Showing posts with label election. Show all posts
Showing posts with label election. Show all posts

08 April, 2014

மிருகங்களின் தேர்தல்


                          மிருகராஜா சிங்கம் கிழவனாகி விட்டதால் ஓய்வு பெற விரும்பினார். அந்த காட்டிலே வேறு சிங்கம் இல்லை. எனவே சிங்கராஜாவே சொல்லி விட்டார்.    " தலைவராக ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் " என்று. அதிகமான போட்டி இருந்தால் ஒட்டுகள் சிதறி விடும் என்பதால் இருவர் மட்டுமே போட்டியிடுவது என்று அவை முடிவு செய்தன. மிருகங்களில் பெரியவர் என்று யானையைப் பெரிய மிருகங்கள் நிறுத்தி வைத்தன. 





இளைஞர்களுக்கே வாய்ப்பு வேண்டுமென்று யானையை எதிர்த்துப் போட்டியிட குரங்கை நிறுத்தி வைத்தன சின்ன மிருகங்கள். சிங்கராஜா தேர்தலை மட்டும் நடத்தித் தர சம்மதித்தார்.
                               
          
       " மனிதர்கள் தங்கள் தேர்தலில் மிருகங்களின் சின்னங்களை வைப்பது போல் நாம் மனிதர்களின் சின்னங்களை வைக்கலாமா ? " என்று கேட்டது சிங்கம். " மனிதர்களிலே உருவ மாறுபாடு இல்லையே !" என்றது நரி. கடைசியில் வெள்ளைப்பெட்டி, பச்சைப்பெட்டி என்று வைப்பதாக முடிவாயிற்று. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது.

               " யானை விநாயகரின் அம்சம் " என்று ஆதரித்தது கரடி."   

 


         "கரடி.. கரடிவிடுகிறார். ", முதலை வாயில் மாட்டிக்கொண்ட யானை வாயில் அகப்படாதீர் ! " என்றது நரி குரங்கின் சார்பில்.,  " சஞ்சீவி மலையும் கொண்டு வரும் ஆற்றல் குரங்குக்கு உண்டு. அநுமாரை மறக்காதீர்" என்றும் பேசியது. 

                " குரங்கு கைபூமாலையாகிவிடும் காடு " யானை பேசியது.

                " யானை வாய்க் கரும்பாகிவிடும் காடு " குரங்கு பதிலடி கொடுத்தது.
       
         "வெள்ளை மனம் கொண்ட யானைக்கு வெள்ளைப் பெட்டியில் போடுங்கள் ஓட்டு !".




                          :" யானை கொடுக்கும் கரும்பில் ஏமாறாதீர்" என்றது குரங்கு.

                          " குரங்கு  கொடுக்கும் கனியில்  ஏமாறாதீர்" என்றது யானை.


      " யாரும் எதுவும் கொடுக்கக்கூடாது. கொடுத்தால் தேர்தல் செல்லாது " என்று உத்தரவிட்டது சிங்கம். 

:" யானை மதம் பிடித்தால் காட்டையே அழித்து விடும்" குரங்கின் சார்பில் ஓநாய் பேசியது.

 :" ஊரை எரித்த குரங்கு காட்டை எரிக்காதா? " என்றது புலி.



" சினிமா சான்ஸ் வந்தாலோ, சர்க்கஸ் வந்தாலோ, ஊர்வலம் வந்தாலோ யானை ஊருக்குள் ஓடிவிடும்" என்றது குரங்கு.

  " குரங்காட்டி கிடைத்தாலே போதுமே! " என்று ஏசியது யானை. கூட்டம் கோஷங்களெல்லாம் தேர்தலுக்கு முதல் நாளோடு முடிவடைந்தன.

                                         " யானைக்கும் அடி சறுக்கும்"

                                         ' குரங்கு புத்தி கூடவே கூடாது "

போன்ற வாசகங்கள் எழுதிய அட்டைகள் கூட தேர்தல் சாவடிக்கு அருகிலிருந்து அகற்றப்பட்டன.



            யானை பெருமிதத்துடன் அசைந்து அசைந்து மகிழ்ந்தது. பெரும்பான்மையான மிருகங்கள், " குரங்கை நம்பாது " என்று நரியும் முன்னங்காலைப் பிசைந்தது.

                                  யானைக் கட்சியினர் குரங்கு ஆதரவாளர்களை கட்சி மாறவும் தூண்டினார்கள் என்று சொல்லப்பட்டது. அதே போன்று குரங்கும் முயன்றதாக யானை குற்றம் சாட்டியது.

                                  " கிளைக்குக் கிளை தாவும் குரங்கே யானையின் பக்கம் போய் விட்டது " என்று வதந்தியைக்கூட கிளப்பி விட்டார்கள்.

                        " குரங்கும், நரியும் கூடி ஆலோசித்தன. குரங்கின் காதில் நரி கிசுகிசுத்தது. அவ்வளவு தான். குரங்கு வெளியே பாய்ந்தோடியது.



                     விடிந்ததும் தேர்தல். மிருகங்கள் வரிசை வரிசையாக வந்து நின்றன. ஒவ்வொருவரும் கையில் கொடுக்கப்பட்ட பனை ஓலைச்சீட்டை எடுத்துக்கொண்டு பாழ் மண்டபத்தினுள் சென்றன. திரும்பி வரும் போது மட்டும் ஏதோ திகைப்பு. ஓட்டுப் போட்டவர் எதுவும் பேசாமல், போலிஸ் வேங்கை விரட்டிக் கொண்டிருந்தது. சிங்கராஜா உட்பட எவரும் ஓட்டுப்பதிவு முடியும் வரை ஓட்டுச்சாவடிக்குள் போகக்கூடாது என்று முன்னமே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் குரங்கு, யானை உட்பட சிங்கராஜா உள்ளே சென்றார், என்ன ஆச்சர்யம்? அங்கே வெள்ளைப்பெட்டியே இல்லை.... 

                 இரண்டுமே பச்சை பெட்டிகள் !... சட்டென்று குரங்கு நாக்கைக் கடிந்துக் கொண்டது. சிங்கராஜாவின் மீது பாய்ந்து அவர் அணிந்திருந்த கூலிங்கிளாசைத் தட்டி விட்டது. சிங்கராஜாவுக்கு விஷயம் புரிந்தது. ஓட்டுப் போட வெளியில் நிற்பவர்களுக்கு பச்சை நிற கூலிங் கிளாஸ் போட அனுமதித்தது தவறு .... நரியின் யோசனை படி குரங்கு தான், தன் படையோடு போய் கூலிங்கிளாஸ் கடையையே காலி செய்து கிளப்பிக் கொண்டு வந்தது...!




                   கட்சி வேறுபாடின்றி சிங்கத்தை விட்டே அனைவருக்கும் கூலிங்கிளாஸ் தர்மம் செய்தது குரங்கு. இதை யானையும் ஆட்சேபிக்கவில்லை.  வெயிலின் கொடுமை கருதி...! சிங்கமும் ஒன்றை எடுத்துக் கொண்டது தான் தவறாகப் போயிற்று என்று நினைத்தது குரங்கு.

     எல்லா மிருகங்களும் இப்போது தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்தன. " இரண்டும் பச்சையாகத் தெர்ந்தன" என்று !.

         " இந்த தேர்தல் செல்லாது. வேறு தேர்தல் தான் நடத்த வேண்டும் "     என்றது கரடி.

              " குரங்கு மட்டும் மறுபடி தேர்தலில் நிற்கவே கூடாது " என்றது யானை !.

               " தேர்தலே வேண்டாம், நானே ராஜா " என்று கர்ஜித்தது சிங்கம்.





டிஸ்கி :
               " ஜனவரி 1986 பூந்தளிர் இதழில் வெளியான கதை. இப்போது நடக்கும் தேர்தலுடன், யாருடனும், எதனுடனும் ஒப்பிட வேண்டாம்.


மீண்டும் சந்திப்போம்.


18 October, 2011

கரெக்டா சொல்லியிருக்காரு கேப்டன்

                                                                       முதல் கட்ட தேர்தல் முடிந்ததும்
முதல் கட்டமாக அதிமுகவை எதிர்த்து திருவாய் மலர்ந்திருக்கிறார்
விஜயகாந்த். திமுக வை போல் அதிமுகவும் தேர்தல் அராஜகம்
செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இனி தினமும் அறிக்கை எதிர்
பார்க்கலாம் என நினைக்கிறேன்.




                                                       ஆனால் நான் சொல்ல போகும் மேட்டர்
வேற. அப்போது பேசிய விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலே தேவை
இல்லை என கூறியுள்ளார். ஆளும் கட்சியிடமே அந்த பொறுப்பை
ஒப்படைத்து விடலாம் என்பது போல் பேசியுள்ளார். உண்மை தானே!
உள்ளாட்சி அமைப்பை கொண்டு வந்ததே நிர்வாக வசதிகளுக்கும்,
நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் அரசின் திட்டம் போய் சேர வேண்டும்
என்று தானே!.ஆனால் வார்டு மெம்பர் சுயேட்சை, கவுன்சிலர் திமுக,
மேயர் அதிமுக என்று இருந்தால் எப்படி வேலை நடக்கும். முன்பு கூட
வெளியில் அடித்து கொண்டாலும் ஊழல் போன்ற விஷயங்களில் ஒன்று
சேர்ந்து கொள்வார்கள். இப்போது எல்லாம் சரிக்கு சரி நகம் போட்டு
கொள்கிறார்கள். இந்த அழகில் நிர்வாகத்தை  எங்க ஒழுங்காக நடத்தறது.

                                                                              ஆனா விஜயகாந்த் சொன்னதுக்கு
காரணம் இதெல்லாம் இருக்காது.
                          1) சும்மா, சும்மா செலவு செய்யனுமே!
                          2) தனி ஆளா மறுபடியும் ஊர்,ஊரா சுத்தனுமே!
                                               முக்கியமா
                          3) 41 வேட்பாளர் பேரை ஞாபகம் செய்யறதுக்கே நாக்கு
                               தள்ளி போச்சு, இதுல இத்தனை வேட்பாளர் பேரை எப்படி
                              ஞாபகம் வைத்து கொள்வது என்பது போன்ற காரணமாக
                               கூட இருக்கலாம்.




மீண்டும் சந்திப்போம்.

                                                      

16 October, 2011

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்



                                                                ஒவ்வொரு தடவை தேர்தல் வரும் போது
எல்லாம் இந்த சந்தேகமும் எனக்கு வந்துகிட்டே இருக்கு. ஓட்டு
போடுவதற்கு ஒரு நாள் முன்னாடி பிரசாரத்தை நிப்பாட்டனும்னு  சட்டம் போட்டு விடுகிறார்கள் ஆனால் அதற்கு அப்புறமும் எல்லா சானல்களிலும் நியூஸ் காட்டுகிறேன் பேர்வழி என்று பிரசாரம் செய்ததை காட்டி கொண்டே இருக்கிறார்கள்.  இது எந்த கணக்கில் வரும் என்று தெரியவில்லை. ஒரு வேளை டி.வி.,பேப்பர் எல்லாம் மீடியா கிடையாது என்று தேர்தல் கமிஷன் நினைக்கிறதோ என்னமோ?  

                          யாராச்சும் விளக்குங்களேன்.



                                             ஓட்டு போட போகனும் விடுங்கப்பா !



                                                          இதே கணக்கு தான் டாஸ்மாக் கடைகளுக்கும்.
ஒட்டுப்பதிவின் போது எல்லா ஒயின்ஸாப்பிற்கும் லீவு விட்டு விடுகிறார்கள். மற்ற நாட்களில் எப்படி வேண்டுமானால் குடித்து சாவுங்கள்,  ஓட்டு போடும் நாளில் மட்டும் தெளிவாக இருங்கள் என்று சொல்கிறார்களா? இல்லை நம் மக்கள் மட்டையாகி ஓட்டு போட யாரும் வரமாட்டார்கள் என்று கடையை மூடி விடுகிறார்களா?

            யாராச்சும் விளக்குங்களேன்.

 
 இது ஆப்படிக்க !




இது ஆப் அடிக்க !!



டிஸ்கி:

                  தேர்தல் நடைமுறை அறிவித்த பின்னர் எந்த ஒரு சலுகையோ,
திட்டமோ அறிவிக்கக்கூடாது என்று சொல்வாங்க. ஆனால் முதல்வர்
போனஸ் அறிவிச்சிருக்காங்களே. அது எப்படினு விளக்கமெல்லாம்
கேட்க மாட்டேன். கேட்டாலும் வாயா திறக்கப் போறீங்க!



மீண்டும் சந்திப்போம்.

08 October, 2011

தேர்தல் கமிஷனின் அதிமுக சின்னம்

                                                                        திருச்சி இடைத்தேர்தல் அக்.13ம் தேதியும்,
உள்ளாட்சி தேர்தல் அக்.17ம் தேதியும் நடைபெறுவதால் இடைத்தேர்தலில்
ஓட்டுப்போடும் போது இடது கை ஆள் காட்டி விரலிலும், உள்ளாட்சி தேர்தலில்
ஓட்டுப் போடும் போது  இடது கை ஆள் காட்டி விரலுக்கு அடுத்து உள்ள நடு
விரலிலும் அடையாள மை வைக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதுக்கு தேர்தல் கமிஷன் ஈஸியா இப்படி சொல்லி விடலாமே!


தமிழக மக்கள் ஓட்டுப் போடும் போது இடது கையில் உள்ள இந்த விரலில் 
மை வைக்கப்படும்








திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு மட்டும் இடது கையில் உள்ள 
இந்த இரண்டு விரலிலும் மை வைக்கப்படும்.




இந்த ஓட்டு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா!





அனுஷ்கா கூட இடைத்தேர்தல்ல இரட்டை இலைக்கு ஓட்டு
கேட்கிறாங்களோ?



மீண்டும் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...