17 November, 2011

ஆத்தி இது வாத்து கூட்டம்

                                                                  ஒரு வேலை விஷயமாக நண்பருடன்
நாமக்கல்லில் இருந்து கரூருக்கு  வந்து கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட
கரூரின் அருகில் சுமார் 10 கி.மீ. இருக்கும்போது ரோட்டின் இருபுறமும் "இங்கு
வாத்து கறி கிடைக்கும்" என்ற போர்டு நிறைய தென்பட்டது. நன்பர் இந்த இடத்தில் வாத்து கறி ரொம்ப பேமஸ் என்றபடியே  ஒரு கீத்து கொட்டகை முன்பு வண்டியை நிறுத்தினார். ரொம்ப நல்லவங்க! அவங்களுக்கே மனசு கேட்காம  ஒரு இடத்தில கூட ஹோட்டல் என்று எழுதி வைக்கவில்லை.





                                                              ரோட்டின் ஒரத்தில் நல்ல விசாலமான இடம்.
முழுக்க கீத்து வேயப்பட்டிருந்தது. வாசலின் இடதுபுறம் பட்டி போல் கட்டி
விட்டு நிறைய வாத்துக்களை மேய விட்டிருந்தார்கள். பார்க்கவே அழகாக
இருந்தது. வலதுபுறம் ஒரு பெண் வாத்தை நிர்வாணமாக்கி வறுத்து கொண்டு
இருந்தார்.


                                 இவங்க கூட நல்லா மேய்ப்பாங்க  -  வாத்தை


                               "கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்ற பழமொழி கேட்க நல்லா இருந்தாலும், ஒரு பக்கம் கொன்று கொண்டே இருக்க, மறுபக்கம் தின்று கொண்டு இருக்க மனசு கேட்காததால், ====> உள்ளே போய் உட்கார்ந்து கொண்டோம் !. உள்ளே என்றவுடன் பெரிய பார்டிஷனை எல்லாம் எதிர்பார்க்க
வேண்டாம். தட்டி வைத்து அந்த இடத்தை நாலு பாகமாக பிரித்து இருந்தனர்.
முதல் பாகத்தில் சமையல் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் 3 வது பாகத்தில்
உட்கார்ந்து இருந்தோம். வாத்து கறியுடன் ! இட்லியும், புரோட்டாவும் கிடைக்கிறது. பொதுவாக தரம் தெரியாத உணவகங்களிலும், இடம் தெரியாத
ஊர்களிலும் சிக்கி கொண்டால் இட்லி தான் பெஸ்ட். சாம்பார் சூடாக இருந்தால்
(இட்லி சுமாராக இருந்தாலும்) எளிதில் உள்ளே தள்ளி விடலாம். Side Effect ம்
இட்லியில் பெரும்பாலும் வாய்ப்பில்லை.  ஆனால் என் உடம்பில் பாதி ரத்தமும், மீதி புரோட்டாவும் ஓடுவதால் எந்த ஊர் புரோட்டாவும் என் உடம்பில்
எளிதில் ஒட்டிக்கொள்ளும் என்ற அதீத நம்பிக்கையில் நான் வழக்கம் போல் புரோட்டாவையே ஆர்டர் செய்தேன்.





          மது அருந்த அனுமதியில்லை என போர்டு போட்டிருந்தாலும்.
                                                                                                                     தாலும்,
                                                                                                                           லும்,
                                                                                                                                 ம்,
                                                                                                                                  ம்..ம்..


                                                             நான் சென்ற வேலை முடியாத காரணத்தால்
நான் புரோட்டாவும், வாத்தும் மட்டுமே சாப்பிட்டேன், கண்ணீருடன்.

                                                         கண்ணீருக்கு காரணம் காரம்.

                                                            ஒவ்வொரு டேபிளிலும் தண்ணீர் டம்ள்ரில்
வைக்காமல் செம்பில் வைக்கும் போதே டவுட்டு.  (கரூரில் குடம், குடமாக தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது,  சப்பென்று தான் இருக்கும்.)
அது மட்டுமில்லாம தொட்டு கொண்டு சாப்பிட வைத்த குழம்பை, பழக்க தோஷத்தில் புரோட்டாவை பிச்சுப் போட்டு பிணைந்து அடித்து விட்டேன். வாயில் வைத்தால் கண்ணீர் மழையாக பொழியுது. அதையும் மீறி Full கட்டு கட்டி விட்டேன்.  அவ்வளவு டேஸ்ட்.  எதிர்பார்க்கவே இல்லை. அந்த பக்கம்
போகும் வாய்ப்பு கிடைத்தால் சுற்றுப்புறம், சுகாதாரம் எல்லாம் ரொம்ப
பார்க்காமல் ஒரு தடவை உள்ளே போய் சாப்பிட்டு பாருங்கள். அந்த பகுதியில்
உள்ள எல்லா ஹோட்டலிலும் ஓரளவுக்கு இதே டேஸ்ட் தான் உள்ளதாக சொல்கிறார்கள்.



                  அப்புறம் , வாத்து கறி சாப்பிட்டால் சளி தொந்தரவுக்கு நல்லதென்று
சொன்னார்கள். ( விற்பவர்கள் )



மீண்டும் சந்திப்போம்.



11 comments:

  1. //அப்புறம் , வாத்து கறி சாப்பிட்டால் சளி தொந்தரவுக்கு நல்லதென்று
    சொன்னார்கள்.
    //
    உண்மையாகவா ?

    ReplyDelete
  2. @"என் ராஜபாட்டை"- ராஜா
    விற்பவர்கள் தான் சொன்னார்கள்.
    டேஸ்ட் இருந்தது. அவ்வளவு தான்.

    ReplyDelete
  3. @"என் ராஜபாட்டை"- ராஜா
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. முழுமையாக பதிவு அனுப்புங்கள் நண்பரே.. நல்ல பதிவு..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. வாத்து கறி சாப்பிட்டால் சளி போகும்.........சரி.....,,உடம்புளே ஹீட்....எப்படி?..

    ReplyDelete
  6. @Cpede News
    ok. அடுத்த பதிவில் இருந்து முழு
    பதிவையும் அனுப்புகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  7. @kannan t m
    அடுத்தவங்க வாங்கி தந்தா
    ஜில்லுனு தான் இருக்கும்.

    ReplyDelete
  8. வாத்துக்கறியின் ருசியை சொல்லியிருக்கீங்க அருமை

    ReplyDelete
  9. @K.s.s.Rajh
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  10. வாத்து கறி சாப்பிட்டால் ,வாழ்க்கை வசந்தமாகும் . எப்புடி

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...