Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

23 September, 2014

மாயா மாயா ...


என்னைக் கவர்ந்த சில Gif Animation படங்கள்...


மீண்டும் ஜினோ
 


நரி பரியான கதை கேள்விப்பட்டிருப்பீர்கள், இது எலி கிளியான கதை.
(எலி தான இது )



பழைய ராமநாராயணன் படங்களின் டைட்டில்  எபெக்ட்





ஏன் இந்த Balls எல்லாம் கும்பல், கும்பலா சாமி ஆடுது.

Ringa.. ரிங்கா.. Ringa.. ரிங்கா...





எலும்பா இருந்தா ஆடுறது ஈஸின்னு இப்ப தெரியுதா ?






 அடுத்து, தூரத்தில் பார்த்தால் ஒரு மாதிரியாகவும், பக்கத்தில் பார்த்தால் வேறு மாதிரியாகவும் தெரியும் Illusion வகை படங்களின் தொகுப்பாய் ஒரு விடியோ ..






மீண்டும் சந்திப்போம்...



12 December, 2012

12-12-12

1) ரஜினி,சினிமாதுறையில் உள்ள மூன்று பேர் முன் இன்றும் சிகரெட் பிடிக்கமாட்டார். 1.அவர் குரு கே.பாலசந்தர், 2. ஏ.வி.எம்.சரவணன், 3. எஸ்.பி.முத்துராமன்.


2) தான் நடித்ததிலேயே ரஜினிக்கு மிகவும் பிடித்த படம் மகேந்திரனின். 'முள்ளும் மலரும்'.


3) ரஜினி, அமிதாப்பின் 12 படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த ரீமேக் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள்.






4) ஒவ்வொரு படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன், ரஜினி திருப்பதிக்குச் சென்று பாலாஜியைத் தரிசித்த பின்னரே Shooting ஆரம்பிப்பது என்ற வழக்கத்தை இன்றும் பின்பற்றுகிறார்.


5) கண்டக்டர் ஆவதற்கு முன்னர், ரஜினி 'கன்னட சம்யுக்தா' என்ற தினசரியில், 3 நாட்கள் உதவி ஆசிரியராக வேலை செய்தார்.


6) தன் முதல் காரான பியட், முதல் ஸ்கூட்டர் லாம்பரெட்டா அனைத்தையும் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.







7) இளையராஜாவை "சாமி" என்று தான் ரஜினி கூப்பிடுகிறார். ரமண மகரிஷியையும், திருவண்ணாமலையையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். சினிமாவையும் தாண்டிய ஆழ்ந்த நட்பு இருவருக்கும் இடையே உண்டு.


8) ரஜினி இன்றளவும் சாதாரண நோக்கியா 3000 மாடல் போனையே பயன்படுத்தி வருகிறார்.


9) கடுமையாக, உயிரையே உறைய வைக்கும் அளவு ஜில்லிப்பான ருத்ரா பிரயாகில் மற்றவர்கள் தயங்கி நிற்கும் போது, தடாலென வெறும் துண்டுடன் உள்ளே குதித்து ஆனந்தமாய்க் குளிப்பது ரஜினியின் பொழுது போக்கு.







10) ரஜினியின் குசேலன் உருவப்படத்தை அமெரிக்காவின் M&M Candy Company (நம் ஊர் Gems போன்ற மிட்டாய்கள்) ஒவ்வொரு மிட்டாய் மேலும் பொறித்துள்ளது.


11) ரஜினிக்கு மிகப் பிடித்த உணவுப் பொருள்கள் அவித்த வேர்க்கடலையும் சிக்கன் கால்களும் தான்.


12)  ரஜினிக்கு மாறு வேடத்தில், தியேட்டருக்குச் சென்று அடுத்தவர் நடித்த படத்தைப் பார்ப்பதில் கொள்ளைப் பிரியம்.





"ரஜினி பேரக் கேட்டாலே... "    புத்தகத்திலிருந்து.



12-12-12 என்ற Special தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




ஏற்கனவே ஒரு பதிவில் வெளியிட்ட தளபதி ரீமிக்ஸ் வீடியோ மறுபடியும்.





மீண்டும் சந்திப்போம்.



24 January, 2012

Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்

நெட் கனெக்சன் இல்லாமல் இயங்கும் வெப்சைட் பார்த்திருக்கிறீர்களா?. ரஜினியின் பவரால் இயங்கும் தளம் இது என புல்லரிக்க வைக்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளம் Offline ல் மட்டுமே வேலை செய்யும்படி உருவாக்கியுள்ளார்கள்.ரஜினியின் பெயரைச் சொல்லி ரவுண்டு கட்டி வரும் காமெடிகள் வடக்கில் அதிகம். அட! இது நமக்கு தோணாம போச்சே? என்று S.P.முத்துராமனும்,K.S ரவிக்குமாரும் மிரளும் படி சில காமெடிகளும் உள்ளது. 



சாம்பிளுக்கு சில :

ரஜினி ஒரு தடவை குதிரையின் கழுத்தில் ஒரு குத்து விட்டார். பின்னாளில் அதன் சந்ததி தான் ஒட்டகச்சிவிங்கி ஆனது.

இண்டெலின் புதிய விளம்பரம்  . 'Rajnikanth Inside'

ரஜினி 100 மீட்டர் ரேசில் முதலாவதாக வந்தார். பார்த்த Einstein பட்டுனு போயிட்டார். காரணம் லைட் இரண்டாவதாக வந்தது.

ரஜினி Titanic படத்தில் நடித்திருந்தால் Climaxல் ஒரு கையில் ஹீரோயினையும், மறு கையில் டைட்டானிக் கப்பலையும் பிடித்துக் கொண்டு நீந்தியே கரையேறி இருப்பார்.

Nokia அடுத்து 'R' (Rajnikanth) series போனை வெளியிடுகிறது.
Features:
1 Year Battery Backup
20 Sims
1000 Megapixel Camera
TV
Washing Machine
Fridge
Micro Oven
Rocket Launcher
AK 47

சாம்பிளுக்கு ஒரு படம்




சாம்பிளுக்கு ஒரு வீடியோ





இப்பொழுது Latest ஆக ரஜினியின் பவரில் இயங்கும் இணையதளம்.





இந்த தளத்திற்கு சென்றவுடன் இணைய இணைப்பை துண்டிக்க சொல்கிறார்கள். அதன்பின் தான் உள்ளேயே செல்கிறது. நன்றாகவே இருக்கிறது. சின்ன சின்ன விபரங்களுடன் Flashல் கொடுத்துள்ளார்கள்.எல்லாம் HTML கைங்கர்யம் தான், ஆனால் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள். நாங்கெல்லாம் தீவிர ரஜினி ரசிகர்களப்பா! நீங்க என்ன காமெடி பண்ணினாலும் அதையும் ரசிச்சு பார்ப்போம்.(எவ்வளவோ பாத்துட்டோம், இத பார்க்க மாட்டோமா?)

பாராட்டியோ,திட்டியோ,நக்கலடித்தோ பல பேர் அவரால் பலனடைந்து கொண்டிருக்கிறார்கள்.  அது தான் ரஜினியின் பவர்.



மீண்டும் சந்திப்போம்.




15 January, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்

முடிந்து போன போகி
இன்றைய பொங்கல் / தமிழ் புத்தாண்டு (!)
நாளைய மாட்டுப்பொங்கல் / திருவள்ளுவர் தினம்
நாளை மறுநாள் உழவர் திருநாள்
எல்லாத்துக்கும் சேர்த்து பொங்கலோ பொங்கல்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!































அப்புறம், Discovery channel தமிழ் டி.வி.ல பொங்கல் வாழ்த்துக்கள் அப்படின்னு ஒரு வீடியோ போட்டாங்க, பாட்டு சூப்பரா இருந்தது. பாருங்கள்.






மறுபடி, முதல் 6 வரிகளை படிச்சுங்கோங்க!

மீண்டும் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...