27 September, 2011

கண்ணாமூச்சி ஆடும் சதுரங்கம்

                                                                  படம் எடுப்பதே பெரிய போராட்டமாய்
இருக்கும் போது எடுத்தும் வெளி வராமல் இருக்கும் படங்கள் ஏராளம்.
அதிலும் ஓரளவுக்கு சொல்லும்படியான 'பார்த்திபன் கனவு' கொடுத்தும் கரு.பழனியப்பன் அடுத்து எடுத்த படமான 'சதுரங்கம்'  இன்னும் பூச்சாண்டி
காட்டிக்கொண்டிருக்கிறது.



                                                               2004 ல் எடுக்கப்பட்ட சதுரங்கம் 'விரைவில்'
என சமீபத்தில் விளம்பரம் செய்துள்ளனர். ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால்
நடித்து வித்யாசாகர் இசையில் கரு.பழனியப்பன் இயக்கியுள்ள இந்த படம்
ஒரு பத்திரிக்கையாளனின் சவால் மற்றும் காதலை சொல்லுகிறது.
ஆனால் இப்படத்தின் ஹீரோ ஸ்ரீ காந்த் தற்போது 2வது ஹீரோ,3வது ஹீரோ
என்ற ரீதியில் போய்விட்டார். கரு.பழனியப்பனுக்கும் சொல்லும்படி படம்
இல்லை. ஹீரோயின் சோனியா அகர்வால் காதலித்து,கல்யானம் செய்து
டைவர்சும் ஆகி இப்போழுது கொஞ்சம் அழகாக வேறு ஆகி விட்டார்.

                                                                 பாடல்கள் பாரதியார் ( ஆடுவோமே ),
பா.விஜய்,யுக பாரதி, அறிவுமதி எழுதியுள்ளனர்.பாரதியார் தவிர்த்து மற்ற
பாடல்கள் யார் யார் எழுதியது என்ற விஷயம் தெரியவில்லை.


           

                                                                 இதில் நிச்சயம் குறிப்பிடபட வேண்டியவர் இசையமைப்பாளர் விதயாசாகர். பாடல் வெளியான காலகட்டத்தில் இந்த
படத்தின் பாடல்கள் தான் நான் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
பாடல்களுக்காகவே படத்தையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். குறிப்பாக
2 பாடல்கள் விழியும்,விழியும் மற்றும் என்ன தந்திடுவேன் பாடல்கள்.


                                                               முதலில் விழியும்,விழியும் பாடல்.எந்த ஒரு
விஷயத்திலும் குறை சொல்ல முடியாதபடி இசை,குரல்கள்,வரிகள் என
சகல துறைகளிலும் முழு திருப்தி தரும் பாடல். காமத்தீ ஊற்றி எழுதிய
பாடல் தனி ரசனை. பாடல் வரிகளை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
கவிஞர் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.



                                                             

                                                                                         அடுத்துள்ள டூயட் பாடலான
என்ன தந்திடுவேன் பாடல் நல்ல மெலடி. 2வது சரணத்தில் வரும் அந்த
'தன தோம் தனன'  ஹம் வித்யாசாகரின் ஸ்பெசல் மயக்கம். மற்ற பாடல்கள்
சுமார் ரகம் தான் என்றாலும் இந்த 2 பாடல்களை கேட்டுப் பாருங்கள்.
நீங்களும் படத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்

மீண்டும் சந்திப்போம்.


                                                                 

5 comments:

  1. உங்களது தளத்தை பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் யுடான்ஸ் திரட்டியில் சேர்த்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

    http://udanz.com

    ReplyDelete
  2. பாட்டு மிகவும் இனிமை

    ReplyDelete
  3. @kannan t m

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. விழியும் விழியும் பாடல் எழுதியது கவிஞர் அறிவுமதி

    ReplyDelete
  5. @எழில்பாரதி
    தகவலுக்கு நன்றி

    நிச்சயம் பாராட்டப்படவேண்டிய கவிஞர்

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...