Showing posts with label images. Show all posts
Showing posts with label images. Show all posts
23 September, 2014
24 September, 2012
FUNtastic படங்கள்
Gif Images ஒரு விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள் இவை.
Computer ல் ஒரு மனிதன் சிக்கி விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்
வளைந்து கொடுத்தால் வாழ்க்கைக்கு நல்லது..
டீஸல் விற்கிற விலையில் பின்ன எப்படி வண்டி ஓட்டுறது.
'சரக்கு' விமானம் போல
எறும்பு மொய்க்கிற மாதிரி இங்க ஒன்னும் இல்லையே!
சேர்ல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் திமிர்னு சொல்வாங்க, சேரே கால் மேல் கால் போட்டு இருந்தால்?
என்ன இது! சின்னப்பிள்ளைத்தனமா வேலை பார்க்கிற இடத்தில விளையாட்டு.
வாழைப்பழ விலையையும் ஏத்திட்டாங்களோ? இந்த திட்டு திட்டுதே!
டீ விற்கிறாங்களாம்!
யார் மேலே கோபமோ! ' R ' ஐ இந்த அடி அடிக்கிறாரு.
He can walk english, talk english
மீண்டும் சந்திப்போம்.
25 August, 2012
Catches win the Matches
கிரிக்கெட் விரும்பி பார்க்கும் அனைவரையும் 'அட' போட வைக்கும் விஷயம் ஒன்று உண்டு என்றால் அது கேட்ச் தான். டைவ் அடித்து பிடிக்கும் கேட்சை மறுபடியும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே விக்கெட் விழுந்த பிறகு வரும் விளம்பரங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருத்திருக்கிறேன். அப்படி அட போட வைக்கும் கேட்ச்களின் Gif Images சில. பைல் லோடு ஆக கொஞ்சம் லேட்டாகும்.
கிரிக்கெட் விளையாட்டில் இங்கிலாந்தின் கை ஓங்கி இருந்த கால கட்டத்தில் விளையாட்டு வீரர்கள் அவர்கள் போட்டிருந்த டிரஸ் கூட அழுக்காமல் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியா ஓரளவுக்கு பரவாயில்லை. தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் விளையாட வந்த பின் தான் பீல்டிங் தனி கவனம் பெற ஆரம்பித்தது. முக்கியமாக பீல்டிங் மன்னன் ஜாண்டி ரோட்ஸ்.
Brawo வின் ரன்னிங் கேட்ச்
Second Innings
பிரமாதமான கேட்ச் பிடிக்கும் யுவராஜ்சிங் மீண்டும் பல சாதனைகள் செய்ய வேண்டும்.கிரிக்கெட் விளையாட்டில் இங்கிலாந்தின் கை ஓங்கி இருந்த கால கட்டத்தில் விளையாட்டு வீரர்கள் அவர்கள் போட்டிருந்த டிரஸ் கூட அழுக்காமல் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியா ஓரளவுக்கு பரவாயில்லை. தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் விளையாட வந்த பின் தான் பீல்டிங் தனி கவனம் பெற ஆரம்பித்தது. முக்கியமாக பீல்டிங் மன்னன் ஜாண்டி ரோட்ஸ்.
Brawo வின் ரன்னிங் கேட்ச்
தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் போது ஜாண்டி ரோட்ஸ்க்கு மட்டும் 2 கேமராக்கள் தனியாக வைத்தார்கள். ரன் அடிக்கிறாரோ இல்லையோ, எதிரணியின் ரன்னில் குறைந்த பட்சம் 30,40 ரன்களை தடுத்து விடுவார். அவரின் சுறுசுறுப்பு மிகப்பெரிய பலம். பீல்டிங் செய்யும் போது பந்தை பிடித்தவுடன் எழும் அந்த வேகம் யாருக்கும் வராது.
உள்ளே வெளியே
Bichel பந்தை உள்ளே தூக்கி எறிந்து பவுண்டரி லைனுக்கு வெளியே போய் பின் உள்ளே வந்து பிடிக்கும் கேட்ச்.
இந்திய அணியைப் பொருத்த வரை பில்டிங்கில் ஆரம்பத்தில் அசாருதீன் மற்றும் ஜடேஜாவைச் சொல்லலாம். பிறகு ராபின்சிங். (பீல்டிங்கில் தனித்து பாரட்டப்பட்ட முதல் இந்தியர் என்றே சொல்லலாம்). யுவராஜ் சிங், கைப் வருகைக்குப் பிறகு ஓரளவுக்கு இப்பொழுது எல்லா புதிய வீரர்களும் நன்றாகவே பீல்டிங் செய்கிறார்கள்.
பெரிய ஆச்சரியம்
சின்ன நாடான பெர்முடாவின் பெரிய ஸ்பின்னர்(120 kg) Dwayne Leverock சூப்பர் டைவிங் கேட்ச் தான் இந்தியாவுடனான அன்றைய மேட்சின் ஸ்பெசல்
Third Umpire முறை முதன்முதலில் Test Matchல் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதலில் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டவர் சச்சின் தெண்டுல்கர். (எத்தனை முதல்)
Styne catch பிடிக்கும் இநத படத்தில் தான் எத்தனை விதமான ரியாக்சன். ரன்னர், பவுலர், பேட்ஸ்மேன் எல்லோரையும் விட அந்த அம்பயர் சூப்பர்..
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாவதற்கு 10 வழிகள் உள்ளன.
1) Caught
2) Bowled
3) Leg Before Wicket
4) Hit Wicket
5) Timed Out
6) Handling the ball
7) Obstructing the field
8) Hit the ball twice
9) Run Out
10) Stumped
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கீழே உள்ள வீடியோவை கவனித்து பார்த்தால் தெரியும். முதலில் செகண்ட் சிலிப்பில் உள்ளவர் பிடித்து பந்து அவரிடமிருந்து நழுவி கீப்பரிடம் சென்று பிறகு அவரும் விட்டு மறுபடி செகண்ட் சிலிப் வீரர் காலில் பட்டு (காலால் தூக்கி விட்டு) கேட்ச் பிடிக்கிறார்.
Labels:
animated,
best,
catch,
cricket,
gif,
images,
super,
இமேஜ்,
கிரிக்கெட்,
கேட்ச்,
சச்சின்,
தெண்டுல்கர்,
விளையாட்டு
25 January, 2012
சச்சினுக்கு மேலும் நெருக்கடி
சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் முன்பு ஒரு தடவை கொடுத்த பேட்டியில் 'நான் ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் முதல் தடவை களம் இறங்குவது போல் நினைத்துக்கொண்டு தான் விளையாடுவேன்' என்றார். அதனால் தானோ என்னவோ அவர் தனது 100 வது சதத்தையும் முதல் சதம் அடிப்பது போலவே பதட்டத்துடன் எதிர்கொள்கிறார். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக மனிதன் போராடிக்கொண்டிருக்கிறார். பார்ம் இல்லையென்றாலும் பரவாயில்லை. நல்ல பார்மிலும் இருக்கிறார். சமீப காலங்களில் நடந்த தொடர்களில் இந்திய அணியில் அதிக ரன் எடுத்தவர் அவர் தான். பிறகாலங்களில் சச்சின் சாதனைகள் எந்த அளவுக்கு பேசப்படுமோ, அந்த அளவுக்கு அவரின் பதட்டங்களும் மனோதத்துவ வல்லுனர்களால் அலசப்படும். சச்சினின் 100 வது சதத்தை எதிர்பார்த்து பொறுமை இழந்தவர்களின் காமெடி கலாட்டா கீழே.
அடுத்து பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி
2002 ம் ஆண்டில் சச்சின் மற்றும் கங்குலியை கடத்த திட்டமிட்டதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 6 பேர்களின் மேல் முறையீட்டில் அவர்களின் விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு 8 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே 9 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால் ஒருவர் தவிர மற்ற அனைவரும் விடுதலை செய்யப்படுள்ளனர். ( ஒருவர் மட்டும் தனனை நிரபராதி என அறிவிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளார்.) மேட்டர் என்னன்னா! சச்சினை கடத்த திட்டம் போட்டவரு வெளியே வந்துட்டாரு. சச்சின் 100 வது சதத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கிட்டே இருக்காருன்னு கோபப்பட்டு அவங்களை வெளியே விட்டுட்டாங்களான்னு கேட்கக்கூடாது. அது வேற நியூஸ், இது வேற நியூஸ். சச்சின் இதோ இப்ப செஞ்சுரி போட்டிருவாரு, பார்த்துக்கிட்டே இருங்க.
சச்சின் இன்னும் 100 தடவை 100 அடிக்கவில்லை என்பதால் 1000 பேர் 1000 சொல்வாங்க!., அதை எல்லாம் மனசுல வைச்சுக்காம விளையாட்டிற்கான முதல் பாரத ரத்னா விருது சச்சினுக்கு கொடுத்திருங்கப்பா!. (சச்சின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என நினைக்கிறேன்.) பின்னாடி பீல் பண்ணாதீங்க. வேற எந்த விளையாட்டிலும் உலகம் போற்றும் நபர் இந்தியாவில் இல்லை என்பதை மனசில வைச்சுக்கோங்க.
மீண்டும் சந்திப்போம்.
15 January, 2012
பொங்கல் வாழ்த்துக்கள்
முடிந்து போன போகி
இன்றைய பொங்கல் / தமிழ் புத்தாண்டு (!)
நாளைய மாட்டுப்பொங்கல் / திருவள்ளுவர் தினம்
நாளை மறுநாள் உழவர் திருநாள்
எல்லாத்துக்கும் சேர்த்து பொங்கலோ பொங்கல்.
இன்றைய பொங்கல் / தமிழ் புத்தாண்டு (!)
நாளைய மாட்டுப்பொங்கல் / திருவள்ளுவர் தினம்
நாளை மறுநாள் உழவர் திருநாள்
எல்லாத்துக்கும் சேர்த்து பொங்கலோ பொங்கல்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அப்புறம், Discovery channel தமிழ் டி.வி.ல பொங்கல் வாழ்த்துக்கள் அப்படின்னு ஒரு வீடியோ போட்டாங்க, பாட்டு சூப்பரா இருந்தது. பாருங்கள்.
மறுபடி, முதல் 6 வரிகளை படிச்சுங்கோங்க!
மீண்டும் சந்திப்போம்.
Subscribe to:
Posts (Atom)















































