06 August, 2011

காப்பியடித்ததை ஒப்புக்கொண்ட தமிழ் இசையமைப்பாளர்

                                                               
                                                   'இது என் பாட்டு இல்லை' என்று open Statement கொடுத்திருக்கிறார் ஒரு Music Director. யாருன்னு பாக்கிறீங்களா? இந்த மாதிரி Open Talk சொல்ல யாரு இருக்கா நம்ம கங்கை அமரனை விட்டா.  மனுசன் எதையும் சிரிச்சிக்கிட்டே ஜாலியா சொல்லிடுவாரு.






                                                               பொதுவாகவே நம்மாளுங்க ஒரு கொள்கையை வைச்சிருக்காங்க. பழைய பாட்டு நல்லாயிருந்தா அது M.S.விஸ்வநாதன் பாட்டு, ( அதுல நிறைய  பாட்டு  K.V.மஹாதேவன் Musicல இருக்கும்.) அதே மாதிரி 80 களில் பாட்டு நல்லாயிருந்தா அது இளையராஜா பாட்டுன்னு சொல்லிடுவாங்க. "ஏணிப்படிகள்"  பாட்டு Music Channel கூட இளையராஜா தான்னு சொன்னாங்க. "கொடி பறக்குது" போஸ்டர்லயே  இளையராஜா பேர் போட்டாங்க. அப்படி தான் இந்த பாட்டும்.


                                                                          "சின்ன தம்பி பெரிய தம்பி" படத்தில வர்ற 
"ஒரு காதல் என்பது" பாட்டை ரொம்ப பேரு இளையராஜா Music தான்னு நினைச்சிக்கிட்டிருக்காங்க. (நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைச்சேன்)
அப்புறம் தான் தெரிஞ்சது அந்த படத்துக்கு Music கங்கை அமரன். பாட்டு சரியான HIT. ஒரு T.V Programme ல கங்கை அமரன் பேசும் போது தான் போட்டு உடைச்சாரு. இது இளையராஜா பாட்டுன்னு.


                                                               அப்ப இரண்டு பேரும் பிஸியா இருந்த நேரம்.சின்ன தம்பி பெரிய தம்பி படத்துக்கு ஒரே ஒரு டூயட் மட்டும் பாக்கி. அந்த பட Music Director கங்கை அமரன்  கிடைக்காததால இளையராஜா போட்டு வைச்சிருந்த டூயட் சாங்கை எடுத்து Use பண்ணிக்கிட்டாங்களாம்.

அவரின் பேட்டியை பார்க்க.






                                                                    இப்ப இத சொல்லனும்னு அவசியம் இல்லை என்றாலும் வெளிப்படையா பேசின கங்கை அமரனை பாராட்டியே ஆகனும்.

அந்த Super Hit பாடலை பார்க்க





ஆகவே மக்களே உங்க கொள்கையை மாத்திராதீங்க.
 நல்லாயிருந்தா அது ராஜா பாட்டு.


           
மீண்டும் சந்திப்போம்.


                                                               

5 comments:

  1. kv mahadevan is a good musician but msv not equal to gangaiamaran your bracket is not correct ok

    ReplyDelete
  2. @pradeep
    நான் யாரையும் compare செய்யவில்லை நண்பா!. பொதுவான மக்கள் mentality ஐ பற்றி என் கருத்தை சொல்லியிருக்கிறேன். அவ்வளவு தான்.

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஏன் அமரும் நன்றாக இசையமைப்பவர்தான். அதே படத்தில் மழையின் துளியில்நல்ல பாடல். மலர்களே மலருங்கள் படத்தில் வரும் “இசைக்கவோ” என் விருப்பப் பாடல்

    ReplyDelete
    Replies
    1. நிறைய நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார். நான் அவரை குறைத்து மதிப்பிடவில்லை.வாழ்வே மாயம் பாடல்கள் எல்லாம் சூப்பர் பாடல்கள் தான்.

      Delete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...