13 August, 2011

பக்கத்தில் ஒரு நயாகரா

                                                                          பார்க்க, பார்க்க சலிப்பு தட்டாத
விஷயங்களில் அருவியும் ஒன்று. அதிலும் நயாகரா மாதிரி பிரமாண்டமான
நீர்வீழ்ச்சியை பார்ப்பதே சுகம். அப்படி ஒரு நீர்வீழ்ச்சி நமது அண்டை மாநிலம்
கேரளாவில் உள்ளது. தமிழ் சினிமாவிலும் நிறையவே நடித்துள்ளது.





                                                                 

                                                                            கொச்சியிலிருந்து சுமார் 75 கி.மீ.
தூரத்தில் உள்ள சாலக்குடியில் உள்ள இந்த அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியை
வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. போய் பார்த்தால் தான் புரியும். கிட்டத்தட்ட 80 அடி உயரத்திலிருந்து பிரமாண்டமா தண்ணி கொட்டுற அழகை பார்த்துக்கிட்டே இருக்கலாம்.



                                                                     
                                                                     கேரளாவிற்கே உரித்தான கிளைமேட்டும், தண்ணியும் ( நல்ல தண்ணியை சொன்னேன்) அதிரம்பள்ளிக்கு போனவுடனே
குஷியாயிடும். இந்த அருவியின் இன்னொரு Special நாம் போய் சேரும் இடமே அருவியின் உச்சி தான்.  குளிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப்பட்டு  தான் இறங்க வேண்டும்.


                        


                                            
                                                               வைரமுத்து சொன்னது போல் 'வீழ்வதில்
அழகு அருவி மட்டும் தான்'   என்பதை அதிரம்பள்ளி போய் பார்த்தால் புரிந்து
கொள்ள்லாம். புன்னகைமன்னன் படத்தில் வரும் 'என்ன சத்தம்' பாடல் எடுத்த
இடம் என்று சொன்னால் எளிதில் விளங்கும். (அவ்வளவு அழகான இடத்தில
எடுக்க வேற சீனே கிடைக்கலயா?) நம்மூரு ஆட்டோவில எழுதியிருக்கிற
மாதிரி அங்க ஒரு போர்டை மாட்டனும்.




                                          "அழகை ரசி,  அடைய நினைக்காதே"




                      பிடிச்சிருந்தா ஓட்டு,  பிடிக்கலையா பதில் டீல் ஓகேயா?



மீண்டும் சந்திப்போம்.

13 comments:

  1. நான் அந்த அழகை ரசிச்சு இருக்கிறேன்...
    கோவையில் இருந்து ஒரு நான்கு மணி நேர பயணம்...

    ReplyDelete
  2. @கோவை நேரம்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. டூர் கிளம்பலாமா?

    ReplyDelete
  4. @MANASAALI

    இன்னுமா கிளம்பலை !!!

    ReplyDelete
  5. ''...அழகை ரசி, அடைய நினைக்காதே...''
    ஆமாம் இதை அடைய நினைத்தால் கதை காலி...நல்ல ஒரு வார்த்தைத் தொடர் இது. அதை விட அருவி அழுகோ..அழகு. நல்ல பதிவு. இதைக் காட்டியதற்கு நன்றி . வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. @kovaikkavi

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. ''...அழகை ரசி, அடைய நினைக்காதே...''

    SAFETY FIRST
    then
    ENJOY...

    ReplyDelete
  8. @Saravanan MASS
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. அருமையான இடம்

    ReplyDelete
  10. நல்ல தகவல் . நன்றி

    ReplyDelete
  11. THANK U SIR EAPPVE PAARKKA POOROM

    ReplyDelete
  12. THANK U SIR EAPPVE PAARKKA POOROM

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...