07 November, 2011

கமல் - படத்தில் இல்லாத பாடல்

                                                                          80 களில் படங்களுக்கு பூஜை போடும்
போது  எலுமிச்சை பழத்துடன், அப்பாவை கொன்றவனை பழி வாங்கும்  கதையையும்   எடுத்துக் கொண்டு தான் வருவார்கள். வெளி வரும் படத்தில்
பெரும்பாலான படங்கள் இதே கதையில் தான் வரும். ஆனால் அந்த கதையை
இப்படியும் எடுக்க முடியுமா? என்று வியக்கும்படி 1989ல் கமல் எடுத்திருந்தார்.



                                                         
                                                                            'அபூர்வ சகோதரர்கள்'   -   இந்த கதைக்கு
இது போதும் என எண்ணாமல் அந்த படத்திற்கு அவர் உழைத்த உழைப்பு தான்
அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. அப்பு கமலாக டெக்னாலஜி நிறைய
இல்லாத அந்த காலகட்டத்திலும் அற்புதமாக எடுத்திருந்தார். இசை,காமெடி,
சண்டை என எல்லாவற்றிலும் முழு திருப்தியுடன் வந்த அபூர்வ சகோதர்கள்
எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் சேர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.


  

  ஆனால் படம் கிட்டத்தட்ட பாதி எடுத்து முடித்த நிலையில் அதில் திருப்திஅடையாத கமல் எடுத்த படத்தை அப்படியே பரணில் தூக்கி வைத்து விட்டு நிறைய மாற்றங்கள் செய்து புதுசாக எடுக்க ஆரம்பித்து விட்டார். 
நினைத்து பாருங்கள்!.  
எந்த தயாரிப்பாளருக்கு அப்படி ஒரு நினைப்பு வரும். ( அபூர்வ சகோதரர்கள் - ராஜ்கமல் புரொடக்சன்ஸ்).  கமல் செய்தார். ஏன் என்றால் கமல் தனது படங்களை அந்த அளவு காதலித்தார். 

     



                                                                    இளையராஜாவின் இசையில் கமல்
அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக முதலில் எடுத்த இந்த பாடலை பாருங்கள். எத்தனை  மாற்றங்கள். மனோரமாவிற்கு பதில்  காந்திமதி உள்ளார். ஜனகராஜ் மற்றும் சிவாஜி (காமெடியில் எங்கேயோ போயிட்டாங்க!) வேறு வேறு கெட்டப்பில் உள்ளனர். இந்த பாடலை இளையராஜா வேறு எந்த படத்திலும்
உபயோகப்படுத்தவும் இல்லை.






                                    

      
                                                       இன்று பிறந்தநாள் காணும்
                                                                         கமலுக்கு
                                          தமிழ் பட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.




மீண்டும் சந்திப்போம்.




16 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த படம்

    ReplyDelete
  2. ஆஹா கமலின் அர்ப்பணிப்பு கலை தாகம் வியக்க வைக்கும் விஷயம்....!!!

    ReplyDelete
  3. எனக்கு ரொம்ப பிடித்த படம். உண்மையில் 'ராஜா கைய வச்சா' பாடல் போல இந்த பாடல் இல்லை என்பதால் தான் கமல் இந்த பாட்டை கைவிட்டு விட்டார்.

    ReplyDelete
  4. @K.s.s.Rajh
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. @N.H.பிரசாத்
    ஆமாம். போற போக்கில் அடித்து விட்டு
    போன பாடல் தான் உள்ளது.
    ஆனால்,அபூர்வ சகோதரர்கள் படத்தில்
    இடம் பெற்ற எல்லா பாடல்களுமே நன்றாக இருந்தது.

    ReplyDelete
  6. அருமையான நடிகர் கமல்

    ReplyDelete
  7. காந்திமதியை வைத்து முதலில் எடுத்த பாடலை பகிர்ந்தமையே இப்பதிவின் சிறப்பு வாழ்த்துக்கள்... கமலின் காலை தொட்டு கும்பிடனும்....

    ReplyDelete
  8. @"என் ராஜபாட்டை"- ராஜா
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. @மாய உலகம்
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  10. பார்க்காத விடியோவை தந்ததிற்கு நன்றி !

    ReplyDelete
  11. @மழைதூறல்
    ரொம்ப நன்றி நண்பா!

    ReplyDelete
  12. Watch Sourashtra First Movie egos eno Trailer
    Thank You
    http://www.youtube.com/watch?v=x60jdgLve70

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...