Showing posts with label street. Show all posts
Showing posts with label street. Show all posts

10 January, 2012

நாய் பொழப்பு

நொந்து நூடுல்ஸ் ஆகி  செத்து சுண்ணாம்பாகி சொல்ற டயலாக் இல்ல!  மெய்யாலுமே ஒரு நாயோட பொழப்பு தான் இது. நான் இருக்கிற தெரு சந்து மாதிரியும் இல்லாம ரோடு மாதிரியும் இல்லாம ரெண்டுக்கும் நடுவில இருக்கிற மாதிரியான, ரெண்டு பெரிய ரோடுக்கு நடுவில இருக்கிற கொஞ்சம் பெரிய சந்து. தெளிவா புரிஞ்சிருச்சில்ல!.  தீடீர்னு ஒரு நாள் எங்க சந்துல ஒரு VIP வந்துட்டாரு. வேற யாரு? ஒரு நாய் தான். குட்டி நாய்ங்க தீடீர்,தீடீர்னு புது ஏரியாவில வந்து வளர்றது சகஜம். ஆனா எங்க தெருவில வந்தது ஒரு பெரிய கருப்பு நாய். யார் கொண்டு வந்தா?, எப்படி வந்ததுன்னு யாருக்கும் தெரியல!. 




எனக்கு நாய்ங்கனாலே அலர்ஜியோ அலர்ஜி. தனியா சுடுகாட்டுக்கு போயிருவியான்னு யாராவது கேட்டா, நாய் இருக்குமானு தான் மொத கேள்வி கேட்பேன். பேயையெல்லாம் சமாளிச்சிடலாம். ( நாம பாக்காததுதா?). நைட் ஷோ போறதுன்னா கூட நாய் இல்லாத ஏரியால இருக்கிற தியேட்டரா பாத்து தான் போறது. அப்படி ஒரு பாசம். இப்ப தெருவில வந்திருக்கிற நாயோ சிடு,சிடுன்னு பாக்கிறதுக்கே பயங்கரமா இருந்துச்சு. எனக்குத்தான் அப்படி தோணுது போல!, ஏரியாவில சில பேர் அத அப்படி கொஞ்சறாங்கப்பா!. சில மேனகா காந்தி சொந்தக்காரங்க தயவில அதுக்கும் வேளாவேளைக்கு சாப்பாடு கிடைக்க, அதுக்குன்னே செஞ்ச மாதிரி இருந்த ரெண்டு வாசற்படிக்கு இடையே இருந்த Gap ல செட் ஆயிருச்சு.


பார்க்க முரட்டுத்தனமா இருந்தாலும் அந்த நாய் குரைத்து ஒரு தடவை கூட நான் பார்ததில்லை. பெரியவங்களுக்கு அந்த நாயாலே சின்ன, சின்ன தொந்தரவு இருந்தாலும், சின்ன பிள்ளைகளுக்கு அந்த நாயாலே பெரிய தொந்தரவா இருந்தது. நம்ம கையில ஏதாவது பையோ, பொருளோ கொண்டு வந்தால் நாயும் பின்னாடியே வந்தது. வேற ஒண்ணும் செய்யாது. பாவமா பின்னாடி வரும். ஏதாவது கொடுங்கப்பா? என்கிற மாதிரி!. ஆனா சின்னப்பிள்ளங்க நாய் பின்னாடி வந்தா பயந்து ஓட ஆரம்பிக்க, நாயும் பின்னாடியே விரட்ட பெரியவங்க யாராவது விரட்டி விட வேண்டியதா போச்சு. தீடீர்னு ஒரு நாள் நாயை காணோம். யாரோ Complaint செய்து யாரோ கொண்டு போயிட்டதா சொன்னாங்க. யார் கொண்டு வந்தா, எங்கிருந்து வந்ததுன்னு தெரியாம வந்த மாதிரியே, யார் கொண்டு போனாங்க, எங்க போச்சுன்னு தெரியாமயே போயிருச்சு. 


ஆனாலும் அந்த இடத்தை கடக்கும் போது எல்லாம் கண்கள் தானாக நாய் படுத்து இருந்த இடத்தில் நாயை தேடுகிறது. சின்னப்பசங்க அந்த இடத்தை கடக்கும்போது எல்லாம் அனிச்சையாக தள்ளிப்போய் கடக்கிறார்கள் மானசீகமாக நாயை கற்பனை செய்து கொண்டே!

மீண்டும் சந்திப்போம்.




25 August, 2011

கண்ணை கட்டும் படங்கள்

                                                                              நம்ம ஊர் தெருவோரங்களில்
நெஞ்சை பிளக்கும் ஆஞ்சநேயர்,யேசுநாதர் போன்ற படங்களை வரைந்து
சில்லறை வசூல் செய்வதை பார்த்திருக்கலாம். வெளிநாடுகளில் இது
மாதிரி 3D Street Painting என்ற பெயரில் வரையப்படும் ஓவியங்கள் பிரமிப்பை
ஏற்படுத்துகின்றன.






















                                                                                   நிஜம் எது, ஓவியம் எங்கு
ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது என கண்டுபிடிக்க முடியாத படி மிக
பிரமாதமாக வரைந்திருக்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...