27 July, 2012

மலிவாகிப்போன மனித உயிர்கள்

ஒவ்வொரு நாளும் செய்திதாள்களை படிக்கும் போது வரும் செய்திகளை தாங்கிக் கொள்ள தனி தைரியம் வேண்டும் போலிருக்கிறது. மனிதர்களை ஆண்,பெண்,குழந்தைகள் என்று பார்க்காமல் தங்கள் சுயநலத்திற்காக ஈவு இரக்கமில்லாமல் கொல்லும் கொடூரர்கள் ஒரு பக்கம்,  மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அசால்டாக செயல்படும் கூட்டம் ஒரு பக்கம்.  சமீபத்தில் வந்த செய்திகள் இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? என்று அச்சம் கொள்ள வைக்கிறது.




முதல் செய்தி தலைப்பு செய்தியாக வலம் வந்த செய்தி.  பள்ளி பஸ்சின் ஓட்டை வழியே வெளியே விழுந்து மரணமடைந்த சிறுமி. குழந்தை விழும் அளவுக்கு அவ்வளவு பெரிய ஓட்டையுடன் பஸ்சை ஓட்டி வந்த நபருக்கும், அப்படி ஒரு பஸ்சை எந்த வேலையும் பார்க்காமல் அப்படியே அனுப்பிய நிர்வாகத்தினருக்கும் மனித உயிரின் மதிப்பு என்ன என்று தெரியுமா? அல்லது பெற்றோர்களின் வலி தான் புரியுமா?. அந்த பஸ்சின் ஓட்டையை ஏதோ ஒரு பலகை கொண்டு தற்காலிகமாக சரிசெய்ய அதிகபட்சம் 500 ரூபாய் ஆகி இருக்குமா!, இப்பொழுது அந்த மாணவியை இழந்து தவிக்கும் குடும்பத்தின் நிலை என்ன?. 




அடுத்தது
பஞ்சாப் மாநிலத்தில் வெறும் 200 ரூபாய் கட்டவில்லை என்று பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தையின் சுவாச இணைப்பு கருவியை நீக்கியிருக்கிறார்கள். அதனால் அந்த குழந்தை இறந்து விட்டது. சொல்லப்போனால் கொன்று விட்டார்கள். சினிமாவில் வில்லன்கள் தான் இது போல் செய்வது போல் காட்சி வைப்பார்கள். அந்தளவுக்கா ஆகிவிட்டார்கள் நம் சக மனிதர்கள். இரண்டு சம்பவங்களிலும் குழந்தை என்பதால் செய்தியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.  உடனடியாக பள்ளிப்பேருந்துகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் பல அரசு பேருந்துகள் பெரிய, பெரிய ஓட்டையுடனும் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. பல அரசு மருத்துவமனைகளில் ஆதரவற்ற உயிர்கள் ஊசலாடிக்கொண்டு தான் இருக்கிறது
.



மும்பையில் ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு வழி விடாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப் போவதாக வந்த செய்தியை கேள்விப்படும் போதும் மனம் கணக்கிறது. மனிதாபிமானம் எங்கே போய் விட்டது. சட்டம் போட்டு செய்ய வேண்டிய விஷயங்களா இது. திண்ணை கலாச்சாரம், தெரு சாமி கும்பிடு என்றெல்லாம் பல விஷயங்கள் சுற்றுப்புற மனிதர்களை ஒன்றினைத்திருந்தது. இன்று கலாசார மாற்றம், லைப் ஸ்டைல் என்றெல்லாம் பெயர் வைத்து ஒவ்வொரு மனிதரும் அருகிலிருந்தும் எங்கோ விலகி போய் விட்டனர். சட்டம் என்றாலே எப்படி தப்பிப்பது என்றும் அப்படியே அதை கடைப்பிடித்தாலும் வேண்டா வெறுப்பாக செய்யும் எண்ணமும் தான் வரும். மனிதனை மனிதன் நேசிக்கும் குணத்தை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


சக மனிதனை நேசிக்க போடப்படும் சட்டங்கள் நமக்கு கேவலம் இல்லையா!


மீண்டும் சந்திப்போம்.

 



18 comments:

  1. பள்ளி நிர்வாகம் தெரிந்தே இந்த ஓட்டைப் பஸ்ஸை ஓட்டியுள்ளார்கள் .. அதற்கு அனுமதி தந்த போக்குவரத்து அதிகாரிகளும் தெரிந்தே செயல்பட்டுள்ளார்கள். நீதிமன்றம் தானா முன்வந்து இச் சம்பவத்தை விசாரணைக்கு எடுத்தமை பாரட்டத்தக்கதே.

    குற்றம் அவர்கள் மீது மட்டுமில்லை. பெற்றோர் மீதும் உண்டு ! தமது குழந்தைகள் போதிய பாதுக்காப்புடன் இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்யாமல் வெறும் பணத்தைக் கட்டி பள்ளி அனுப்பினால் போதும் என நினைத்து இருக்கும் அறியாமையும் கூடவே இச்சிறுமியின் உயிரை பலிவாங்கி உள்ளது ...

    இனிமேலாவது இப்படி நடக்காமல் இருக்க அரசும், பொது மக்களும் பொறுப்பேற்க வேண்டும் .. பாதுகாப்பில் கவனமில்லாமல் செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்யப் படவும் வேண்டும், அப்போது தான் பள்ளி நிர்வாகங்கள் பயந்தாவது பொறுப்புடன் நடப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். பல பள்ளிகளில் பெற்றோர்களை parrents meeting தவிர மற்ற நேரங்களில் உள்ளே அனுமதிப்பதில்லை. பஸ்கள் வெளி பார்வைக்கு பளிச் என்று தான் இருக்கிறது. உள்ளே என்ன நிலைமை என்று மாணவர்களுக்கு தான் தெரியும். RTO வில் பெயிண்ட் அடித்தால் போதும் FC கொடுத்து விடுகிறார்கள். பணத்தில் கவனம் வைக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பாதுகாப்பிலும் அக்கறை வைத்தால் நல்லது.

      Delete
  2. பணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்படும் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.சட்டம் கடுமையை காட்டவேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். ஆனால் சட்டம் இந்த நேரத்தில் கடுமையை காட்டி விட்டு, கொஞ்ச நாள் கழிந்ததும் மறந்து விடுகிறதே!

      Delete
    2. மறப்பதும் மன்னிப்பதும் மனிதனின் குனமேயன்றி சட்டத்தின் குணமல்ல! பாதாளம் வரை பாயும் பணத்தின் பலத்தை எதிர்க்க துணிவின்றி பயந்து பம்மி சட்டம் ஒளிந்துகொள்கிறது அல்லது ஒதுங்கிக்கொள்கிறது!

      Delete
    3. சரியாகச்சொன்னீர்கள்!

      Delete
  3. இந்த நிகழ்வை நானும் பதிவிட்டு என் ஆதங்கத்தை கூறியுள்ளேன்! இன்றும் இதே மாதிரி இரண்டு மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. ஒன்று டெல்லியில் மற்றொன்று வேலூரில்! அரசு தூங்கிக் கொண்டு இருக்கிறது! நீதிமன்றம் தானே முன் வந்து வழக்கை எடுத்திருப்பது ஓர் வகையில் ஆறுதல்! சிறந்த பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்றம் வழக்கை தானே எடுத்திருப்பது முக்கியமில்லை. இனி இது போல் நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பது தான் முக்கியம்.

      Delete
  4. மலிவாகிப்போன மனித உயிர்கள் !!

    மிக மலிவாகிப்போன என்பதே பொருந்தும். 500, 200 ரூபாவுக்கே அக்குழந்தைகள் கொல்லப்பட்டது.
    இவர்களைக் கொலைக்குற்றத்தில் கைது செய்து, வேலையை விட்டு வீட்டுக்கனுப்ப வேண்டும்.
    வேலையை அக்கறையுடன் செய்யக்கூடிய பலர் தெருவில் வேலையின்றி அலையும் போது,எதற்கு இந்த யமகிங்கிரர்களுக்கு குழந்தைகளோடு வேலை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது.

      Delete
  5. சரியாக சொன்னீர்கள் , பள்ளிப் பேருந்துகளுக்கு மட்டும் இல்லை அனைத்து பேருந்துகளுக்கும் நடைமுறைப்படுத்தவேண்டும் . நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். எல்லா உயிரும் உயிர் தானே!

      Delete
  6. சொல்வது சரியே

    ReplyDelete
  7. மிக வருத்தமான செய்தி
    அனால் கண்டிப்பாக இது மறுபடியும் நடக்கும்
    எங்க:::: நம்ம தமிழ்நாட்டில் தான்
    ஆனா அம்மா ஆட்சியா அல்லது ஆய்யா (மருத்துவ ஐயா இல்லை) ஆட்சியா என்று தெரியவில்லை



    நன்றி,
    ஜோசப்
    --- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

    ReplyDelete
  8. very nice blog!!

    seo chennai contact
    www.chennaimuthu.in

    ReplyDelete

  9. இதயம் இல்லா மனிதர்களின் அசால்டான போக்கே இந்த தவறுகள்
    படிக்கும் போது நெஞ்சம் கனத்தது உண்மை தான்

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு நன்றி!

      Delete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...