Showing posts with label mp3. Show all posts
Showing posts with label mp3. Show all posts

21 July, 2014

என்னைத்தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே


இளையராஜா இசையில் சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ள  போர்க்களத்தில் ஒரு பூ படத்தில் எனக்கு பிடித்த பாடல்.





என்னைத் தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே
கைம்மாறு என்ன நான் உனக்கு தருவேன்.
பாடலை கேட்க ...






மற்ற பாடல்கள் பெரிதாக Impress செய்யவில்லை என்றாலும் இந்த ஒரு பாடல் 
மிக திருப்தியாக இருக்கிறது. ஏன் இளையராஜா ஒவ்வொரு மூடுக்கும் இதுதான்  Pattern, இவர் தான் Singer என்று வரையறை வகுத்துக் கொண்டு இசை அமைக்கிறார் என்று புரியவில்லை.

மீண்டும் சந்திப்போம்.


01 September, 2012

நீ (இளையராஜா) தானே என் பொன்வசந்தம்

 இளையராஜா தலைமுறைகளை தாண்டி நின்று கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மாற்றம் தான். அன்னக்கிளி, பத்ரகாளியில் இருந்த இளையராஜா குரு, பிரியா  படங்களில் இல்லை. அக்னி நட்சத்திரம், காதல் ரோஜாவே படங்களில் வித்தியாசம் காண்பித்த இளையராஜா ஏனோ அதன் பிறகு நீண்ட காலமாக ஓரிடத்தில் நின்று விட்டார். 




இளையராஜாவின் தீவிர ரசிகர்களான மிகப்பெரிய கூட்டம் அவரின் வழக்கமான இசையை ரசித்துக் கொண்டிருந்தாலும், மனதளவில் சின்ன ஏக்கம் இருந்தது (எனக்கு). அதை உடைத்தெறிந்திருக்கிறார் இளையராஜா நீ தானே என் பொன்வசந்தம் படத்தில். புது வித கம்போசிங்கில் தனதே தனதான ஸ்டைலில் ராஜா ராஜா தான் என்பதை நிருபித்திருக்கிறார். 

நீ தானே என் பொன்வசந்தம்.
புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் இளையராஜா.





ஏற்கனவே Youtubeல் ஹிட் அடித்திருந்த சாய்ந்து,சாய்ந்து, என்னோடு வா வா சேர்த்து மொத்தம் 8 பாடல்கள். 
என்னோடு வா வா பாடல்கள் Trailorல் கேட்டவுடன் பிடித்திருந்தாலும் என் Favourite song யுவனின் மற்றொரு பாடலான 'பெண்கள் என்றால்' தான். 




 RAJA ROCKS

கதாநாயகியை தேடிப்போகும் கதாநாயகன் பாடுவதாக வரும்  கார்த்திக்கின் குரலில் 'காற்றைக்கொஞ்சம்' ,மற்றும் 'முதல்முறை'  , 'சற்று முன்பு'  என பாடல்களில் வெரைட்டி காட்டி கலக்கியிருக்கிறார்  ராஜா. இளையராஜா பாடியிருக்கும் 'வானம் மெல்ல' பாடலும் சுகம். 'பிடிக்கல மாமு' பாடலில் (நல்ல வேளை S.N.சுரேந்தர் பாடவில்லை) ராஜா காட்டியிருக்கும் வேகம் மற்றும் ஒரு ஆச்சர்யம்.

திருப்தியாக கேட்டு ரசிக்க ஒரு முழு ஆல்பம். 




இளையராஜா மேடையில் பேசியது 
"எட்டு பாடல்களையும் ரெக்கார்ட் செய்தபிறகுதான், என்னால் அந்தமாதிரி செய்யவரும் என்பது எனக்கே தெரியவந்தது. அதுபோல . நிறைய செய்யவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது."

இது போன்ற பாடல்களை கேட்க வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை நிறைய இருக்கிறது. நிறைவேற்றுங்கள் ராஜா

டிஸ்கி
August 20ல் நடந்த இளையராஜாவின் "Be with Me - Maestro"  Programme பற்றி இசைஞானி பக்தன் அருமையாக பதிவிட்டுள்ளார்.  படித்துப்பாருங்கள்


மீண்டும் சந்திப்போம்.



03 June, 2012

இளையராஜா இசையில் ஹலோ ஜெய்ஹிந்த் பாடல்கள்

இசைஞானி இளையராஜா இசையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட  மராட்டி மொழி படமான  ஹலோ ஜெய்ஹிந்த் படத்தின் பாடல்கள் ஏனோ வெளிவந்த மாதிரியே தெரியவில்லை. 3 பாடல்கள் நன்றாக உள்ளன. மற்ற பாடல்களும் வழக்கமான இளையராஜா ரகம். இனிமேல் இளையராஜா படம் புக்காகும் போதே பாடல்கள் வெளியாக வேண்டும் என்று கண்டிசனோடு தான் கையெழுத்திட வேண்டும் என நினைக்கிறேன்.





பாடல்கள் பார்க்க :

பாடல் 1



பாடல் 2



பாடல் 3



பாடல் 4



பாடல் 5



பாடல் 6



தீம் மியூசிக்





மும்பை குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு போலிஸ்காரரின் கதை. மிகப்பெரிய பலமாக இளையராஜாவின் பிண்ணனி இசை உள்ளது. 





இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசை அரசருக்கு பிறந்தநாள்  வாழ்த்துக்கள்.



மீண்டும் சந்திப்போம்.


21 January, 2012

இளையராஜாவின் புதிய படங்கள் மயிலு, பிரசாத்

இளையராஜாவின் ரசிகர்களுக்கு கொஞ்சம் லேட்டான பொங்கல் பரிசாக ஒரு வார இடைவெளியில் இரண்டு படங்களின் பாடல்கள் வெளியாகி உள்ளது. முதலில் கன்னட படமான பிரசாத்

உண்மையிலேயே காது கேட்காத, வாய் பேசாத சங்கல்ப் என்ற அழகான சிறுவன் மற்றும் நமது ஆக்சன் கிங் அர்ஜூன்,மாதுரி பட்டாச்சார்யா நடித்துள்ள இந்த படத்தை இளையராஜா,அர்ஜீன் என எல்லோரும் மன நிறைவை தந்த படம் என இசை வெளியீட்டு விழாவில்  பாராட்ட, தயாரிப்பாளர் மட்டும் இது ஆர்ட்பிலிம் மட்டும் இல்ல! , நல்ல கமர்சியலும் இருக்கு என்றார்.(காசு போட்டிருக்கார்ல!)





பாடல்கள்:

1) நானு நீனு                                -     மது பாலகிருஷ்ணன், ரீட்டா
2) ஓ, நன்ன கந்தா                     -     கார்த்திக்
3) ஓ, நன்ன கந்தா (BIT)           -     பேபி ஹரிப்பிரியா, டீட்டா
4) ஓ, நன்ன கந்தா (BIT)           -     கார்த்திக்
5) ஒன்று அரமனே                   -      இளையராஜா,அனிதா,ரீட்டா,சுர்முகி
6) We Are Ok                                 -      Sonu nigam chorus     (இசை :  மனோ மூர்த்தி)


மொத்தப்படத்தையும் தூக்கி நிறுத்துவது முதல் பாடல் நானு,நீனு தான். சூப்பராக இருக்கிறது. மூன்று தடவை இடம் பெறும் ஓ,நன்ன கந்தா பாடல் நன்றாக இருந்தாலும் காதல் ரோஜாவே படத்தில் இட்ம் பெற்ற 'மனம் போன போக்கில்' பாடலை நினைவுப்படுத்துகிறது. இளையராஜா மற்றும் பலர் பாடும் பாடல் - As Usual Raja. கடைசி பாடலை (We Are Ok) மனோ மூர்த்தி என்பவர் இசையமைத்திருக்கிறார்.(Nothing Special.).  Re-recording ல் நிச்சயம் பட்டைய கிளப்பியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கதையும், களமும் அமைந்து விட்டால் அங்கு  ராஜாவின்  ராஜாங்கம்  தான்.


அடுத்து மயிலு.






16 வயதினிலே வந்த சமயத்தில் அதிகம் பேசப்பட்ட கேரக்டர். இன்று வரை பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது. 16 வயதினிலே வந்த சூட்டோடு இரண்டாம் பாகம் மாதிரி மயிலு என்ற பெயரில் இளையராஜா இசையில் வந்திருந்தால் படம் சுமாராக இருந்திருந்தாலும் பாடல்களுக்காகவே சக்கை போடு போட்டிருக்கும். என்ன செய்ய கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகி விட்டது. காலமும், தமிழ் படங்களும் நிறைய மாறி விட்டது. இளையராஜா மட்டும் இன்னும் மாறவில்லை என மயிலு பாடல்கள் சொல்கிறது. பழைய பாடல்களை விரும்பி கேட்கும் என்னைப் போன்றோருக்கு இந்த படத்தின் பாடல்கள் ரொம்ப பிடித்து போய் விட்டாலும் எல்லோருக்கும் பிடிக்கும் என எதிர்பார்க்க முடியாது.

படத்தில் 6 பாடல்கள்:

1) யாத்தே                                        -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரனி
2) துக்கமென்ன                              -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, ரீட்டா
இரண்டு பாடல்களும் பழைய ராஜாவே தான். நன்றாக இருக்கிறது.
3) ஆத்தி சொக்க                             -            ரீட்டா
4) கல்யாணமாம் கல்யாணம்   -            ரீட்டா, சின்னப்பொன்னு,டிப்பு
வழக்கமான இளையராஜா பாடல்கள்.
5) என்ன குத்தம்                               -             இளையராஜா, தர்ஷினி
காலம்காலமாக கேட்ட இளையராஜாவின் சோகப்பாடல்.
6) நம்மளோட பாட்டு தாண்டா  -             கார்த்திக்,திப்பு,சைந்தவி கோரஸ்
பாடல் - இயக்குனர் ஜீவன். (எல்லா பாடல்களும் அவர் தான் எழுதியுள்ளார்) எங்க பாட்டு தான் நல்ல பாட்டு, மற்றவர்கள் பாட்டு எல்லாம் குப்பை என்ற ரீதியில் எழுதியுள்ளார். ஜீவன் போன்றோர் அடிக்கும் ஜால்ரா இளையராஜாவின் இசையை தான் பாதிக்கிறது என்பதை அவர் போன்றோர் ஏனோ உணருவதேயில்லை. இன்னும் பழைய வேகம், ஏனோ தானோ வரிகள் என்று இல்லாமல் கொஞ்சம் மெனக்கெட்டால் கூட நிறைய இசைப்புதையல் கிடைக்கும். செய்வாரா ராஜா?

1980 களின் இசை ரசிகர்களுக்கு பிரசாத், மயில் இரண்டும் சர்க்கரைப் பொங்கல் தான்.

மீண்டும் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...