Showing posts with label five. Show all posts
Showing posts with label five. Show all posts

05 August, 2013

சிக்கனமான கூட்டணி

இது  ஒரு எளிமையான சங்கிலி புதிர். ஐந்து சிறிய சங்கிலி துண்டுகள் உள்ளன. அதை மொத்தமாக ஒரே சங்கிலியாக இணைக்க வேண்டும். 





நிபந்தனைகள் இல்லாத புதிர் இருக்குமா?. சங்கிலியை ஒன்றுடன் ஒன்று இணைக்க கட் செய்து தானே இணைக்க வேண்டும். அதற்கான செலவு ஒரு இணைப்பை கட் செய்ய ஒரு ரூபாய், வெல்டிங் செய்து இணைக்க இரண்டு ரூபாய். ( எந்த ஊரில் என்று கேட்காதீர்கள், ஒரு வேளை சாப்பாடே ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது என்கிறார்கள் நம் தலைவர்கள்). கீழே உள்ள படத்தை பாருங்கள். அது போல் ஐந்து பிரிவாக உள்ள சங்கிலியை மேலே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரே சங்கிலியாக இணைக்க வேண்டும். அவ்வளவே!. கட் செய்து வெல்டிங் வைத்து இணைக்க குறைந்த பட்சம் மொத்தம் எவ்வளவு பணம் ஆகும் என்று சொல்லுங்கள்

.




Relax Corner




மீண்டும் சந்திப்போம்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...