Showing posts with label gif. Show all posts
Showing posts with label gif. Show all posts
23 September, 2014
24 September, 2012
FUNtastic படங்கள்
Gif Images ஒரு விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள் இவை.
Computer ல் ஒரு மனிதன் சிக்கி விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்
வளைந்து கொடுத்தால் வாழ்க்கைக்கு நல்லது..
டீஸல் விற்கிற விலையில் பின்ன எப்படி வண்டி ஓட்டுறது.
'சரக்கு' விமானம் போல
எறும்பு மொய்க்கிற மாதிரி இங்க ஒன்னும் இல்லையே!
சேர்ல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் திமிர்னு சொல்வாங்க, சேரே கால் மேல் கால் போட்டு இருந்தால்?
என்ன இது! சின்னப்பிள்ளைத்தனமா வேலை பார்க்கிற இடத்தில விளையாட்டு.
வாழைப்பழ விலையையும் ஏத்திட்டாங்களோ? இந்த திட்டு திட்டுதே!
டீ விற்கிறாங்களாம்!
யார் மேலே கோபமோ! ' R ' ஐ இந்த அடி அடிக்கிறாரு.
He can walk english, talk english
மீண்டும் சந்திப்போம்.
25 August, 2012
Catches win the Matches
கிரிக்கெட் விரும்பி பார்க்கும் அனைவரையும் 'அட' போட வைக்கும் விஷயம் ஒன்று உண்டு என்றால் அது கேட்ச் தான். டைவ் அடித்து பிடிக்கும் கேட்சை மறுபடியும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே விக்கெட் விழுந்த பிறகு வரும் விளம்பரங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருத்திருக்கிறேன். அப்படி அட போட வைக்கும் கேட்ச்களின் Gif Images சில. பைல் லோடு ஆக கொஞ்சம் லேட்டாகும்.
கிரிக்கெட் விளையாட்டில் இங்கிலாந்தின் கை ஓங்கி இருந்த கால கட்டத்தில் விளையாட்டு வீரர்கள் அவர்கள் போட்டிருந்த டிரஸ் கூட அழுக்காமல் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியா ஓரளவுக்கு பரவாயில்லை. தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் விளையாட வந்த பின் தான் பீல்டிங் தனி கவனம் பெற ஆரம்பித்தது. முக்கியமாக பீல்டிங் மன்னன் ஜாண்டி ரோட்ஸ்.
Brawo வின் ரன்னிங் கேட்ச்
Second Innings
பிரமாதமான கேட்ச் பிடிக்கும் யுவராஜ்சிங் மீண்டும் பல சாதனைகள் செய்ய வேண்டும்.கிரிக்கெட் விளையாட்டில் இங்கிலாந்தின் கை ஓங்கி இருந்த கால கட்டத்தில் விளையாட்டு வீரர்கள் அவர்கள் போட்டிருந்த டிரஸ் கூட அழுக்காமல் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியா ஓரளவுக்கு பரவாயில்லை. தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் விளையாட வந்த பின் தான் பீல்டிங் தனி கவனம் பெற ஆரம்பித்தது. முக்கியமாக பீல்டிங் மன்னன் ஜாண்டி ரோட்ஸ்.
Brawo வின் ரன்னிங் கேட்ச்
தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் போது ஜாண்டி ரோட்ஸ்க்கு மட்டும் 2 கேமராக்கள் தனியாக வைத்தார்கள். ரன் அடிக்கிறாரோ இல்லையோ, எதிரணியின் ரன்னில் குறைந்த பட்சம் 30,40 ரன்களை தடுத்து விடுவார். அவரின் சுறுசுறுப்பு மிகப்பெரிய பலம். பீல்டிங் செய்யும் போது பந்தை பிடித்தவுடன் எழும் அந்த வேகம் யாருக்கும் வராது.
உள்ளே வெளியே
Bichel பந்தை உள்ளே தூக்கி எறிந்து பவுண்டரி லைனுக்கு வெளியே போய் பின் உள்ளே வந்து பிடிக்கும் கேட்ச்.
இந்திய அணியைப் பொருத்த வரை பில்டிங்கில் ஆரம்பத்தில் அசாருதீன் மற்றும் ஜடேஜாவைச் சொல்லலாம். பிறகு ராபின்சிங். (பீல்டிங்கில் தனித்து பாரட்டப்பட்ட முதல் இந்தியர் என்றே சொல்லலாம்). யுவராஜ் சிங், கைப் வருகைக்குப் பிறகு ஓரளவுக்கு இப்பொழுது எல்லா புதிய வீரர்களும் நன்றாகவே பீல்டிங் செய்கிறார்கள்.
பெரிய ஆச்சரியம்
சின்ன நாடான பெர்முடாவின் பெரிய ஸ்பின்னர்(120 kg) Dwayne Leverock சூப்பர் டைவிங் கேட்ச் தான் இந்தியாவுடனான அன்றைய மேட்சின் ஸ்பெசல்
Third Umpire முறை முதன்முதலில் Test Matchல் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதலில் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டவர் சச்சின் தெண்டுல்கர். (எத்தனை முதல்)
Styne catch பிடிக்கும் இநத படத்தில் தான் எத்தனை விதமான ரியாக்சன். ரன்னர், பவுலர், பேட்ஸ்மேன் எல்லோரையும் விட அந்த அம்பயர் சூப்பர்..
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாவதற்கு 10 வழிகள் உள்ளன.
1) Caught
2) Bowled
3) Leg Before Wicket
4) Hit Wicket
5) Timed Out
6) Handling the ball
7) Obstructing the field
8) Hit the ball twice
9) Run Out
10) Stumped
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கீழே உள்ள வீடியோவை கவனித்து பார்த்தால் தெரியும். முதலில் செகண்ட் சிலிப்பில் உள்ளவர் பிடித்து பந்து அவரிடமிருந்து நழுவி கீப்பரிடம் சென்று பிறகு அவரும் விட்டு மறுபடி செகண்ட் சிலிப் வீரர் காலில் பட்டு (காலால் தூக்கி விட்டு) கேட்ச் பிடிக்கிறார்.
Labels:
animated,
best,
catch,
cricket,
gif,
images,
super,
இமேஜ்,
கிரிக்கெட்,
கேட்ச்,
சச்சின்,
தெண்டுல்கர்,
விளையாட்டு
12 December, 2011
ஸ்டைல் மன்னனின் ஸ்பெசல் படங்கள்
ரஜினி - மூன்று எழுத்து மந்திரம். இது வருடக்கணக்கில் கணக்கில்லாத ரசிகர்களை கட்டி வைத்திருக்கிறது. சிறு வயதில் ஆரம்பித்து என் ரசனைக்கு பிடித்தமான நபர்களாக இன்று வரை மாறாமல் இருந்து வருபவர்கள் ரஜினியும், இளையராஜாவும் தான். வேகம், ஸ்டைல் இது தான் ஆரம்பத்தில் ரஜினியிடம் என்னை மிகவும் ஈர்த்த விஷயங்கள். என்னை கவர்ந்த சில ரஜினி படங்களின் போட்டோ ரஜினி பிறந்தநாள் ஸ்பெசலாக. (சில படங்கள் லோடாக கொஞ்சம் லேட்டாகும், ரஜினியின் வேகத்துக்கு இணையம் ஈடு கொடுக்க முடியாதல்லவா !! )
சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மீண்டும் சந்திப்போம்
Labels:
birthday wishes,
gif,
photo,
rajni,
style,
பிறந்தநாள்,
போட்டோ,
ரஜினி
Subscribe to:
Posts (Atom)
















































