12 November, 2011

தோள் கெடுப்பான் தோழன்

                                                                      உலகத்திலேயே ரொம்ப கொடுத்து வைத்த ஆத்மாக்கள் யார் தெரியுமா? எந்த இடமா இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் சும்மா படுத்தவுடன் DTS Effect உடன் தூங்கி விடும் நபர்கள் தான். எப்படித்தான் முடியுதோ?   

                                       "SSssssssssssssssssssssssssssssssssssssss"

வேறென்ன பெருமூச்சு தான். ஆனா அதையும் தாண்டி சில பேர் இருக்காங்கநாம் அடிக்கடி பார்க்ககூடிய நபர்கள் தான். பஸ்ல ஏறி உட்கார்ந்தவுடன் தூங்கறவங்கள பத்தி தான் சொல்றேன்.






                                                                                      அதுல பாருங்க! மனைவியிடம் மிதிபடுவோர் சங்கம், அசராமல் அடி வாங்குவோர் சங்கம்  மாதிரி  Bus Sleepers அப்படின்னு ஒரு சங்கம் இருக்குன்னு நினைக்கிறேன்.  அவங்களோட முதல் பரிட்சையே பக்கத்துல  உட்கார்ந்து இருக்கிறவங்கள தேர்ந்தெடுக்கிறது தான். ரொம்ப குண்டாகவும் இருக்கக்கூடாது (இடைஞ்சலா இருக்கும்ல) ரொம்ப ஒல்லியாகவும் இருக்கக்கூடாது ( எலும்பு குத்தும் இல்ல), அடுத்து முக்கியமா மேலே படுத்து புரண்டாலும் முறைக்காத ஆளா இருக்கனும்.  பஸ்ல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இந்த ரெண்டு பரிட்சையிலும் பாஸ் ஆகிற முதல் ஆள் நானா தான் இருப்பேன். சங்கத்து ஆளுங்க பஸ்ல ஏறியவுடன் சீட் காலியா இருக்கானு கூட முதல்ல பார்க்க மாட்டாங்க, என்னை மாதிரி ஆள தான்  தேடுவாங்க. சிக்கிட்டோம் அவ்வளவு தான். நாலு சீட்டை தாண்டி குதிச்சு, பத்து பேரை ஏறி மிதிச்சி நம்ம பக்கத்து சீட்டை பிடிச்சிருவாங்க.

                                          உட்கார்ந்ததும் அவங்க வேலைய ஆரம்பிச்சிருவாங்க. அதுக்கப்புறம் நாம தான் கண்டக்டர் வரவும் அவங்கள எழுப்பி டிக்கட் எடுக்க வைச்சு, ஸ்டாப் வரவும் எழுப்பி இறக்கி விட்டு வரணும். நல்ல எண்ணெய் தலையோட பார்ட்டி எறிச்சு நம்ம சட்டை அம்பேல் தான். நமக்கு பஸ்ல ஏறினவுடன் பராக்கு பார்த்தே பழகிப்போச்சு. அதனால என்னா முட்டி மோதினாலும் தூக்கமும் வராது. நானும் ரொம்ப நாளா கவனிச்சி பார்க்கிறேன். அடுத்த சீட்ல உட்காந்திருக்கிறவங்க எல்லாம் டி.வி. பார்த்துக்கிட்டு, வேடிக்கை பார்த்துகிட்டு வர்றப்ப என் பக்கத்துல உட்கார்ந்து வர்றவங்க மட்டும் தூங்கி,தூங்கி விழுகிறாங்களே!  ஏன் பாஸ்?






                                                                           ஆனா இன்னொரு விஷயம் சொல்லியே
ஆகணும் சார்.  நம்ம பிரைவேட் பஸ்ல பாட்டு,  படம்னு போடறாங்க பாருங்க!
அவங்க வைக்கிற சத்ததில பஸ்ஸ்டாப்பில படுத்து இருக்கிற பச்சை பிள்ளைங்க கூட மிரண்டு போய் அழுக ஆரம்பிச்சிரும். சாமி படம் DVD வந்த சமயத்தில பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டுக்கு போன பிறகும் கூட ஹாரிஸ் ஜெயராஜ் காதுக்குள்ள உட்கார்ந்துகிட்டு இருக்கிற மாதிரியே இருந்துச்சு.. பக்கத்துல இருக்கிற பஸ்க்கும் சேர்த்து தான் சவுண்டு வைப்பாங்க. அதுலயும் நம்ம ஆளுங்க  அசராம தூங்குவாங்க பாருங்க. சான்சே இல்லை. மறுபடியும் முதல் வரி தான்.


                                                                                      சரி, விடுங்க, Why Stomach Burn?
"தோள் கொடுப்போர் சங்கம்"  அப்படின்னு  ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். சேர ஆசைப்படுபவர்கள் உடனடியாக அப்ளை செய்யவும். சட்டைதைக்கும் போதே Shoulder ல Sponge வைச்சு தைக்கிறது, Shoulder க்கு என்றே ஸ்பெசலா ஜிம்முக்கு போய் Exercise செய்வது என்று நிறைய ஐடியா கைவசம் இருக்கு. நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச ஐடியா இருந்தா கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க. சிட்டி பஸ்ல கூட தூங்கி விழுறாங்க சார்.




                                     "ஸ்டாப் வந்தாலும் எழுப்ப மாட்டீங்களே!"





மீண்டும் சந்திப்போம்.



5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ///சரி, விடுங்க, Why Stomach Burn?
    "தோள் கொடுப்போர் சங்கம்" அப்படின்னு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். சேர ஆசைப்படுபவர்கள் உடனடியாக அப்ளை செய்யவும். சட்டை
    தைக்கும் போதே Shoulder ல Sponge வைச்சு தைக்கிறது, Shoulder க்கு என்றே
    ஸ்பெசலா ஜிம்முக்கு போய் Exercise செய்வது என்று நிறைய ஐடியா கைவசம்
    இருக்கு. நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச ஐடியா இருந்தா கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க. சிட்டி பஸ்ல கூட தூங்கி விழுறாங்க சார்.
    /////

    ஹா.ஹா.ஹா.ஹா....நல்ல சங்கம்

    ReplyDelete
  3. @K.s.s.Rajh

    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  4. நகைச்சுவையாக இருக்கிறது.

    ReplyDelete
  5. @AMS
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...