10 September, 2012

அரசியலுக்கும் இந்தப் புதிருக்கும் சம்பந்தமில்லை

கணக்கு வழக்கில்லாம ஏகப்பட்ட தொழில் செய்து வரும் ஒரு முதலாளிக்கு  திடீர் என்று பெருத்த சந்தேகம் வந்தது. நாம் செய்து வரும் தொழிலில் எது அதிகம் கல்லா கட்டுது அப்படின்னு. கணக்குப் புலின்னு நினைச்சு ஒருத்தர கல்லாவில உட்கார வைச்சா அவரு வாயே திறக்க மாட்டேங்கறாரு. ஆனா அவரு சில Hints மட்டும் கொடுத்தார்.


1) ஆட்டுக்கறி விற்பவர்
2) செல்போன் ரீசார்ஜ் செய்பவர்
3) விளையாட்டு சாமான் விற்பவர்

இந்த மூன்று பேரில் ஒருவருக்கு  தான் அதிகம் வருமானம். 
யார் அதிகம் என்று அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்.

ஒரே ஒரு கண்டிசன் 
மூவரில் ஒருவர் மட்டுமே உண்மை பேசுவார். 
மற்ற இரண்டு பேரும் பொய் பேசுபவர்கள்.



முதலாளி மூவரிடமும் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில்கள்

ஆட்டுக்கறி விற்பவர்                             -        "நான் இல்லை."

செல்போன் ரீசார்ஜ் செய்பவர்             -        "நான் இல்லை"

விளையாட்டு சாமான் விற்பவர்        -        "செல்போன்  ரீசார்ஜ் செய்பவர்
                                                                                     என்று போட்டுக் கொடுத்தார்"








முதலாளிக்கு குழப்பம்.
இதில் யார் உண்மை பேசுகிறார்கள், 
யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.



மீண்டும் சந்திப்போம்.


8 comments:

  1. விளையாட்டு சாமான் விற்பவர்

    ReplyDelete
  2. ரொம்பவே குழப்புதே! ஆட்டுக்கறி விற்பவர் அதிகம் சம்பாதிப்பார் என்று நினைக்கிறேன்! செல்போன் ரீசார்ஜ் செய்பவர் உண்மை பேசுபவராக இருக்க வேண்டும்!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
    Replies
    1. குழப்புதேன்னு சொல்லிட்டு கரெக்டா அடிச்சிட்டீங்களே!

      Delete
  3. செல்போன் ரீசார்ஜ் செய்பவராக இருக்கலாம் என நான் நினைக்கிறன்...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    வலைப்பூ தலையங்க அட்டவணை
    info@ezedcal.com
    http//www.ezedcal.com

    ReplyDelete
    Replies
    1. விடை:
      விளையாட்டு சாமான் விற்பவர் சொல்வது (செல்போன் ரீசார்ஜ் செய்பவர்) உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆட்டுக்கறி விற்பவர் சொல்வதும் (நான் இல்லை) உண்மையாகி விடும். எனவே ஆட்டுக்கறி விற்பவர் தான் அதிகம் சம்பாதித்தவர்.
      செல்போன் ரீசார்ஜ் செய்பவர் சொன்னது உண்மை.
      மற்ற இரண்டு பேர் சொன்னதும் பொய்.

      டிஸ்கி:
      இது ஒரு சிம்பிளான புதிர் தான்.
      காங்கிரஸ் கட்சியையும், அதன் தலை சிறந்த மூன்று ஊழல்வாதிகளையும் ஜாடையாக சேர்த்துப் பார்ப்போம் என்று முயற்சித்தேன். யாரும் கவனித்த மாதிரியும் தெரியவில்லை. குழப்பமாகவும் போய் விட்டது என நினைக்கிறேன்.

      Delete
  4. @Minmalar:
    1. ஆட்டுக்"கறி" - COAL
    2. "செல்போன்" - 2G
    3. "விளையாட்டு" - Common Wealth

    Idhu correct'a....

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...