24 July, 2012

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

மக்களை தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர வைப்பதற்காக ஒவ்வொரு நாடும் பல புதுமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறது. பணக்கார நாடுகளை பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களின் பிரம்மாண்டமும், புதுமையும் பிரமிக்க வைக்கிறது. அமெரிக்காவில் உள்ள அரிஜோனா மாநிலத்தில் உள்ள பள்ளத்தாக்கின் முனையில் வித்தியாசமான முயற்சியாக 'U' வடிவத்தில் ஒரு பாலம் கட்டியுள்ளார்கள், அதுவும் கண்ணாடியில். பள்ளத்தாக்கை கடந்து சிறிது தூரம் கண்ணாடி மேல் நடந்து சென்று வரும்படி அமைத்துள்ளார்கள். கீழே குனிந்து பார்த்தால் அதல பாதாளம் தெரிகிறது.
கிட்டத்தட்ட 4000 அடிக்கும் அதிகமான உயரத்தில் 65 அடி அகலத்தில் சுமார் 70 அடி தூரம் நடந்து சென்று வருவது போல் கட்டியுள்ளார்கள். பங்கி ஜம்ப் மற்றும் தீம் பார்க்கில் உள்ள சில விளையாட்டு விஷயங்களும் அடிப்படையில் இயற்கைக்கு எதிராக சில நொடிகள் நம்மை அழைத்துச் சென்று அடிவயிற்றில் ஒரு சின்ன கிலி ஏற்படுத்தும் முனைப்பில் தான் உருவாக்கப்படுகின்றன. இதுவும் அது போல ஒரு முயற்சி தான். இயற்கைக்கு எதிராகவோ அல்லது இயற்கைக்கு அருகில் செல்லவோ மனிதனுக்கு எவ்வளவு ஆசைகள். ஆனால் அந்த முயற்சியில் ஒரு சதவீதம் கூட கைகூடவில்லை என்று தான் சொல்லவேண்டும். இயற்கை இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது.

சுற்றுலா பயணிகள் மூலம் வருமானம் பார்ப்பதில் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் முண்ணனியில் உள்ளன. நம் நிலை அதள பாதாளத்தில் உள்ளது. இறைவன் கொடுத்துள்ள அதிசயங்கள் நிறையவே உள்ளன. ஆனால் அதை முறைப்படுத்தவோ, மெருகூட்டவோ நம் தலைவர்கள் யாருக்கும் நேரமில்லை. ஆனால் நம் பொருளாதார மேதைகளான தலைவர்கள் ஒருநாள் உணர்வார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலாதுறை முக்கிய விஷயமாக இருக்கிறது என்பதை. அது வரை, இருக்கிற நல்ல விஷயங்களையாவது அழியாமல் காப்பாற்றினால் போதும். செய்வார்களா?
 நமக்கு பக்கத்தில் உள்ள கொடைக்கானலில் கூட இது போன்ற அழகான இடங்கள் நிறைய உள்ளன. அங்கு இது போல் Capital 'U ' போன்று அமைக்கா விட்டாலும் Small 'U' மாதிரியாவது அமைக்கலாம். நாங்களும் போய் பார்ப்போம்ல!. அதுவரைக்கும் உசரமான வீட்டு பால்கனில நின்னு குனிந்து பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

இது சம்பந்தமான வீடியோ ஒன்று

டிஸ்கி

இந்த கண்ணாடி பாலம் கட்டிக்கொண்டிருக்கும் போது எடுத்த ஒரு வீடியோவும், பயன்பாட்டுக்கு வந்த பின் எடுத்த வீடியோவும் என 2 வீடியோக்கள் இருந்தன. அதில் கட்டிக்கொண்டிருக்கும் போது எடுத்திருந்த வீடியோவின் பிண்ணனி இசை அந்த ஊர் மக்களின் இசை என குறிப்பிடப்பட்டிருந்தது. விதயாசாகர் பார்த்திபன் கனவு படத்தில் அதே இசையை அப்படியே உபயோகப்படுத்தியுள்ளார். அந்த சின்ன பகுதி இசையை பின் பாதி வீடியோவில் இணைத்துள்ளேன். மெலடி கிங் என நான் மிகவும் நேசிக்கும் விதயாசாகருக்கு அந்த சின்ன பிட் இசையில் என்ன கிடைத்து விட போகிறது. மனதை உருக்கும் பல பாடல்கள் தந்தவர் இது போல சின்ன விஷயங்களை தவிர்க்கலாமே!

மீண்டும் சந்திப்போம்
9 comments:

 1. ஆச்சரியமாகவும், அட்டகாசமாகவும் உள்ளது...
  தகவலுக்கு நன்றி நண்பரே.... (த.ம. 1)


  மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!

   Delete
 2. ஆச்சர்யமான தகவல்! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி!

   Delete
 3. அருமையான ஆச்சிரியதக்க கட்டுமானம் (TM 2)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பகிர்வுக்கும், தமிழ்மணம் ஓட்டுக்கும் நன்றி!

   Delete
 4. Replies
  1. பகிர்வுக்கு நன்றி!

   Delete
 5. அருமையான வடிவமைப்பு இந்த பாலம் .புகைப்பட செய்தியும் அருமை ,ஆனால் பாலம் முழுவதும் கண்ணாடியல்ல .அதன் அடிப்பாகம் இருபுறமும் H (beam)என அழைக்கப்படும் வார்பு இரும்பு.அதன் மேல் உடையாத கண்ணாடிகளை பொருத்தி இருகிறார்கள்

  ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...