கார்டூன் கேரக்டர் போல் நாமே
வரைந்து அதை சிம்பிளாக அனிமேட் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
அழகாக வரைய வேண்டும் என்று அவசியமில்லை. என்ன? சில நேரம்
பேய் ஆடுற மாதிரி இருக்கும்.அவ்வளவு தான்.
1) தலை வரைய வேண்டும் என்றால் 'HEAD' ஐ கிளிக் செய்து அந்த
கட்டத்திற்குள் வரைய வேண்டும். எல்லா பாகத்திற்கும் அப்படியே.
2) பிரஸ் செலக்ட் செய்தால் கலர் செலக்ட் செய்து கொள்ளலாம்.
3) பென்சிலுக்கு நோ கலர்.
4) எல்லாம் வரைந்து முடிந்தவுடன் 'ANIMATE' கிளிக் செய்து நாம் வரைந்த
படம் வீடு கட்டி ஆடுவதை பார்த்து ரசிக்கலாம்.
5) 'RESET' கிளிக் செய்து மறுபடி புதிதாக உருவாக்கி பார்க்கலாம்..
மீண்டும் சந்திப்போம்
