்க மறுத்த பிரதமர்

                                                                                   தமிழக அரசியலை பொறுத்த வரை
ரஜினியின் வாய்ஸ்க்கு எப்பொழுதுமே மதிப்புண்டு. மாத்தி,மாத்தி பேசினதில
மக்கள் கொஞ்சம் மிரண்டு போயிருந்தாலும் ரஜினியின் வாய்ஸ் என்றுமே
சிங்கத்தின் கர்ஜனை தான்.



                                                                                 1996 எலெக்சன் சமயத்தில
தமிழக காங்கிரஸ் தலைமையில் 14 கட்சிகள் சேர்ந்து தனித்து ஆட்சி
அமைக்க முயற்சி செய்த்ததாகவும், அதற்கு ரஜினி தனது முழு ஆதரவை
தர ஒப்புக்கொண்டதாகவும் அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவரும்,
இப்போதைய முன்னாள் தலைவர்களில் ஒருவருமான குமரி ஆனந்தன்
பேசியிருக்கிறார்.



                                                                             அப்போது எடுத்த ஒரு கணக்கெடுப்பில்
ரஜினியின் வாய்ஸ்க்கு  56 %  ஆதரவு இருந்ததாகவும், இது விஷயமாய்
ரஜினி 3 தடவை அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் பேசியதாகவும்,
ஆனால் பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை  என்றும் குமரி ஆனந்தன் சொல்லி
யிருக்கிறார். பிரதமர் பேசமாட்டாரு, ரஜினி கேட்க மாட்டாரு. என்ன தான் பேசினாங்களோ?

                                                                             காலில் விழுகாத குறையாய்
பிரதமரிடம் கெஞ்சியும் மனுசன்  காது கொடுத்து கேட்கலை, அப்ப மட்டும் ஒத்துக்கிட்டிருந்தார்னா இந்நேரம் காங்கிரஸ் ஆட்சியில் உட்காந்திருக்கும்னு புலம்பியிருக்கார் குமரி ஆனந்தன். நரசிம்மராவ் இதுவரை செஞ்ச நல்ல
காரியங்களிலேயே (இருக்கா என்ன?),  இது தாம்பா ரொம்ப ரொம்ப நல்ல
காரியம். தமிழக காங்கிரஸ் அலுவலகம் பட்ற பாட்டை தமிழக சட்டசபை
படனுமா! . தாங்காதப்பா தமிழகம்.


4 comments:

  1. ##தமிழக அரசியலை பொறுத்த வரை
    ரஜினியின் வாய்ஸ்க்கு எப்பொழுதுமே மதிப்புண்டு##

    அப்படியா? சொல்லவே இல்ல?

    ReplyDelete
  2. @MANASAALI
    வாய்ஸ் கொடுக்கும் போது தெரியும்

    ReplyDelete
  3. Ippa edhuku palasai ellam yosichikittu......

    ReplyDelete
  4. @Saravanaa
    இது குமரி ஆனந்தன் நேத்திக்கு பேசினது. ஞாபக சக்தி அதிகம் போல
    அவருக்கு.

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...