Showing posts with label review. Show all posts
Showing posts with label review. Show all posts

01 September, 2012

நீ (இளையராஜா) தானே என் பொன்வசந்தம்

 இளையராஜா தலைமுறைகளை தாண்டி நின்று கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மாற்றம் தான். அன்னக்கிளி, பத்ரகாளியில் இருந்த இளையராஜா குரு, பிரியா  படங்களில் இல்லை. அக்னி நட்சத்திரம், காதல் ரோஜாவே படங்களில் வித்தியாசம் காண்பித்த இளையராஜா ஏனோ அதன் பிறகு நீண்ட காலமாக ஓரிடத்தில் நின்று விட்டார். 




இளையராஜாவின் தீவிர ரசிகர்களான மிகப்பெரிய கூட்டம் அவரின் வழக்கமான இசையை ரசித்துக் கொண்டிருந்தாலும், மனதளவில் சின்ன ஏக்கம் இருந்தது (எனக்கு). அதை உடைத்தெறிந்திருக்கிறார் இளையராஜா நீ தானே என் பொன்வசந்தம் படத்தில். புது வித கம்போசிங்கில் தனதே தனதான ஸ்டைலில் ராஜா ராஜா தான் என்பதை நிருபித்திருக்கிறார். 

நீ தானே என் பொன்வசந்தம்.
புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் இளையராஜா.





ஏற்கனவே Youtubeல் ஹிட் அடித்திருந்த சாய்ந்து,சாய்ந்து, என்னோடு வா வா சேர்த்து மொத்தம் 8 பாடல்கள். 
என்னோடு வா வா பாடல்கள் Trailorல் கேட்டவுடன் பிடித்திருந்தாலும் என் Favourite song யுவனின் மற்றொரு பாடலான 'பெண்கள் என்றால்' தான். 




 RAJA ROCKS

கதாநாயகியை தேடிப்போகும் கதாநாயகன் பாடுவதாக வரும்  கார்த்திக்கின் குரலில் 'காற்றைக்கொஞ்சம்' ,மற்றும் 'முதல்முறை'  , 'சற்று முன்பு'  என பாடல்களில் வெரைட்டி காட்டி கலக்கியிருக்கிறார்  ராஜா. இளையராஜா பாடியிருக்கும் 'வானம் மெல்ல' பாடலும் சுகம். 'பிடிக்கல மாமு' பாடலில் (நல்ல வேளை S.N.சுரேந்தர் பாடவில்லை) ராஜா காட்டியிருக்கும் வேகம் மற்றும் ஒரு ஆச்சர்யம்.

திருப்தியாக கேட்டு ரசிக்க ஒரு முழு ஆல்பம். 




இளையராஜா மேடையில் பேசியது 
"எட்டு பாடல்களையும் ரெக்கார்ட் செய்தபிறகுதான், என்னால் அந்தமாதிரி செய்யவரும் என்பது எனக்கே தெரியவந்தது. அதுபோல . நிறைய செய்யவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது."

இது போன்ற பாடல்களை கேட்க வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை நிறைய இருக்கிறது. நிறைவேற்றுங்கள் ராஜா

டிஸ்கி
August 20ல் நடந்த இளையராஜாவின் "Be with Me - Maestro"  Programme பற்றி இசைஞானி பக்தன் அருமையாக பதிவிட்டுள்ளார்.  படித்துப்பாருங்கள்


மீண்டும் சந்திப்போம்.



18 March, 2011

அழகர்சாமியின் குதிரை இசை

                              அழகர்சாமியின் குதிரை இசை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
 ASK170311_177
தற்போது எல்லாம் இளையராஜாவின் இசையில் வரும் படங்களில் இளையராஜாவை தவிர மற்ற யார் பேரும் தெரிவதில்லை.
எந்த கணக்கில் படம் தேர்ந்தெடுக்கிறார் என்றே
தெரியவில்லை.  இந்த படத்தை பொருத்தவரை கவுதம்மேனன் தயாரிப்பில்,சுசீந்திரன் இயக்கத்தில் சிறு எதிர்பார்ப்புடன் வந்துள்ளது.
படத்தில் மூண்றே பாடல்கள். மீதியை Re-recording ல் பார்த்து கொள்ளலாம் என்று நினனத்து விட்டார் போலும்.  பாடல்கள் திருப்தியாக உள்ளது.

முதல் பாடல்
J.ஃப்ரான்சிஸ் கிருபா வரிகளில் இளையராஜா பாடியுள்ள ‘ குதிக்கிற குதிக்கிற’  பாடல்
Azhagar Samiyin Kuthirai Songs


அப்புக்குட்டி Hero  என்பதால் குரலிலும் நிறையவே மெனக்கட்டிருக்கிறார். கேட்க இனிமையாக உள்ளது.

இரண்டாவது பாடல்
சினேகன் வரிகளில் தஞ்சை செல்வி,சினேகன் மற்றும் ஒரு கும்பலே பாடியுள்ள பாடல்.
ASK170311_164
ஏற்கனவே கேட்ட பாடல் போலவே ஆரம்பிக்கும் இந்த பாடல் பல தாளங்களில் பயணித்து செல்கிறது. ஈசன் புகழ் தஞ்சை செல்வியின்
குரலில் உள்ள மெல்லிய சோகம் ‘ஜில்லா விட்டு’  பாடலுக்கு பலம் சேர்த்தது. ஆனால் இந்த பாடலுக்கு வித்தியாசத்தை மட்டுமே கொடுத்துள்ளது.

மூண்றாவது பாடல்
யுகபாரதியின் வரிகளில் கார்த்திக்,ஸ்ரேயா கோஸல் பாடியுள்ள பாடல்.
Azhagarsamiyin-Kuthirai-Tamil-Movie-Stills-10
இந்த படத்தில் மட்டும் அல்ல சமீபத்தில் வந்த பாடல்களில் மிக இனிமையான பாடல். இவ்வளவு நல்ல Melody யை கேட்டு ரொம்பவே நாட்களாகி விட்டது.  ஸ்ரேயா கோஸல் குரலின் உள்ள இனிமை பாடலுக்கு பலம்.  கார்த்திக் எந்த பாடலையும் கெடுக்காமல் பாடினாலும் மெருகேற்றுவதில்லை.
பல்லவியில் வரும் ”தீராததே ஆசை”  வரிகளை ஹரிஹரன் குரலில் கேட்டால் நிச்சயம் உருக்கியிருக்கும். மற்றபடி குறையென்றால்
பூ, காத்து, மான், மயில் என மெட்டை நிரப்பினால் போதும் என்ற அளவில் எழுதப்பட்ட பாடல் வரிகள்.

மொத்தத்தில் இனிமையான பாடல்கள்.

இனிமேலாவது நல்ல கதைகளம், இயக்குநர் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து இசை அமைத்தால் சரி.

தொடரட்டும் இசை ராஜாங்கம்.

மீண்டும் சந்திப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...