செம கொத்து படமாக வெளிவந்த 'தீபாவளி' படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான 'போகாதே,போகாதே' பாடலில் லாஜிக்கே இல்லாமல் ஒரு காட்சி வரும். ( ஒரு காட்சி மட்டுமா?). பெட்ரோல் பங்கில் பாவனா, கூட வந்தவரை விட்டுவிட்டு ஜெயம் ரவியுடன் (ஹெல்மேட் போட்டிருப்பதால்) போவது போல் காட்சி வரும். இது படம்.
நெல்லையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் இரவு நேரத்தில் பெட்ரோல் போட வந்த இரண்டு வெவ்வேறு தம்பதிகள் கரண்ட் கட் மற்றும் ஒரே பைக், ஒரே ஹெல்மேட் போன்ற காரணத்தால் (நெல்லையில் ஹெல்மேட் போடவில்லை என்றால் பிடிக்கிறார்களா?) ஒரு பெண் மற்றொருவர் பைக்கில் ஏறி போய் விட்டாராம். கணவன் மனைவியை காணவில்லையே என செல்லில் அழைக்க, பிறகு விஷயம் தெரிந்து அவரவர்கள், அவரவர்களுடன் வீட்டிற்கு போய் இருக்கிறார்கள். என்னத்த சொல்ல, பைக், ஹெல்மேட் எல்லாம் அடையாளம் பார்த்து வைச்சவங்க கொஞ்சம் புருஷனையும் அடையாளம் பார்த்து வைச்சிருக்க்லாம். இது செய்தி.
நான் ஒரு நாள் ஒரு கடையில் பர்சேஸ் செய்து கொண்டிருக்கும் போது இப்படித்தான் கொஞ்சம் வயதான தம்பதி பர்சேஸ் செய்து விட்டு கிளம்பும் போது அவரு வாங்கின பொருட்களையெல்லாம் Activa வில் முன்னாடி வைத்து விட்டு 'சரி ஏறு' என்று வண்டியை ஸ்டார்ட் செய்து பேசிக்கொண்டே கிளம்பி விட்டார். இந்தம்மா 'என்னங்க, என்னங்க' என்று சன்னமாய் இரண்டு தடவை கூப்பிட்டு விட்டு பேசாமல் நின்று விட்டார். நான் என்னம்மா? செல்லில் வேணும்னா கூப்பிடுங்க! என்றேன். அதற்கு அந்த அம்மா ரொம்ப கூலாய், அதெல்லாம் வேண்டாம். வீட்டிற்கு போன பிறகு, பின்னாடி நான் இல்லேன்னு தெரிஞ்சவுடன் திரும்பி வந்து கூட்டிக்கொண்டு போய் விடுவார் என்றார். (ரெகுலர் போல) நான் ஷாக்காயிட்டேன். என்னடாது ! , வீட்டிற்கு போய் தான் பார்ப்பாரா? பேசிக்கிட்டே போற மனுசன் பின்னாடி பதில் வரலேயேன்னு திரும்பி பார்க்க மாட்டாரான்னா? , அந்தம்மா 'நான் எங்க பேசறது, கல்யாணம் ஆனதில இருந்து அவர் தான் பேசிக்கிட்டே இருக்காருங்கறாங்க. வாயே திறக்காத மனைவின்னா யார் தான் திரும்பி வந்து கூட்டிட்டு போகாம இருப்பாங்க. அதெல்லாம் கொடுப்பினை சார்.
மீண்டும் சந்திப்போம்.
@K.s.s.Rajh
ReplyDeleteவருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!
போகாதே பாடல்... பாவம், இளையராஜா கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட சமயத்தில் யுவன் பாட வைத்து விட்டிருக்கிறார் என்று தோன்றும் எனக்கு. ஆஹா... எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் இதுபோல எதிர்த்துப் பேசாத மனைவி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஹூம்...!
ReplyDeleteசெய்தி தாள்களில் நானும் வாசித்தேன்...
ReplyDeleteஅந்தநிலையில் இருக்கிறார்கள் நம்மவர்கள்...
அருமையான பகிர்வு
ReplyDelete@கணேஷ்போகாதே பாடல் பாடியது யுவன். அது அவருக்கே உரித்தான Feeling Voice.
ReplyDelete@கவிதை வீதி... // சௌந்தர் //
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
@MANASAALI
ReplyDeleteவருகைக்கு நன்றி!
என்னிடமும் ஹெல்மட் இருந்து என்ன புரோஜனம்
ReplyDelete@"என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteஆசை,தோசை அப்பள வடை.
@"என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteநல்ல தளம்.
நல்ல சேவை..
நிறைய Update செய்யுங்கள்...
வாழ்த்துக்கள்.
ENNA? KODUMAI SARAVANA?.....?....?.....?
ReplyDelete