23 September, 2014
21 July, 2014
என்னைத்தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே
இளையராஜா இசையில் சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ள போர்க்களத்தில் ஒரு பூ படத்தில் எனக்கு பிடித்த பாடல்.
என்னைத் தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே
கைம்மாறு என்ன நான் உனக்கு தருவேன்.
பாடலை கேட்க ...
மற்ற பாடல்கள் பெரிதாக Impress செய்யவில்லை என்றாலும் இந்த ஒரு பாடல்
மிக திருப்தியாக இருக்கிறது. ஏன் இளையராஜா ஒவ்வொரு மூடுக்கும் இதுதான் Pattern, இவர் தான் Singer என்று வரையறை வகுத்துக் கொண்டு இசை அமைக்கிறார் என்று புரியவில்லை.
மீண்டும் சந்திப்போம்.
08 April, 2014
மிருகங்களின் தேர்தல்
மிருகராஜா சிங்கம் கிழவனாகி விட்டதால் ஓய்வு பெற விரும்பினார். அந்த காட்டிலே வேறு சிங்கம் இல்லை. எனவே சிங்கராஜாவே சொல்லி விட்டார். " தலைவராக ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் " என்று. அதிகமான போட்டி இருந்தால் ஒட்டுகள் சிதறி விடும் என்பதால் இருவர் மட்டுமே போட்டியிடுவது என்று அவை முடிவு செய்தன. மிருகங்களில் பெரியவர் என்று யானையைப் பெரிய மிருகங்கள் நிறுத்தி வைத்தன.
இளைஞர்களுக்கே வாய்ப்பு வேண்டுமென்று யானையை எதிர்த்துப் போட்டியிட குரங்கை நிறுத்தி வைத்தன சின்ன மிருகங்கள். சிங்கராஜா தேர்தலை மட்டும் நடத்தித் தர சம்மதித்தார்.
" மனிதர்கள் தங்கள் தேர்தலில் மிருகங்களின் சின்னங்களை வைப்பது போல் நாம் மனிதர்களின் சின்னங்களை வைக்கலாமா ? " என்று கேட்டது சிங்கம். " மனிதர்களிலே உருவ மாறுபாடு இல்லையே !" என்றது நரி. கடைசியில் வெள்ளைப்பெட்டி, பச்சைப்பெட்டி என்று வைப்பதாக முடிவாயிற்று. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது.
" யானை விநாயகரின் அம்சம் " என்று ஆதரித்தது கரடி."
"கரடி.. கரடிவிடுகிறார். ", முதலை வாயில் மாட்டிக்கொண்ட யானை வாயில் அகப்படாதீர் ! " என்றது நரி குரங்கின் சார்பில்., " சஞ்சீவி மலையும் கொண்டு வரும் ஆற்றல் குரங்குக்கு உண்டு. அநுமாரை மறக்காதீர்" என்றும் பேசியது.
" குரங்கு கைபூமாலையாகிவிடும் காடு " யானை பேசியது.
" யானை வாய்க் கரும்பாகிவிடும் காடு " குரங்கு பதிலடி கொடுத்தது.
"வெள்ளை மனம் கொண்ட யானைக்கு வெள்ளைப் பெட்டியில் போடுங்கள் ஓட்டு !".
:" யானை கொடுக்கும் கரும்பில் ஏமாறாதீர்" என்றது குரங்கு.
" குரங்கு கொடுக்கும் கனியில் ஏமாறாதீர்" என்றது யானை.
" யாரும் எதுவும் கொடுக்கக்கூடாது. கொடுத்தால் தேர்தல் செல்லாது " என்று உத்தரவிட்டது சிங்கம்.
:" யானை மதம் பிடித்தால் காட்டையே அழித்து விடும்" குரங்கின் சார்பில் ஓநாய் பேசியது.
:" ஊரை எரித்த குரங்கு காட்டை எரிக்காதா? " என்றது புலி.
" சினிமா சான்ஸ் வந்தாலோ, சர்க்கஸ் வந்தாலோ, ஊர்வலம் வந்தாலோ யானை ஊருக்குள் ஓடிவிடும்" என்றது குரங்கு.
" குரங்காட்டி கிடைத்தாலே போதுமே! " என்று ஏசியது யானை. கூட்டம் கோஷங்களெல்லாம் தேர்தலுக்கு முதல் நாளோடு முடிவடைந்தன.
" யானைக்கும் அடி சறுக்கும்"
' குரங்கு புத்தி கூடவே கூடாது "
போன்ற வாசகங்கள் எழுதிய அட்டைகள் கூட தேர்தல் சாவடிக்கு அருகிலிருந்து அகற்றப்பட்டன.
யானை பெருமிதத்துடன் அசைந்து அசைந்து மகிழ்ந்தது. பெரும்பான்மையான மிருகங்கள், " குரங்கை நம்பாது " என்று நரியும் முன்னங்காலைப் பிசைந்தது.
யானைக் கட்சியினர் குரங்கு ஆதரவாளர்களை கட்சி மாறவும் தூண்டினார்கள் என்று சொல்லப்பட்டது. அதே போன்று குரங்கும் முயன்றதாக யானை குற்றம் சாட்டியது.
" கிளைக்குக் கிளை தாவும் குரங்கே யானையின் பக்கம் போய் விட்டது " என்று வதந்தியைக்கூட கிளப்பி விட்டார்கள்.
" குரங்கும், நரியும் கூடி ஆலோசித்தன. குரங்கின் காதில் நரி கிசுகிசுத்தது. அவ்வளவு தான். குரங்கு வெளியே பாய்ந்தோடியது.
விடிந்ததும் தேர்தல். மிருகங்கள் வரிசை வரிசையாக வந்து நின்றன. ஒவ்வொருவரும் கையில் கொடுக்கப்பட்ட பனை ஓலைச்சீட்டை எடுத்துக்கொண்டு பாழ் மண்டபத்தினுள் சென்றன. திரும்பி வரும் போது மட்டும் ஏதோ திகைப்பு. ஓட்டுப் போட்டவர் எதுவும் பேசாமல், போலிஸ் வேங்கை விரட்டிக் கொண்டிருந்தது. சிங்கராஜா உட்பட எவரும் ஓட்டுப்பதிவு முடியும் வரை ஓட்டுச்சாவடிக்குள் போகக்கூடாது என்று முன்னமே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் குரங்கு, யானை உட்பட சிங்கராஜா உள்ளே சென்றார், என்ன ஆச்சர்யம்? அங்கே வெள்ளைப்பெட்டியே இல்லை....
இரண்டுமே பச்சை பெட்டிகள் !... சட்டென்று குரங்கு நாக்கைக் கடிந்துக் கொண்டது. சிங்கராஜாவின் மீது பாய்ந்து அவர் அணிந்திருந்த கூலிங்கிளாசைத் தட்டி விட்டது. சிங்கராஜாவுக்கு விஷயம் புரிந்தது. ஓட்டுப் போட வெளியில் நிற்பவர்களுக்கு பச்சை நிற கூலிங் கிளாஸ் போட அனுமதித்தது தவறு .... நரியின் யோசனை படி குரங்கு தான், தன் படையோடு போய் கூலிங்கிளாஸ் கடையையே காலி செய்து கிளப்பிக் கொண்டு வந்தது...!
கட்சி வேறுபாடின்றி சிங்கத்தை விட்டே அனைவருக்கும் கூலிங்கிளாஸ் தர்மம் செய்தது குரங்கு. இதை யானையும் ஆட்சேபிக்கவில்லை. வெயிலின் கொடுமை கருதி...! சிங்கமும் ஒன்றை எடுத்துக் கொண்டது தான் தவறாகப் போயிற்று என்று நினைத்தது குரங்கு.
எல்லா மிருகங்களும் இப்போது தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்தன. " இரண்டும் பச்சையாகத் தெர்ந்தன" என்று !.
" இந்த தேர்தல் செல்லாது. வேறு தேர்தல் தான் நடத்த வேண்டும் " என்றது கரடி.
" குரங்கு மட்டும் மறுபடி தேர்தலில் நிற்கவே கூடாது " என்றது யானை !.
" தேர்தலே வேண்டாம், நானே ராஜா " என்று கர்ஜித்தது சிங்கம்.
டிஸ்கி :
" ஜனவரி 1986 பூந்தளிர் இதழில் வெளியான கதை. இப்போது நடக்கும் தேர்தலுடன், யாருடனும், எதனுடனும் ஒப்பிட வேண்டாம்.
மீண்டும் சந்திப்போம்.
Labels:
animals,
election,
gif images,
poonthalir,
story,
கதை,
சிறுவர்,
தேர்தல்,
பூந்தளிர்,
மிருகம்
05 August, 2013
சிக்கனமான கூட்டணி
இது ஒரு எளிமையான சங்கிலி புதிர். ஐந்து சிறிய சங்கிலி துண்டுகள் உள்ளன. அதை மொத்தமாக ஒரே சங்கிலியாக இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள் இல்லாத புதிர் இருக்குமா?. சங்கிலியை ஒன்றுடன் ஒன்று இணைக்க கட் செய்து தானே இணைக்க வேண்டும். அதற்கான செலவு ஒரு இணைப்பை கட் செய்ய ஒரு ரூபாய், வெல்டிங் செய்து இணைக்க இரண்டு ரூபாய். ( எந்த ஊரில் என்று கேட்காதீர்கள், ஒரு வேளை சாப்பாடே ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது என்கிறார்கள் நம் தலைவர்கள்). கீழே உள்ள படத்தை பாருங்கள். அது போல் ஐந்து பிரிவாக உள்ள சங்கிலியை மேலே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரே சங்கிலியாக இணைக்க வேண்டும். அவ்வளவே!. கட் செய்து வெல்டிங் வைத்து இணைக்க குறைந்த பட்சம் மொத்தம் எவ்வளவு பணம் ஆகும் என்று சொல்லுங்கள்
.
Relax Corner
மீண்டும் சந்திப்போம்.
Subscribe to:
Posts (Atom)